பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரல்‌ வேலைத்திறன்‌ 227

கம்புகள் மூலமோ எர்லிகஸ் ஆல்டிஹைடு பொருள் மூலமோ கண்டுபிடிக்கலாம். இது, குடலிலிருந்து உள்ளுறிஞ்சிய அனைத்துப் பிலிரூபினையும் ஈரல் திருப்பி வெளியேற்ற முடியாத அளவுக்குச் செயல் திறன் குறைந்திருப்பதைக் காட்டும். மேலும் மதுவால் ஏற்படும் ஈரல் சிதைவு, ஈரல் புற்று, ஈரல் கடினமாதல் போன்ற நோய்களிலும் இது ஏற்படும். காய்ச்சலோடு ஈரலின் செயல்திறன் மாற்றம் ஏற்பட்டாலும்,இரத்தச் சுற்றோட்ட வழுவலிலும், இரத்தமழிதலிலும் சிறு நீரில் யூரோபிலினோஜன் ஏற்படலாம். ஈரல் வைரஸ் அழற்சியில் சிறுநீரில் யூரோபிலினோஜன் தோன்று வது ஈரல் செயல்திறனில் மாற்றமேற்பட்டதைக் காட்டும். கடும் மஞ்சள்காமாலை நிலையில் ஈரல் சிறிதளவு பிலிரூபினை வெளியேற்றுமாதலால் யூரோ பிலினோஜன் சிறுநீரில் இருப்பதில்லை. யூரோபிலி னோஜன் மீண்டும் சிறுநீரில் தோன்றுவது நோயாளி குணமடைவதைக் காண்பிக்கும். பித்தநீர்த் தேக்கத்தால் ஏற்படும் மஞ்சள் காமாலைச் சிறுநீரில் யூரோபிலினோஜன் இருப்ப தில்லை. புற்றுநோயால் பித்தநாளம் அடைபட்டிருந் தால் யூரோபிலினோஜன் இருக்கும். பித்தக்கற்களும் பித்த நாளச் சுருக்கங்களும் சிறுநீரில் அவ்வப்போது யூரோபிலினோஜன் மிகு நிலையை ஏற்படுத்தும். புரோம்சல்பலீன். இந்தச் சாயத்தை உடலினுள் செலுத்திய இரண்டு மணிக்குள் நோயற்ற ஈரல் 67-100 விழுக்காடு சாயத்தை வெளியேற்றும். இது நோயில் ஈரலைத் மஞ்சள்காமாலை தவிர பிற உறுப்புகள் மூலம் மிகுந்த அளவில் வெளியேற்றப் படும். பிளாஸ்மாவிலும் அதிக அளவிலிருக்கும். பிளாஸ்மா புரதத்தோடு இணைந்து காணப்படும். மிகுபிலிரூபின் நிலையில் சாயமேற்றிய நாற்பத்தைந்து நிமிடங்களுக்குப் பிறகும், அடுத்து இரண்டு மணி நேரம் கழித்தும் இரத்தத்தை எடுத்து ஆய்வு செய்ய வேண்டும். இரண்டாம் முறை எடுக்கும் இரத்தத்தில் புரோம்சல்பலீன் மிகுதியாக இருக்கும். இன்டோசயனின் பச்சை. இந்தச் சாயத்தை ஈரலைத் தவிர பிற உறுப்புகள் பிரித்தெடுப்பதில்லை. இது கூட்டுச் சேராது; இந்த ஆய்வு பாதுகாப்பானது; புரோம்சல்பலின் ஆய்வை விடச் சிறப்பானது. ஆனால் தற்போது இது நடைமுறையில் இல்லை. கொலஸ்ட்ரால். இரத்தக் கொலஸ்ட்ரால் அளவு 200-250 மி.கி./100 மி.லி. ஆகும். எதிர்பாராமல் பித்தத்தேக்கம் ஏற்படும் நிலையில் இந்த அளவு ஒன்றரை முதல் இரு மடங்காக உயரும். நாட்பட்ட ஈரல் நோய்களிலும் தோல் சாந்தோமாக்கலிலும் (xanthoma) மிகுதியான அளவிலிருக்கும். உணவுப் பற்றாக்குறையில் இதன் அளவு குறையும். களால் ஏற்படும் பித்தநாள அடைப்பில் இந்த அளவு குறைவதில்லை. வைரஸ் ஈரல். அழற்சியிலும் அ. க.5-15அ புற்று ஈரல் வேலைத்திறன் 227 கொழுப்பு ஈரல், பித்தக் கற்கள் நோய்களிலும் இந்த அளவு உயரும். சீரம் ட்ரைகிளிசரைடுகள் ஈரல் செல் நோய்களி லும் பித்த நாள அடைப்பால் ஏற்படும் மஞ்சள் காமாலையிலும் மிகும். இதில் குறைந்த அடர்த்தி யுள்ள கொழுப்புப் புரதமே பெரிதும் காணப்படும். பித்தத்தேக்க நோயில் கொலஸ்ட்ரால், லெசித்தின் அடங்கிய கொழுப்புப்பொருள் காணப்படும். பித்த அமிலங்கள். இவை நாளுக்கு 0. 3 - 0. 7 கிராம் அளவில் ஈரலில் உற்பத்தியாகி மலத்தில் வெளியேற்றப்படுகின்றன. இவை பித்தத்தில் வெளி யேற்றப்படும் நீரின் அளவை உயர்த்துகின்றன. பித்தக் கற்களிலும், மிகுதியான கொழுப்பு மலத்தில் வெளியேறும் நோய்களிலும், இந்த நீரின் அளவு குறைகிறது. ஈரல் உள்வளர்சிதைமாற்றத்தில் பித்த உப்புகளில் மாற்றமேற்படுவதால் பித்தத் தேக்கம் ஏற்பட்டு உடல் அரிப்பும் காணப்படும். ஹைடிராக்சி ஸ்டீராய்டு டீஹைட்ரோஜனேஸ் நொதி மூலம் சீரத்திலுள்ள பித்த அமில அளவைக் கணக்கிடலாம். காற்று, நீர்ம நிறச் சாரல் பிரிகை ஒவ்வொரு பித்த அமிலத்தையும் தனித்தனியாகப் பிரித்தறிய உதவு கிறது. இதற்கு ரேடியோ இமினோ ஆய்வும் (radio- immuno assay) பயன்படும். புரதங்கள். இரத்தத்தில் அல்புமின் 3.5 - 5 மி.கி./ 100 மி.லி. குளோபுலின் 0.5 - 1.5 கி/100 மி.லி. அளவும் இருக்கும். அல்புமின், ஃபைபிரினோ ஜன், புரோத்திராம்பின், ஹெப்டோகுளோபுலின், கிளைக்கோ புரதம், டிரான்ஸ்ஃபெரின், செரிபோ பிளாஸ்மின், இம்யூனோகுளோபுலின் போன்ற புரத வகைகளை ஈரல் உற்பத்தி செய்கிறது. நாளொன்றுக்கு ஏறத்தாழப்பத்து கிராம் அல்புமின் உற்பத்தியாகிறது; ஒரு கிராம்டிரான்ஸ்பெரினும், இரண்டு கிராம் பைபிரி னோஜனும் உற்பத்தியாகின்றன. ஈரல் நோய்களில் ஆல்புமின் குறை நிலையும் குளோபுலின் மிகுநிலை யும் ஏற்படும். சீரப்புரதக் கூழ்ம மின்பிரிகையில் (electro- phoresis) வெவ்வேறு சீரப்புரதங்களைக் காணலாம். குளோபுலின், அல்புமினோடு சேர்ந்து ஈரல் செல்நோய் களில் குறையும். எதிர்பாராமல் ஏற்படும் காய்ச்ச லிலும் புற்றுகளிலும் மிகும். ஆண்ட்டிடிரிப்சின் குறைநிலையில் இதுமுற்றிலும் இல்லாதிருக்கும். நாட் பட்ட ஈரலழற்சி நோய்களிலும் பித்தத்தேக்க நிலை களிலும் ஹெப்டோகுளோபின் குறைந்தும், வால் ஏற்படும் கடினமாதலில் செரிலோபிளாஸ்மின் உயர்ந்தும் டிரான்ஸ்ஃபெரின் குறைந்தும் காணப் படும். கடினமா தலில் காமாகுளோபுலின் மிகுதியாகச் சுரக்கிறது. நாட்பட்ட கடும் ஈரல் அழற்சி, அறி குறிகளற்ற கடினமாதலிலும், முதன்மைப் நாளக் கடினமாதலிலும், வைரஸ் ஈரலழற்சி அறி மது பித்த