பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 ஈர்கூறமைவு

158 ஈர்கூறமைவு வாகக் கரையக்கூடியது. சோடியம் ஹைட்ராக் சைடுடன் சேர்த்து இதனை வெப்பப்படுத்தும்போது ஆரஞ்சு நிறமுள்ள குரோம் சிவப்பு உண்டாகிறது. இது சிவப்பு நிறமியாகப் பயன்படுகிறது. ஈயசல்ஃபேட். இது இயற்கையில் நீரில் கரையாத ஆங்கில சைட் கனிமமாகக் கிடைக்கிறது. ஈய உப்புக் கரைசலுடன் நீர்த்த சல்ஃப்யூரிக் அமிலத்தைச் சேர்த் தால் ஈய சல்ஃபேட் உண்டாகிறது. ஈய அசெட்டேட் மிகவும் குறைவாகப் பிரிகையடைவதே இது அம்மோனியம் அசெட்டேட் கரைசலில் எளிதில் கரை வதற்குக் காரணமாகும். எத்தில் குளோரைடுடன் வினைப்படுத்தி கலவையை டெட்ரானத்தில்லெட் சோடிய ஈய உலோகக் டெட்ரா எத்தில் ஈயம் (tetraethyl lead } தயாரிக்கப் படுகிறது. Pb + 4 C,H,Cl + 4 Na → Pb (C,H,), + 4 NaCl இது உந்து வண்டிகளில் பெட்ரோலுடன் சேர்ந்து அதிர்ச்சி குறைப்பியாகப் (antiknocking agent) பயன்படுகிறது. பயன்கள். துப்பாக்கிக் குண்டுகள், கழிவுநீர்க் குழாய்கள், பற்பசை போன்றவற்றை அடைக்கும் குழாய்கள் முதலியவற்றைத் தயாரிக்க ஈயம் பயன் படுகிறது. ஈயம் அறைமுறையில் சல்ஃப்யூரிக் அமிலம் தயாரிக்கப் பயன்படுகிறது. சேமிப்பு மின்கலன் களிலும் இது பயன்படுகிறது. ஈயச் செந்தூரம், லித் தார்ஜ், குரோம் மஞ்சள், குரோம் சிவப்பு, ஈய வெள்ளை போன்ற நிறமிகள் தயாரிப்பிலும் பயன் படுகிறது. இதன் உலோகக் கலவைகளான அச்சு உலோகமும் (Pb + Sb + Sn), பற்றவைக்கும் பொரு ளும் (50% Pb + 50% Sn) முறையே அச்சுகள், பற்றாசு தயாரிப்பு இவற்றில் பயன்படுகின்றன. இவ் வுலோகம் காமா கதிர்களைத் தடுக்க உதவுவதால் அணு உலைகளில் தீங்கு விளைவிக்கும் கதிர் களிலிருந்து காக்கப் பயன்படுகிறது. பகுப்புமுறையில் கண்டறிதல். ஈயக் கரைசலுடன் நீர்த்த HC) ஐச் சேர்த்தால் PbCl, வீழ்படிவாகிறது. அமிலம் கலந்த இதன் கரைசலில் H,S வளிமத்தைச் செலுத்தினால் PbS கருமைநிற வீழ்படிவாகப் படி கிறது. ஈர்கூறமைவு -த.தெய்வீகன் சமச்சீரற்ற நிலையிலிருக்கும் பல சமச்சீருள்ள நிலைமைகளை விளக்க வில்லார்டு கிப்ஸ் என்பாரால் நிலைமை விதி உருவாக்கப்பட்டது. இதனை F + P = C+2 எனக் குறிப்பிடலாம். இதில் F என்பது கட்டின்மை எண்ணையும்(degrees of freedom), P நிலைமையையும் (phase), c கூறு எண்ணையும் (number of components) குறிப்பிடுகின்றன. சமநிலையில் இருக்கும் ஓர் அமைவின் கூறு எண் என்பது வேறொன்றின் தொடர்பின்றித் தானாக மாறக்கூடியது; மேலும் இது அமைவின் இயைபை நேரடியாக அல்லது சமன்பாட்டினால் தெளிவாக விளக்கத் தேவையான கூறுகளின் மிகக்குறைந்த எண்ணிக்கையும் ஆகும். இவ்வெண்ணிக்கைக்கேற்ப அமைவு (system) வகைப்படுத்தப்படுகின்றது. சான் றாக நீர், நீராவி, பனிக்கட்டி ஆகியவை சமநிலையில் இருக்கும்போது ஒவ்வொன்றும் தனித்தனி நிலைமையாக விளங்குகிறது. ஆனால் இம் மூன்று நிலைமைகளையும் H,O என்ற ஒரு கூறு கொண்டே விளக்கிவிட முடியும். எனவே இல்லமைவின் கூறு எண் ஒன்று. இதேபோல் கால்சியம் கார்பனேட் என்ற சேர்மம் கால்சியம் ஆக்சைடு, கார்பன் டை ஆக்சைடு ஆகியவற்றுடன் சமநிலையில் இருக்கிறது. Caco, (தி) — CaO (தி) + CO, (வ) = திண்மம்; வ= வளிமம். இதில் மூன்று நிலைமைகள் உள்ளன. அவை, திண்மக் கால்சியம் கார்பனேட், திண்மக் கால்சியம் ஆ ஆக்சைடு, வளிமக்கார்பன் டைஆக்சைடு என்பன. இவற்றில் ஒவ்வொரு நிலைமையின் இயைபையும் ஏதாவது இரு கூறுகளைக் கொண்டே விளக்கி விட முடியும். சான்றாக CaO. CO, ஆகிய கூறுகளைக் கொண்டு மூன்று நிலைமைகளையும் பின்வருமாறு விளக்கலாம்: கால்சியம் கார்பனேட் என்பது CaO + CO, என்பதன் சுருக்கமாகும். எனவே, கால்சியம் கார்பனேட் நிலையின் இயைபை x CaO + x CO, என்றும் கால்சியம் ஆக்சைடு நிலைமையின் இயைபை yCa0 + 0CO, என்றும், கார்பன் டை ஆக்சைடு நிலைமையின் இயைபை zCO₁ +oca என்றும் விளக்கலாம். எனவே இவ்வமைவின் கூறு எண் இரண்டு. இவ்வாறு இரு கூறு எண்களைப் பெற்ற அமைவு ஈர் கூறமைவு ( two component system) எனக் குறிப்பிடப்படுகிறது. ஈர் கூறமைப்புக்களைத் திண்ம - வளிம அமைவு. திண்ம - நீர்ம அமைவு, நீர்ம - நீர்ம அமைவு என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். திண்ம - வளிம அமைவு. படிக நீரைக் கொண்ட உப்புகளின் பிரிகை இவ்வகையைச் சாரும். காப்பர் சல்ஃபேட் படிக அமைவில் காப்பர் சல்ஃபேட்டும், நீரும் இரு கூறுகளாக உள்ளன. CuSO,5H,O இலிருந்து நீரை நீக்க, பின்வரும் சமநிலைகள் படிப் படியாக உருவாகின்றன.