பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 ஈரல்‌ சிரை

204 ஈரல் சிரை மாத்திரைகளாகவோ கொடுப்பதைவிட ஊசி வழிக் கொடுப்பது மிகவும் நல்லது. ஈரல் சிரை ஈரலிலிருந்து இது எஸ்.விசுவநாதன் கீழ்ப்பெருஞ்சிரைக்கு வளை இரத்தத்தை எடுத்துச் செல்கின்றது. ஈரல் களுள் தொடங்கும் உள்வளைச் சிரைகள் (intralobular veins) போர்டல் சிரைகள் முடியும் குடாக்களிலிருந்து இரத்தத்தை இணை வளைச் சிரைகள் வழியே ஈரல் சிரைக்குக் கொண்டு செல்லுகின்றன. நான்கு முதல் ஐந்து வரை காணப்படும் ஈரல் சிரைகளின் மேற் பகுதியில் உள்ள வல இட நடுச்சிரை என்னும் மூன்று சிரைகளை நோக்கி, கீழ்ப் பகுதியில் இருந்து வரும் சிரைகள் எண்ணிக்கை மாறுபாட்டுடன் சிறியவையாகவும் உள்ளன. இவை கீழ்ப்பெருஞ் சிரையுடன் ஈரலின் பின் பகுதியில் இணைகின்றன. வால்வுகள் இவற்றில் காணப்படுவதில்லை. நுண் ணோக்கியில் ஈரலைக் காணும்போது ஆரல் சிரைகள் வட்டமாகக் காணப்படும். மாறாகப் போர்ட்டல் சிரை உருக்குவைந்து வளைந்து ஈரல் தமனி, பித்த நாளம் ஆகியவற்றுடன் காணப்படுவ தால் இதை எளிதில் வேறுபடுத்தலாம். ஈரல் சிரை களின் கிளைகள் ஈரல் முழுதும் பரவிக் காணப் படுவதுடன் ஒன்றுடன் ஒன்று இணைந்தும் காணப் படும். போர்ட்டல் சிரை குடலில் முடிவதுடன் ஒன் றோடொன்று இணைவதில்லை. பட்சாரி கூட்டியம். ஈரல் சிரைகளில் ஏற்படும் தடை, இச்சிரையினுள் உண்டாகும் உட்புறைப் படிம நோயாலும் ஈரல் புற்றுக்கட்டியாலும் மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள செனிகியோ, குரோடாலேரியா போன்ற தாவரத்தின் இலைகளைப் பயன்படுத்தித் தேநீர் தயாரித்துக் குடிப்பதாலும் உண்டாகின்றது. கூர்த்த அடைப்பில் மரணமும், நாட்பட்ட அடைப் பில் போர்ட்டல் சிரை அழுத்தமும் உண்டாகும். மா. பிரடெரிக் ஜோசப் ஈரல் சிறுநீரகக் கூட்டியம் ஈரல் வழுவல் ஏற்பட்ட ஏற்பட்ட நோயாளிகளிடம் சிறு நீரகங்கள் அழற்சியடைவதாலும், சிறுநீரகங்களில் உள்ள நுண்குழல்களுக்குத் தேவையான இரத்தம் கிடைக்காமையாலும் சிறுநீரக வழுவல் ஏற்படும். பல நோயாளிகளிடம் இது திடீரென்றும் ஏற்பட லாம். இரத்தக் கன அளவின் குறைவாலோ, உடல் அறைக்குள் நீர்மங்கள் செல்வதாலோ, வெளியேற்றப் படும் சிறுநீரின் அளவு குறைகிறது. ஆனால் இந் நோயாளிகளின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருப்ப தில்லை. இந்தச் சிறுநீரகங்களை மாற்றீடு செய்ய வும் பயன்படுத்தலாம். ஈரல் சிறுநீரகக் கூட்டிய முள்ள சில நோயாளிகளுக்கு ஈரல் மாற்றீடு செய்யும் போது சிறுநீரகம் மீண்டும் தன் வேலைத்திறனைப் பெறுகிறது. நாள்பட்ட ஈரல் நோய்களோடு வயிற்றில் நீர்க் கட்டியும், பிளாஸ்மா கிரியாட்டிலின் 1.5 மி.கி/ லிட்டருக்கு மேல் இருந்தாலும், சிறுநீரில் சோடியத் தின் அளவு 10 மி. சமானம் லி. இருந்தாலும் சிறு நீரக, பிளாஸ்மா கிரியாட்டினின் சமன்பாடு முப்ப துக்கு மேலிருந்தாலும் அதைச் சிறுநீரக் கூட்டியம் எனக் கொள்ளலாம். சிறுநீர்ப் பெருக்கிகளை மிகுதி யாகக் கொடுப்பதாலும், நீர் வற்றுவதாலும், வயிற் போக்காலும், வயிற்றுறை நீர் ஊடுபிரித்த லாலும் நாளங்களுள் இருக்கும் நீர்மத்தின் அளவு குறைகிறது. யூரியா நச்சு இரத்தத்தின் அறிகுறிகள் இருப்பதில்லை. மதுவால் ஈரல் கடினமடைந்த வர்களுக்கே இக்கூட்டியம் ஏற்படுகிறது. றுப் கடும் நோயில் ஈரல் வழுவலையும், வயிற்றில் நீர் கட்டுவதையும் மருத்துவத்தால் கட்டுப்படுத்துவது கடினம். நோயாளிக்குப் பசியின்மை, வலிவின்மை, தளர்ச்சி போன்றவை ஏற்படும். இரத்த யூரியாவின் அளவு பெருகும். வெளியேறும் சிறுநீரின் அளவு சாதாரணமாக இருந்தாலும், உட்கொள்ளும் உப்பின் அளவு குறைவாக இருந்தாலும் சிறுநீர்ப் பெருக்கிகளைப் பயன்படுத்தினாலும் பயனின்றி உடலில் நீர்க்கட்டு ஏற்படும். நோய்முற்றிய நிலை யில் குமட்டல், வாந்தி, தாசும் போன்றவை ஏற்படும். நோயாளி சுறுசுறுப்பின்றி ஆழ்மயக்கத்தில் இருப் பார். சிறுநீரின் அளவும் இரத்த அழுத்தமும் குறைந்து ஒரு வாரத்திற்குள் இறந்து விடுவார். இந்நோயாளிகளின் இதய வெளிப்பாடு பொது வாசு இருந்தாலும், தோல் மண்ணீரல், மூளை போன்றவற்றிற்குச் செல்லும் இரத்தத்தின் அளவு மிகுந்தும் சிறுநீரகத்திற்குச் செல்லும் இரத்தத்தின் அளவு குறைந்தும் காணப்படும். இதனால் சிறுநீர் பிரியும் அளவு குறைந்து, பிளாஸ்மா ரெனின் அளவு பெருகுகிறது. இரத்தக் கொள்ளளவை விரிவுப்படுத் தினால் சிறுநீரகத்திற்குச் செல்லும் இரத்த அளவு மிகும்; சிறுநீரும் மிகுதியாக உற்பத்தியாகத் தூண் டும்; ஆனால் இச்செயல் நீடித்திருப்பதில்லை. இத னால் சிறுநீரகப் புறணியில் மிகுந்த இரத்த ஒழுக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மருத்துவம். சிறுநீர்ப் பெருக்கிகளை மிகுதியாகக் கொடுக்காமலும், வயிற்றில் நீர் கட்டியதற்குச் சிறிது சிறிதாக மருத்துவம் செய்வதாலும், சிறுநீரகத்தில்