பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 ஈரலழற்சி

228 ஈரலழற்சி குறிகளற்ற கடினமாதலிலும், மதுவால் ஏற்படும் கடினமாதலிலும் மிகுதியாகக் காணப்படும். சீரம் நொதிகளின் ஆய்வுகள். இந்த ஆய்வுகள் ஈரல் சிதைவு ஏற்படுவதன் காரணத்தை அறிய உதவு கின்றன. சீரம் அல்கலைன் பாஸ்ஃபட்டேஸ் ஒரு லிட் டர் இரத்தத்தில் ஏறத்தாழ 3-13 கிங் ஆம்ஸ்ட்ராங் அலகு இருக்கும். பித்தத்தேக்கத்தில் இதன் அளவு உயரும். பித்தநாள அடைப்புகளில் இந்த அளவு குறையும். சில சமயம் ஈரல் புற்று, அமிலாய்டு நோய் கள், சீழ்க்கட்டி, இரத்தப்புற்று, கிரானுலோமாக்கள், எலும்புப் புற்று போன்ற நோய் நிலைகளில் இந்த அளவு மிகுதியாகும். சீரம் 5 - நியூக்ளியோடிடேசின் அளவு பித்தத்தேக்க மஞ்சள் காமாலையில் மிகும். சீரம் காமாகுளுட்டமைஸ் டிரான்ஸ்ஃபெப்டிடேஸ் பித்தத்தேக்கத்திலும் ஈரல் செல்நோய்களிலும், மது அருந்துவோரிடமும் மிகுதியாகும். சீரம் குளுட்டாமிக் ஆக்சலோ அசெட்டிக் டிரான்ஸ்அமினேஸ் இரத்தத் தில் 5-15 அலகு/லிட்டர் இருக்கும். இந்த அளவு ஈரல் சிதைவு, நசிவு போன்றவற்றில் மிகும். சீரம் குளுட்டாமிக் பைருவேட் டிரான்ஸ்அமினேஸ் 5-30 சிரைகளில் அலகு/லிட்டர் இரத்தமிருக்கும். ஈரல் இந்த அளவு மிகுதியானது. புரோத்திராம்பின் நேரம் சாதாரணமாக 10-14 வினாடிகளிருக்கும். ஆனால் வைட்டமின் கொடுத்த பிறகு இந்த நேரம் மிகுதிப் படும். இந்த ஆய்வு ஈரல் நோயின் கடுமையை அறிய உதவுகிறது. ஈரலழற்சி வாசுகிநாதன் முனைப்பான ஈரல் அழற்சி நோயின் அறிகுறிகள் உடல் முழுதும் தோன்றினாலும் அவை குறிப்பாக, ஈரலை மட்டுமே தாக்குகின்றன. இந்நோயின் மூல காரணத்தைக் கொண்டு இது தனித்தனியாக B,A. Non A, Non B என்று நான்கு வகையாகப் பிரிக்கப் படுகிறது. ஆனாலும் அனைத்து வகை நோய்களும் ஒரேவிதமான அறிகுறிகளையே உடலில் உண்டாக்கு கின்றன. ஈரல் அழற்சி-A எனப்படுவது தொற்று ஈரல் அழற்சி என்றும், குறைந்த நோய்க்காப்புக் கால முடைய ஈரல் அழற்சி என்றும் குறிப்பிடப்படுகிறது. இதேபோல் ஈரல் அழற்சி-B எனப்படுவது சீரம் ஈரல் அழற்சி, நாட்பட்ட நோய்க்காப்புக் காலமுடைய ஈரல் அழற்சி என்றும் அழைக்கப்படுகிறது. பரவும் வகை. வைரஸ் தொற்று அழற்சி Aஇன் நோய்க்காப்புக்காலம் 15-45 நாள்கள் ஆகும். இந் நோய் ஒரு முனைப்பான தொற்று நோய் ஆகும். இத் தொற்று நிலை குறிப்பாக நீர், உணவு ஆகியவற்றின் மூலம் கலந்து பரவுகிறது. ஈரல் அழற்சி Bஇன் நோய்க் காப்புக்காலம் 30-150 நாள்கள் ஆகும். இதன் தொற்று நிலை, ஈரல் அழற்சி Aஐப் போல்அல்லாமல் குறைவாகவே காணப்படுகிறது. உடலுக்குள் உணவுப்பாதையைத் தவிர பிற இடங்கள் மூலமாகவும் இது பரவுகிறது. உண்மையில், ஈரல் அழற்சியைத் தனித்தனியான அறிகுறிகள் அல்லது பரவி இருக்கும் இடத்தைக் குறித்த அறிகுறிகள் என வேறுபடுத்தி அறிவது கடினம் என்றே தற்போது கருதப்படுகிறது. அறுதியிட்டுக் கூறுவதற்கு இரத்த ஆய்வு செய்ய வேண்டும். ஈரல் அழற்சி A மக்கள் கூட்டமாக வாழும் இடங்களில், நல வாழ்வுநெறி முறைப்பாடின்றி வாழும் மக்களிடமே பெருகிக் காணப்படுகிறது. இந்நோய் உணவு, நீர், பால் நண்டு, நத்தை போன் றவை மூலம் நூற்றுக்கணக்கானவர்களை எதிர்பாரா மல் தாக்கவல்லது. குடும்பத்திலும் விடுதிகளிலும் இந்நோய் பரவலாகத் திடீரெனத் தாக்குகிறது. ஈரல் அழற்சி பெரும்பாலும் குளிர்காலத்தில்தான் காணப் படுகிறது. வெப்ப நாடுகளில் 10-20 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்நோயின் தாக்குதல் எதிர்பாராத ஒரு கொள்ளை நோய் போல் காணப்படுவதாக மருத்துவ அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. ஈரல் அழற்சி B உணவு மண்டலத்தைத் தவிர, பிற வழிகளில் (எ.கா. இரத்தம்) பரவுகிறது என்றா லும் பல நோயாளிகள் தமக்கு இந்நோய் ஏற்பட்ட விதத்தைத் கூற இயலாத நிலையில் இருப்பர். உலகம் முழுதும் ஏறத்தாழ நூற்றைம்பது மில்லியன் மக்கள் மற்றவர்களுக்கு இந்நோயைப் பரப்பக்கூடிய நிலையில் உள்ளனர். ஈரல் அழற்சி B, லெப்ரமேட்டஸ் வகைத் தொழுநோய், இரத்தப் புற்றுநோய், ஹாட்ச் சுகின் நோய் ஆகியவை நாட்பட்ட சிறுநீரகத் தொற்றுக்காகச் செய்யப்படும் இரத்தத் தூய்மைப் படுத்தலுக்குட்படும் நோயாளி, போதை ஊசிகளுக்கு அடிமையானவர் ஆகியோரிடம் காணப்படும். ஈரல் அழற்சி - B இரத்தம் வழங்குபவர்களிடம் இருப்பதை இரத்த ஆய்வு மூலம் அறிய முடியும். முழு அளவு இரத்த அணுக்கள், இரத்த நுண் தட்டு கள், பிளாஸ்மா போன்றவை மூலமும் இந்நோய் தொற்ற வாய்ப்பு உள்ளதாகவே கருதப்படுகிறது. இந்நோய் இரத்த ஏற்றம் மூலம்தான் பெரும் பான்மையாகப் பரவுகிறது என்றாலும், தொழில் முறை மூலமாகவும் (மருத்துவர், செவிலியர்) குடும்ப உறவு, சிரைவழிப் போதை மருந்து, சிறுநீரக இரத்தத் தூய்மைப்படுத்தும் எந்திரம், சிறுநீரக மாற்று அறுவை ஆகியவற்றாலும் பரவக்கூடும். அறிகுறி. கல்லீரவ் அழற்சியின்போது மஞ்சள் காமாலை தோன்றுவதற்கு ஓரிரு வாரங்களுக்கு முன்னரே குமட்டல், வாந்தி, உடல்சோர்வு, தசை வலி, உடல்வலி, மூட்டுவலி, தலைவலி, கண் கூச்சம்.