பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உட்கனல்‌ பொறி 269

அறிஞர் முதலாம் வளிம உட்கனல் பொறியை உரு வாக்கினார். இவர் விளக்கினை எரிக்கப் பயன்படுத் தும் வளிமத்தை உட்கனல் பொறியில் எரியச் செய்து ஆற்றலை உண்டாக்குவதில் வெற்றி கண்டார். 1862 இல் போதரோச்சஸ் என்பார் எரிபொருள் காற்றுக் கலவையை அழுத்திப் பின்னர் அதனைப் பற்ற வைப்பதனால் எரிபொருளைச் சிக்கனப்படுத்த லாம் என்னும் கருத்தை வெளியிட்டார். போத ரோச்சஸ், ஆட்டோ என்ற அறிஞர்கள் தனித்தனியே இந்த (மின்பொறி பற்றவைக்கும்) உட்கனல் பொறிக்குரிய வெப்ப இயக்கவியல் தத்துவத்தை வரையறுத்துக் கூறீனர். இத்தத்துவத் தைப் பயன்படுத்தி, 1876 இல் ஆட்டோ (ஜெர்மன் நாட்டு அறிஞர்) உட்கனல் பொறி ஒன்றை அமைப் பதில் வெற்றி கண்டார். ஈராண்டுகளுக்குப் பின்னர் கோல்டு கிளார்க் என்பார் ஓர் இரு வீச்சு இயக்க உட்கனல் பொறியை உருவாக்கினார். 1891 இல் டே என்பவர் சுழல் தண்டைக் கொண்டிருக்கும் உறை யையே காற்று அழுத்தியாகப் பயன்படுத்தினார். இதன் மூலம் இருவீச்சு இயக்க உட்கனல் பொறியை மேலும் எளிமையானதாக உருவாக்கினார். அடுத்து டெய்ம்லர் என்பார் விரைவாக இயங்கக்கூடிய உட்கனல் பொறியை வடிவமைத்தார். 1829 இல் ருடால்ப் டீசல் என்ற ஜெர்மன் நாட்டு அறிஞர் முதன் முதலாக அழுத்த லெப்பம், எரி பொருளைப் பற்றவைக்கும் தத்துவத்தைப் பயன் படுத்தி ஓர் உட்கனல் பொறியை அமைத்தார். அவர்தம் நினைவாகவே டீசல் தத்துவத்தின் அடிப் படையில் இயங்கும் உட்கனல் பொறி டீசல் பொறி என்று வழங்கப்படுகிறது. உ உட்கனல் பொறியில் நிகழும் செயல்கள். உட் கனல் பொறியில், நகரும் உந்து மேலும் கீழுமாக நகர்வதால், நான்கு வகையான செயல்கள் ஒன்றன் பின் ஒன்றாக சீரான வகையில் நடைபெறு கின்றன. இதனை இயக்கச் சுற்று (cycle (or) cycle of operations) என்பர். அவை: புதிய வளிமத்தைக் குழல் உருளைக்குள் உறிஞ்சுதலும். அவ்வாறு உறிஞ்சப்பட்ட வளிமத்தை வெகுவாக அழுத்துதலும். உருளைக்குள் எரிபொருள் எரிந்து உண்டான வெப்பத்தால் வளிமக் கலவை விரிவடைதலும், விரி வடைந்த வளிமக் கலவையை வெளியேற்றுதலும் ஆகும். இறுதியாக, குழல் உருளையில் இருந்து வெளியேற்றப்படும் வளிமம் கழிவு வளிமம்(exhaust gas) எனப்படும். உட்கனல் பொறி எவ்வளவு நேரத்திற்கு இயங்குகிறதோ அவ்வளவு காலத்திற்கு இந்த நான்கு செயல்களும் நிகழ்ந்து கொண்டே இருக்கும். உட்கனல் பொறியின் உருளைக்குள் எரிபொருள் எரிந்து உண்டான வெப்பத்தால் வளிமம் விரிவடை உட்கனல் பொறி 269 யும்போது நகரும் உந்து வெளியே தள்ளப்படுகிறது. இது சுழல் தண்டு சுழல உதவுகிறது. வெப்ப ஆற்றல் இந்த வகையில் இயக்க ஆற்றலாக மாற்றப்படுகிறது. இவ்வாறு சுழலும் ஆற்றலைப் பெற்று சுழல் தண்டு இணைப்புத் தண்டின் மூலம் நகரும் உந்தை மேலும் கீழுமாக நகர்த்து, உறிஞ்சுதல், அழுத்துதல், லெளி யேற்றுதல் ஆகிய பிற செயல்களையும் நிகழச் செய் கிறது. எஞ்சியிருக்கும் ஆற்றலே பயனுள்ள வேலை யைச் சுழல் தண்டு செய்ய வழி செய்கிறது. சுழல் தண்டு இந்நான்கு செயல்களின்போதும் ஒரே சீரான வகையில் குறிப்பிட்ட ஓட்டத்தில் இயங்க ரது வாகச் சுழல் சக்கரம் (fly wheel) ஒன்று சுழல் தண் டில் பொருத்தப்பட்டிருக்கிறது (படம்-1). நகரும் உந்து, குழல் உருளையின் உள்ளே உள் ளும் புறமுமாக நகர்ந்து செல்லும்போது உட்பக்கத் தில் ஓர் இடத்திலும், வெளிப்பக்கத்தில் ஓர் இடத்தி லுமாக இயக்கமின்றி நிலையாக இருக்கும். இவ் விரண்டு இடங்களும் முறையே இயக்கமற்ற மேல் முனை (top dead centre) என்றும், இயக்கமற்ற கீழ்முனை (bottom dead centre) என்றும் கூறப்படும். நகரும் அடைப்பான் இவ்விரு முனைகளுக்கும் இடை யிலேயே நகர்ந்து மேலே குறிக்கப்பட்ட நான்கு செயல்களையும் நிகழ்த்துகிறது. உட்கனல் பொறி இயக்க வகை. உட்கனல் பொறியின் இயக்கத்தைப் பல வகைகளில் நிகழு மாறு அமைக்கலாம். அவற்றுள் நான்கு வீச்சு இயக் கப் பொறிகளும் (four stroke engines), இரண்டு வீச்சு இயக்கப் பொறிகளும் (two stroke engines) வழக்கில் உள்ளன. நான்கு வீச்சு இயக்கப் பொறியில் (படம்-2) நகரும் உந்து மேல் முனையில் இருந்து கீழ்முனைக்கு நகர்ந்து புதிய வளிமத்தைக் குழல் உருளைக்குள் உறிஞ்சுகிறது. கீழ்முனையில் இருந்து மேல்முனைக்கு நகர்ந்து வளிமத்தை அழுத்துகிறது. எரிந்து விரி வடையும் வளிமத்தினால் மேல்முனையிலிருந்து கீழ் முனைக்குத் தள்ளப்படுகிறது. கீழ் முனையிலிருந்து மேல்முனைக்கு நகர்ந்து பெருமளவில் ஆற்றல் இழந்த வளிமக் கலவையைக் கழிவு வளிமமாக வெளியேற்று கிறது. நான்கு வீச்சு இயக்கப் பொறியில் நகரும் அடைப்பானின் இந்த இயக்கங்கள் முறையே உறிஞ்சு இயக்கம் (suction stroke), அழுத்து இயக்கம் (compression stroke), விரிவடை இயக்கம் (expansion stroke), வெளியேற்று இயக்கம் (exhaust stroke என்று குறிப்பிடப்படுகின்றன. இரு தூர இயக்கப் பொறியில் நகரும் உந்து இருமுறை மேலும் கீழும் நகர்வதன் மூலம் மேலே கூறப்பட்ட நான்கு வகையான செயல்களும் ஒன்றன் பின் ஒன்றாகச் சீரான வகையில் நிகழ்கின்றன. உட்கனல் பொறியில் சுழில் தண் ரு சுற்ரை