பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 ஈதர்‌

142 ஈதர் ஊடகமாகப் மிதக்கும். சாதாரண வெப்பநிலையில் இவற்றின் மந்தத் தன்மையால் இவை வினை பெரும்பாலும் செயல்படுகின்றன. கரிமத்தொகுப்பு முறைகளில் பெரிதும் பயன்படும் வினைப்பொருளான வினைப்பொருள்கள் ஈதர் ஊடகத் கிரிக்னார்டு உலோகத்தைக் திலோ ஈதரில் கரைந்த அல்க்கைல் கொண்டோ தயாரிக்கப்படுகின்றன. வேதிவினைகள். அடர் கனிம அமிலங்களில் ஈதர்கள் கரைந்து ஆக்சோனியம் உப்புகளைக் கொடுக்கின்றன. அதாவது ஈதர்கள் பிரான்ஸ்டெட் லவ்ரி காரங்களாகச் செயல்படுகின்றன. (C,H,), O + H,SO, = [(C,H,),OH} + HSO,~ ஈதர்கள், குளோரின் அல்லது புரோமினுடன் அவற் றின் ஹைட்ரோகார்பன் களைவிட எளிதில் உடனடி யாக வினைபுரிகின்றன. CI C,H,OC,H CH CIOCH, Cl C,H, CIOCHCICH, 4 1.1, டைகுளோரோடைஎத்தில் ஈதர் ஒளியின் முன்னிலையில் பெர்குளோரோடை எத்தில் ஈதர் உண்டாகிறது. (C,H,),O Cl, hr (CCI),O நீர்த்த சல்ஃப்யூரிக் அமிலத்துடன் அழுத்தத்தில் வினைபுரிந்து ஈதர்கள் ஒத்த ஆல்கஹால்களைத் தரு கின்றன. H,SO, R,O + HO 2 ROH காற்ற காற்றில் திறந்து வைக்கும்போது ஈதர்கள் றிலுள்ள ஆக்சிஜனுடன் வினைப்பட்டுப் பெராக் சைடுகளை உண்டாக்குகின்றன. எத்தில் ஈதர். இது பொதுவாக ஈதர் என்றும், சல்ஃப்யூரிக் ஈதர் என்றும் அழைக்கப்படுகிறது. ஆய்வகத்திலும், தொழிலகத்திலும் தொடர் எஸ்ட்ட ராக்கல் முறையில் இதனைத் தயாரிக்கலாம். இம் முறையில் எத்தனால் அடர் சல்ஃப்யூரிக் அமிலத் துடன் சேர்த்து வெப்பப்படுத்தப்படுகிறது. தொழில் கத்தில் எத்திலீனையும் சல்ஃப்யூரிக் அமிலத்தையும் பயன்படுத்தி எத்தனால் தயாரிக்கும்போது இது துணைப் பொருளாகக் கிடைக்கிறது. எத்தனால் ஆவியை, அழுத்தத்தில் சூடாக்கப்பட்ட அலுமினா பாஸ்ஃபேட்டின் அல்லது அலுமினியம் செலுத்தியும் ஈதரைத் தயாரிக்கலாம். இது நிறமற்ற நீர்மமாகும். இதன் கொதிநிலை 34.5°C; நீரில் மிகக் குறைவாகவும் ஆல்கஹாலில் முழுதுமாகவும் கரையும். இது எளிதில் தீப்பற்றிக் கொள்ளக் கூடியது. காற்றுடன் சேர்ந்து வெடிக்கும் கலவைகளை உண்டாக்குகிறது: இது அறுவை மருத் துவத்தின் போது மயக்க மருந்தாகவும் பயன்படு கிறது. காற்றில் அல்லது சூரிய ஒளியின் முன்னிலை யில் இது ஈதர்பெராக்சைடு (CH,CH(OOH)OC,H,} என்ற எண்ணெய் போன்ற எரிச்சலூட்டக்கூடிய நீர்மத்தைக் கொடுக்கிறது; வெடிக்கும் தன்மை உடையது. மெத்தில் ஈதர். இது டைமெத்தில் ஈதர் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு வளிமமாகும். இதன் கொதிநிலை - 23.6°C. இது குளிர்விப்பானாகப் பயன்படுகிறது. மெத்தனால் ஆவியை 300-400°C வெப்பநிலையில் பதினைந்து வளிமண்டல வினை அழுத்தத்தில் அலுமினியம் ஃபாஸ்ஃபேட் யூக்கியின் மேல் செலுத்தி செலுத்தி மெத்தில் ஈதரைத் தயாரிக்கலாம். வளைய ஈதர்கள். தொழிலகங்களில் வளைய ஈதர் கள் பெரிதும் பயன்படுகின்றன. இவற்றில் முதன்மை யானது எத்திலீன் ஆக்சைடு அல்லது ஆக்சிரேன் ஆகும். தொழில் துறையில் எத்திலீனைக் காற்று டன் கலந்து வெள்ளி வினையூக்கியின் மேல் செலுத்தி இது பெறப்படுகிறது. இது எத்திலீன் கிளைகால் தயாரிக்கப் பயன்படுகிறது. பிளாஸ்டிக், பிளாஸ்டிக் ஆக்கிகள் (plasticizers), ஒருவிதச் செயற்கை ரப்பர், செயற்கைத் துணிவகைத் தயாரிப்புகளில் பயன்படு கின்றது. மேலும் வளிம நுண்ணுயிர்க் கொல்லி யாகவும் செயலாற்றுகின்றது. எத்திலீன் ஆக்சைடை இருபடியாக்கலுக்குட் படுத்தினால் (dimerisation) டையாக்சேன் அல்லது 1, 4 - டையாக்சேன் கிடைக்கும். இது குறைந்த மின்கடத்தா மாறிலியைக் கொண்ட பொருள்களில் வேறுபட்டதாக விளங்குகிறது. ஏனெனில் இது நீரில் அனைத்து விகிதத்திலும் கரைகிறது. கொழுப்பு, ஆக்சிரேன் 1.4 டையாக்சேன் ஃபியூரான் டெட்ராஹைட்ரோஃபியூரான் மேல்