226 ஈரல் வேலைத்திறன் எப்போதும் களைப்பு, வாய் திறந்த நிலை, நடையில் தடுமாற்றம் முதலியவை தோன்றும். கண்ணின் நிற மிலி இழைமத்தில் இந்நோய்க்கே உரித்தான கெய்சர் பிளிசர் வளைவு என்னும் ஒரு பழுப்பு நிற வளையம் காணப்படும். ஆய்வு. இரத்தத்தில் நூறு மில்லி லிட்டரில் இரு பது மில்லி கிராமுக்கும் குறைவாகச் செருலோ பிளாஸ்மின் நொதி காணப்படும். நூறு மில்லி லிட் டர் இரத்தத்தில் எண்பது மைக்ரோ கிராமுக்கும் குறைவாகத் தாமிரத்தாது இருக்கும். இருபத்து நான்கு மணிநேரத்தில் சிறுநீரில் வெளியாகும் தாமி மேல் ரத்தின் அளவு நூறு மைக்ரோ கிராமுக்கு இருக்கும். ஈரல் திசு ஆய்வில் இருநூற்றைம்பது மைக்ரோ கிராமிற்கு மேல் தாமிரம் இருப்பது அறி யப்படும் (ஒரு கிராம் உலர்ந்த எடையில்). மருத்துவம், உணவுடன் நாளொன்றுக்கு மூன்று வேளை இருபது மி.கி. கந்தகம் கலந்த பொட்டாஷ் கொடுப்பதால் தாமிரத்தாது உட்கவர்தல் குறையும். காளான், உணவில் தாமிரத்தாது நிறைந்த ஈரல், மீன், கொட்டை, இனிப்பான சாக்லெட் வகைகளைக் குறைப்பதுடன் தாமிரச்சத்து ஒரு மில்லி கிராம் அளவே உணவில் உட்கொள்ள வேண்டும். டி-பெனி சிலிமைன் என்ற தாமிர இடுக்கி இணைப்பு மருந்தை ஒன்றிரண்டு கிராம் வாய்வழியாகக் கொடுக்கலாம். இம்மருந்துக்குப் பல பக்க விளைவுகள் இருந்தாலும் அளவைக் குறைத்தோ தற்காலிகமாக நிறுத்தியோ பின் தொடங்கியோ வாழ்நாள் முழுதும் கொடுத்து வர வேண்டும். நாட்பட்ட நோயாளிகளுக்கு நலம் தெரிய ஓரிருமாதமாகலாம். ஆனால் மருத்துவத்தை மட்டும் நிறுத்தக்கூடாது. ஈரல் வேலைத்திறன் -மா.பிரடெரிக் ஜோசப் பல உயிர்வேதி ஆய்வுகள் ஈரல் வேலைத்திறனை அறிவதற்காகச் செய்யப்படுகின்றன. இவ்வாய்வுகள் நோயைக் கண்டுபிடிக்கவும், நோயின் கடுமையை அறியவும், நோய் தொடர்ந்திருக்கும் நிலையை அறிய வும், நோய்க்குரிய மருத்துவத்தைத் தேர்ந்தெடுக்க வும் உதவுகின்றன. சீரத்திலுள்ள மொத்த பிலிரூ பின், அல்புமின், டிரான்ஸ்.அமினேஸ், புரோத்திராம் பிள் போன்றவற்றின் அளவுகளில் ஏற்படும் மாற்றங் கள் ஈரல் செல்கள் அழிவதைக் காட்டுகின்றன. ஈரம் அல்கலைன் பாஸ்ஃபட்டேஸ், சீரம் கூழ்மமின் பிரிகை, சீரம் டிரான்ஸ் அமினேஸ் ஆய்வுகள் மஞ்சள் காமாலையை உருவாக்கும் நோய்களைக் குறிக் கின்றன. ஈரல்செல்கள் குறைந்த அளவில் சிதைந்திருப் ' பதைக் குறிப்பவை சீரம் பிலிரூபின், சீரம்டிரான்ஸ் அமினேஸ், சீரம் காமாகுளூட்டாமைல் டிரான்ஸ் பெப்ட்டிடேஸ் ஆகியவற்றின் அளவுகளாகும். ஈரல்புற்று, அமிலாய்டு போன்ற நோய்களில் மஞ்சள் காமாலை ஏற்படாமலே சீரம் அல்கலைன பாஸ்ஃபட்டேஸ் மிகும். சீரத்தில் காணப்படும் முரடில் லாத் தசை எதிர்ப்பொருள்கள் நாட்பட்ட கடும் ஈரல் அழற்சியையும், மைட்டோகாண்டிரியல் எதிர்ப் பொருள் முதன்மைப் பித்தநாளக் கடினத்தன்மையை யும் குறிப்பிடும். தற்போது சீரத்தில் எதிர்ப்பொருள் கள் இருப்பதைக் கண்டுபிடிக்க ஆய்வுகள் ஆய்வுகள் வந் துள்ளன. இவ்வாறு தடுப்பாற்றல் ஆய்வும், வைரஸ் எதிர்ப்பொருள் காணும் ஆய்வுகளும் ஈரல் செல்லாய் வும், துருவுதல் (scanning), கேளா ஒலி தமனி வரை படம், பித்தநாள வரைபடம் போன்ற ஆய்வுகளும் ஈரல் நோய்களைக் கண்டுபிடிக்கப் பயன்படுகின்றன. பிலிருபின். வாண்டன்பர்க் நேரடிவினை பதி னைந்து நிமிடங்களில் கூட்டுச்சேர்ந்த பிலிரூபின் அளவைக் காட்டுகிறது. ஏறத்தாழ 0.3 மி.கி./100 மி. லி.க்குக் குறைவாக இருக்கும் கில்பர்ட் நோயிலும். இரத்தமழி நோய்களிலும் இந்த அளவு மிகும். இந்த வினைபொருளோடு கல்பீன் பென்சோயேட் அல்லது மெத்தனால் சேர்ப்பதன் மூலம் மொத்த பிலிரூபின் அளவைக் கணக்கிடலாம். இதிலிருந்து கூட்டுச் சேர்ந்த பிலிரூபின் அளவைக் குறைத்தால் கூட்டுச் சேராப் பிலிரூபின் அளவு கிடைக்கும். மொத்த பிலிரூ பின் அளவு 0.3.1 மி.கி./100 மி.லி. ஆகும். மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும் அனைத்து ஈரல் நோய் களிலும் இந்த அளவு மிகும். இதன் மூலக் நோயின் கடுமையை அறியலாம். மல ஆய்வும் இதற்குப் பயன் படும். வெள்ளை நிற மலம் பித்த நாள அடைப்பைக் குறிக்கும். பிலிரூபின் குளுக்குரோனைல் டிரான்ஸ் ஃபெரேஸ் கடுமைக் குறை நிலையிலும் வெள்ளை நிற மலம் ஏற்படலாம். நோயற்ற நிலையிலும் கூட்டுச் சேராப் பிலிரூபின் மிகு நிலையிலும் சிறுநீரில் பிலிரூ பின் காணப்படுவதில்லை. பித்த நீர்த் தேக்கத்தில் பிளாஸ்மாவில் சிறிதளவு கூட்டுச்சேர்ந்த பிலிரூபின் சேர்வதால் சிறுநீரில் அவை வெளியேறும்போது சிறுநீர் சற்றுச் சிவப்பும் மஞ்ச ளும் கலந்த நிறத்தில் வெளியேறும்; மாத்திரைகளும், டைஅசோபொருள்களில் மூழ்கிய கம்புகளும் தற் போது சிறுநீரிலுள்ள கூட்டுச்சேர்ந்த பிலிரூபினை ஆய்வு செய்யக் கிடைக்கின்றன. கடும் ஈரல் வைரஸ் அழற்சியில் சிறுநீரில் பிலிருபின் தோன்றுமுன்பே யூரோபிலினோஜன் தோன்றுகிறது. தொடர்ந்திருக் கும் காய்ச்சலின் காரணம் அறிய முடியாத நிலை சிறுநீர் ஆய்வில் பிலிரூபினிருப்பது ஈரல் வைரஸ் அழற்சியை உணர்த்தும். யில் யூரோபிலினோஜன். புதிதாகச் சேர்க்கப்பட்ட சிறு நீரில் யூரோபிலினோஜன் இருப்பதை மூழ்கியெடுக்கும்
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/246
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை