பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 ஈரம்‌ நாடும்‌ தாவரங்கள்‌

220 ஈரம் நாடும் தாவரங்கள் படுகின்றன. இவை அளவில் சிறியவையாக இருப்ப தாலும், மிதக்கும் தன்மை கொண்டிருப்பதாலும், காற்றின் மூலமும் நீரின் மூலமும், எளிதாகப் புதிய இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. அங்கு இவை புதிய பாலணுத் தாவரங்களாக வளர்கின்றன. மார்கான்ஷியா பேரினத்தில் ஜெம்மே மொட்டுகள், கிண்ணம் போன்ற அமைப்புகளுடன் தோன்றுகின் றன. எனவே இவற்றை ஜெம்மே கிண்ணங்கள் என்று அழைக்கின்றனர். இந்த ஜெம்மே மொட்டு கள் மூலம் உடல் இனப்பெருக்கம் ஏற்படுகிறது. ரிக்சியா, டார்ஜோனியா, ரிபோலியா,மார்கான்ஷியா போன்ற ஈரல் தாவரங்களில் வேற்றிடக் கிளைகள் உடலத்தின் கீழ்ப்புறத்திலிருந்து தோன்றுகின்றன. இக்கிளைகளோடு இணைந்திருக்கும் திசுக்கள் அழிந்து சிதையும்பொழுது, கிளைகள் பிற பகுதி களிலிருந்து பிரிந்து, புதிய உடலங்களாக வளர் கின் ன்றன. சில ஈரல் தாவரங்களில், பெரும்பாலும் தாவர வளர்ச்சிக் காலம் முடிவுறும்போது அல்லது தகாத சூழ்நிலைகளில் தரைக்குக் கீழாகச் சில கிளைகள் தோன்றுகின்றன. இக்கிளைகளின் முளைகள் பருத்து, முடிச்சுகள் போன்று அமைகின்றன. இம்முடிச்சுகள் ஏற்புடைய பருவகாலம் திரும்பியதும் வளர்கின்றன. இவை பாசாம்புரோனியா, ரிக்சியா போன்ற பேரினங் களில் காணப்படுகின்றன. இம்முடிச்சுகள், பாலணுத் தாவரங்கள் பல்லாண்டு நீடித்து நிலைத்திருக்கவும், பெருக்கம் அடையவும் உதவுகின்றன. ஈரல் தாவரங்களின் ஸ்போரணு உடலம் மிகக் குறுகிய காலமே வாழ்கிறது. இக்காலத்திலேயே ஸ்போர்கள் தோற்றுவிக்கப்படுகின்றன. ஸ்போரணு உடலம், மிக எளிமையான அமைப்பு உடையது. இதில் தண்டு, இலை, வேர் போன்ற உறுப்புகள் இல்லை.மாறாகப் பாதம் என்னும் அடிப்பகுதி, கம்பு என்னும் மையப்பகுதி சிமிழ் போன்ற காப்சூல் (capsule) என்னும் முனைப்பகுதி ஆகியவை காணப் ரிக்சியா படுகின்றன. பேரினத்தில் ஸ்போரணுத் தாவரம் பை போன்று காணப்படுகிறது. எனவே இதனை ஸ்போரோகோனியம் என்று அழைக்கின் றனர். ஸ்போரணு உடலம் தரையுடன் தொடர்பு கொண்டிருக்காததால் நீருக்கும், ஊட்டப்பொருள் களுக்கும் பாலணுத் தாவரத்தையே சார்ந்திருக் கிறது. ஸ்போர் தாய்ச்செல்களைத் தோற்றுவிக்கும் ஆர்க்கிஸ்போரியம் என்னும் திசு, ஸ்போரோ கோனியப் பையின் சுவர் உள் அடுக்கிலிருந்து தோன்றுகிறது. ஆர்க்கிஸ்போரியத் திசு ஸ்போர் தாய்ச் செல்களையும் வளமற்ற செல்களையும் தோற்றுவிக்கிறது. வளமற்ற செல்களிலிருந்து இலேட்டர்கள் (elaters) தோன்றுகின்றன. இவை போரோகோனியத்திலிருந்து ஸ்போர்கள் வெளி யேறிப் பரவ உதவுகின்றன. இலேட்டர்கள் ஒருசெல் அமைப்புடையவை; காப்சூல் பகுதியில் காலுமெல்லா என்னும் வளமற்ற பகுதி கிடையாது. காப்சூல் நீள வாக்கில் வெடித்துச் சிதறுகிறது. ஸ்போர்கள் யாவும் ஒரே மாதிரியானவை. எனவே பெரும்பாலான இனங் களில் ஸ்போர்கள் முளைத்துப் பாலணுத் தாவரமாக வளர்ந்து, இரு பால் உறுப்புகளையும் பெற்றிருக்கும். ஸ்போர் முளைத்து, புரோட்டோனிமா நிலை வழி யாகப் பாலணுத் தாவரத்தைத் தோற்றுவிக்கிறது. நா.வெங்கடேசன் ஈரம் நாடும் தாவரங்கள் பத்து தாவர வளர்ச்சியில் நீர் முதன்மைச் சிறப்பு பெற் றுள்ளது. நீர் நல்ல கரைப்பானாக இருப்பதால், நிலத்திலுள்ள கனிமங்களைக் கரைத்துத் தாவர உறிஞ்சலுக்கு ஏற்றதாக்குகிறது. அனைத்துக் கரை பொருள்களும் நீர் ஊடகத்தின் வாயிலாகத் தாவரங் களின் திசுக்களை அடைகின்றன. தாவரங்களின் ஒளிச்சேர்க்கைக்கு நீர் மூலப்பொருளாக அமைகிறது. குறைந்தால் விழுக்காட்டிற்குக் கீழ் நீர் தாவரச்செல்கள் உயிர்வாழா. செல்களின் விறைப்புத் தன்மைக்கு நீர் தேவை. விறைப்புத் தன்மையுடைய செல்களிலேயே அவற்றின் இயல்பான செயல்பாடு களும் செல்பகுப்பும் நடைபெறுகின்றன. செல்களி லுள்ள புரோட்டோபிளாசத்தின் வெப்பச் சமநிலை மாறாமல் இருக்க நீர் துணை புரிகிறது. எனவேதான் தாவரங்கள் நீரையும், ஈரத்தையும் நாடி வளர் கின்றன. நீரின் அளவைப் பொறுத்து அவ்விடத்தின் தாவரத் தொகுப்பு அமையும். ஏனெனில் ஒவ்வொரு தாவரமும் நீர்த்தேவைகளுக்கேற்ப அவ்விடத்தில் செழித்து வளர்கின்றது. நிலத்திலுள்ள நீர் அளவைப் பொறுத்தும் தாவர வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டும் நீர்த்தாவரங்கள், நிலத்தாவரங்கள், வறண்ட நிலத் தாவரங்கள் என்று வகைப்படுத்தி யுள்ளனர். ஈரம் நாடும் தாவரங்கள் எனப்படுபவை எப் பொழுதும் ஈரமாக உள்ள நிலப்பகுதியிலும், நிழ லான பகுதியிலும் காணப்படுகின்றன. எடுத்துக் காட்டாக மலைகளிலும், காடுகளிலும் இவ்வகைத் தாவரங்களைக் காணலாம். இவ்வகைத் தாவரங்கள் நீர்ச்சூழலில் வளராவிட்டாலும், நிழல் நிறைந்த ஈரப் பகுதிகளிலும், குளம் குட்டை ஏரிகளின் கரைகளி லும் வளர்கின்றன. எனவே ஈரம் நாடும் தாவரங் கள், பெரும்பாலும் ஆற்றுக் கரையோரங்களிலும், ஈரமான வெப்பக்காடுகளின் தரையிலும், நீர்த்தேங்கி உள்ள பகுதிகளுக்கு அருகிலும் காணப்படுகின்றன.