பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரல்‌ சத்து 203

லிருந்தும் சிரைகள்மூலம் இரத்தம் ஈரலைச் சேர்வது ஈரல்-குடல் சுற்றோட்டம் எனப்படும். இவ்வுறுப்பு களிலிருந்து ஈரலுக்கு வாயிற் சிரை மூலம் இரத்தம் எடுத்துச் செல்லப்படுகிறது. ஈரலில் இச்சிரை தமனியை ஒத்த தந்துகியைப் போன்ற வடிவமுடைய சைனுசாய்டு என்னும் இரத்தக் குழாய்களில் முடிவ டைகிறது. இங்கிருந்து ஈரல் சிரை வழியே இரத்தம், கீழ்ப்பெருஞ்சிரைக்கு அனுப்பப்படுகிறது. இவ்வாறு ஈரல் - குடல் சுற்றோட்டத்தில் இரத்தம் ஈரலில் உள்ள குடாக்கள் (Sinus) மூலமும் குடல், கணையம். மண்ணீரலில் உள்ள தந்துகிகள் மூலமும் ஆகிய இருவகை நுண் இரத்தக்குழாய்கள் வழியே செல் கிறது. குழந்தைப்பருவத்தில் இச்சிரையில் வால்வு கள் உண்டாயிருந்தாலும் முதியோரிடம் வால்வு கள் காணப்படுவதில்லை. போர்ட்டல் சிரை, குறிப்பாக மண்ணீரல் மேல் குடல் தாங்கிச் சிரை இணைவதால் உண்டாகிறது. எட்டு சென்ட்டி மீட்டர் நீளமுள்ள இப்போர்ட்டல் சிரையில் வல இடஇரைப்பைச் சிரைகள் கொப்பூழைச் சுற்றியுள்ள சிரைகள் பித்தப்பையிலிருந்து வரும் சிரை ஆகியவையும் இரத்தத்தைக் கொண்டு வரு கின்றன. இச்சுற்றோட்டத்தில் தடை உண்டாக வயிற்றில் நீர் சேர்ந்து வயிறு வீங்கிக் காணப்படுவதுடன் உணவுக்குழல், குதம், கொப்பூழைச் சுற்றியுள்ள சிரைகள் ஆகியவை வீங்கிக் காணப்படும். ஈரல் குடல் சுற்றோட்டத் தடையினால் போர்ட்டல் சிரையில் அழுத்தம் கூடுகிறது. இத்தடை ஈரல் நோய்களாகிய புதுவளர் கட்டி (cirrhosis) புற்றுக்கட்டி, ஈரல் நுழை வாயிலில் உள்ள நிணநீர்க்கணுவீர்ப்பினால் அழுத்தப் படுவதால் உண்டாகிறது. மாறாக ஈரலுக்கு வெளியே இதய வால்வு நோயில் ஈரல் சிரையில் அழுத்தம் கூடுவதாலும் மண்ணீரல், போர்ட்டல் சிரையில் உட்படிம உறைதல் உண்டாவதாலும், போர்ட்டல் சிரையில் அழுத்தம் கூடலாம். இக்காரணங்களால் போர்ட்டல் சிரையில் சுற்றோட்டத் தடை உண்டாகி, போர்ட்டல் சிரையில் உள்ள இரத்தம் பொது இரத்த ஓட்டத்துடன் கலக்க, பல்வேறு புதிய பாதை களை உண்டாக்குகிறது. சான்றாக, போர்ட்டல் சிரையின் உறுப்பாகிய இட இரைப்பைச் சிரை, உணவுக்குழலின் பொது இரத்த ஓட்டத்தின் உறுப் பாகிய துணை ஹெமி அசைகாஸ் (accessory hemi- azygos) சிரை யுடன் மாற்றுப் பாதையை உண்டாக்கு கிறது. இதுவே இந்நோயின் நாள்பட்ட இரத்த வாந்தியை உண்டாக்கக் காரணமாகிறது. குதக் குடலை அடுத்து, மேல் குதக்குடல் சிரை கீழ்க்குடல் சிரையுடன் (பொது இரத்த ஓட்டம்) இணைகிறது: கொப்பூழைச் சுற்றி உண்டாகும் காபுட்மெடுசே (caput medusae) வழியாகவும் ஈரலின் மேற்புறத்தி லும், அரிதாக டக்டஸ் வீனோசஸ் (ductus venosus) ஈரல் சத்து 203 அழியா நிலையில் போர்ட்டல் சிரையின் இடக் கிளை நேரடியாகக் கீழ்ப்பெருஞ்சிரையில் இணை கிறது. அறுவை மருத்துவமாக இவ்விணைப்பை உண்டாக்குவதால் போர்ட்டல் சிரையில் அழுத்தத் தைக் குறைக்கலாம். ஈரல் சத்து மா. பிரடெரிக் ஜோசப் முதன் முதலாக ஈரல் சத்து லெஸ்மின் ஸ்மித் என்னும் ஆங்கிலேயரால் கல்லீரலிவ் இருந்து தயாரிக்கப்பட்டது. ஸ்டெட்ரெப்டோமைஸிஸ் கிரே சியஸ் எனப்படும் ஒரு வகைக் காளான்களிலிருந்து இது செயற்கையாகத் தயாரிக்கப்படுகிறது. இது உடலின் இரத்த அணுக்களை உருவாக்குவதற்கு வேண்டிய பொருள்களை அளிப்பதால் மிகவும் இன்றியமையாததாகக் கருதப்படுகின்றது. இதில் குறிப்பாகச் சையனோ கோபாலமைன், ஃபோலிக் அமிலம் ஆகிய வைட்டமின்கள் உள்ளன. 12 12 சையனோ கோபாலமைன். இது B வகை வைட்டமின்களில் ஒன்றாகும். இதற்கு வைட்டமின் Big என்றும் பெயர்.சி சிறு லில் உள்ள நுண் குட ணுயிர்க் கிருமிகள் கோபாலமைன் எனப்படும் பொருளைத் தயாரிக்கின்றன. இது சையனோ கோபாலமைனாக மாற்றப்பட்டு ரத்தத்தில் கலக் கின்றது. இந்த கோபாலமைன் B1, உட்காரணியுடன் (intrinsic factor) சேர்ந்தால்தான் இரத்தத்தில் கலக்க முடியும். உட்காரணி இரைப்பைச் ச சுரப்பில் கூடுதலாக உள்ளது. இரைப்பை நீக்க அறுவை மருத்துவத்திற்குப் பின்னாலோ, காரணமற்ற வயிற் றுப் போக்கினாவோ இந்த உட்காரணி போதிய அளவிற்குக் கிடைப்பதில்லை. எனவே இந்நோயாளி கள் பெரினியஸ் சோகை நோயால் பாதிக்கப்பட லாம். இதனைத் தடுக்கவும், நரம்புத் தளர்ச்சி ஏற்படாமல் காக்கவும் ஐம்பது மைக்ரோகிராம் வைட்டமின் B1, ஐ ஊசி வழியாகக் கொடுக்கலாம். மிகவும் கேடுற்ற நிலையில் உள்ள நோயாளிகளுக்கு வாரத்திற்கு இருமுறை ஹைடிராக்சிகோபாலமைன் கொடுக்கலாம். ஃபோலிக் அமிலம். பொதுவாக இவ்வைட்டமின் குறைவு கருவுற்றிருக்கும் காலத்திலோ, வலிப்பு நோய் மருந்துகளைச் சாப்பிடும் காரணத்தாலோ ஏற்படலாம். பெரிய சிவப்பணுச் சோகை நோயால் இவர்கள் பாதிக்கப்படுவர். நாள்தோறும் பத்து முதல் முப்பது மில்லிகிராம் போலிக் அமிலம் கொடுப்பதன் மூலம் இந்நோய் வராமல் தடுக்கலாம், ஈரல் சத்தை வாய் வழியாக நீர்மமாகவோ,