பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 உட்செவியில்‌ ஏற்படும்‌ இடர்ப்பாடுகள்‌

284 உட்செவியில் ஏற்படும் இடர்ப்பாடுகள் சிரையடைப்புகள் மாறுவதில்லை. வணரியச் (labyrinth) சிரையோட்டத்தில் பெருமளவு தடை உண்டானால், பரந்து பட்ட சுருள் வளைக் கடிப்ப ஊறுபாடுகளும் (cochleo saccular damage) உதிரப் பட்டையச் சிதையும் (strial degeneration) ஏற்படு பிணைக்கப்பட்டுள்ளமையால், பெருங்குறைகளாக கின்றன. தமனியோட்டத் தடை குறைந்து சில நாள்கள், தற்காலிகமானதாக இருக்கும்போது ஊறு விளைவ தில்லை. தற்காலிகமானதாகவிருப்பினும், நீண்ட நேரத்திற்குத் தடையேற்படின், சுருள் வளை (cochlea) சிதிலமடைகின்றது. முழுமையான தமனியோட்டத் தடை உண்டானால், பெருமளவில் சுருள் வளைய மும் அங்கணமும் (vestibule) பாதிக்கப்படுகின்றன. நுண்மிதவையாக்கம் (microembolization). சிறு மிதவைகள் உட்செவிக் குருதி நாளங்களில் உருவாகி, ஆங்காங்கே தடையேற்படுத்துவதும் உண்டு. அப் போது கருள் வளை, உதிரப் பட்டையம், அங் கணம் போன்ற பகுதிகள் சிதைவுறுகின்றன. எனவே அங்கணக் கருவியைவிடச் சுருள்வளைப் பகுதியே குருதிநாளக் குறைகளால் மிகுதியாகப் பாதிக்கப் படுகின்றது எனலாம். குறைந்தால், குருதியோட்டக் குறைபாடுகனால் சுருள்வளை இயக்கங் களில் ஏற்படும் இடையூறுகள் சுருள்வளைக்கான குருதியளவு அதன் செயல்பாடுகள் நலிவடைகின்றன. சுருளக நிலை மின்னூட்டமும (endocochlear resting potential) இயக்க மின்னூட்டமும் (action potential) குறை கின் ன்றன. குருதிக் குறைவினால், சுருள் வளையின் ஆக்சிஜன் அழுத்தம் வலிவிழக்கும். சுருள் வளையின் சாதாரண ஆக்சிஜன் சில நொடிகளின் வளவு, இயக்கத்திற்கு மட்டுமே வரக்கூடியது. எனவே புதி தாக ஆக்சிஜனை எடுத்து வரும் இரத்த ஓட்டம் தடைப்பட்டால், இயக்கமும் செயல்பாடும் தடுமாறி விடுகின்றன. சுருள் வளையின் வளர்சிதை வினை களுக்கும் ஆற்றல் புதுக் கூட்டு ஆக்கு வினை களுக்கும் ஆக்சிஜனும், நீரில்லாத இரத்த ஒட்டமும் தேவையாகும். உட்செவிக் குருதி நாளக் கேடுகள். இவற்றை, தத்தம் தோற்றுவாய்க்கும் தன்மைக்கும் தக்கவாறு பல பகுப்புகளாகக் காணலாம். இந்நோய்கள் வெவ் வேறு வகையில் தோன்றினாலும், இவற்றின் அடிப் படைக் காரணமும், குருதி நாளங்களுக்கு ஏற்படும் தா க்கங்களினாலேயே உருவாகின்றன. குருதி நாள் அடைப்புகள், நாளச்சுவர் அழற்சி, குருதிக் கசிவு குருதி நாளங்கள் நாராதல் போன்றவற்றின் விளை வாக நோய்கள் தோன்றுகின்றன. பிறவிக் கேளாமை. பரம்பரைச் செவிட்டுத் தன்மையுடையோருக்கும், காதி பிறவியிலேயே றுக்க நோய் உடையோருக்கும், உட்செவிக் குருதி நாளங்கள் சுருங்கியும், சீராக வடிவுறாமலும் காணப் படும். குறிப்பாக உதிரப் பட்டையத்தின் தந்துகிகள் வளர்ச்சியடையாமல், உட்கிளையின்றி, வெறும் நாரிழைகளைப் போல் காணப்படுகின்றன. கொடுந்தாக்கக் கேளாமை (traumatic hearing loss). தலையில் சுருள் நன்கு அடிபட்டாலும், வளைத் தமனிகள் அறுந்து போகலாம். இதனால் சுருளக இரத்தக் கசிவும் (intracochlear haemorrhage) ஏற்படலாம். மிகுந்த ஒலியாலேயே நீண்ட நேரம் இருப்பதாலோ, திடீரென்று இடி போன்ற ஓசையைக் கேட்பதாலோ காது கேளாது போகலாம். அத்தகு ஒலித்தாக்கம் சுருள்வளை நுண் இரத்த ஓட்டத்தைப் பாதிப்பதாலும், நாளங்களை அறுந்து போகச் செய்வதாலும் செவிட்டுத் தன்மையை ஏற்படும். தொற்றுநோய் வகைக் கேளாமை. தொற்று வகை யில் தோன்றும் மிகு நுண்ணுயிர் நோயான ஜெர்மன் அம்மையிலும் இரத்த நாளங்கள் தாக்கமுறுகின்றன. இரத்தக் குழாய்களின் மீது நேரடித் தாக்குதலால், நாளச் சுருக்கமும், அழற்சியும் ஏற்படுகின்றன. சேத மடைந்த நாளச்சுவர் வழியாக இரத்தக் கசிவு உண்டாகின்றது. வளர்சிதை வகைக் கேளாமை. இது நீரிழிவு வளர் சிதை நோய்களுள் ஒன்றாகும். இதில், உடலின் பல இரத்தக் குழாய்கள் நலிவடையும். தந்துகிச் சுவர்கள் வலிவிழந்து போவதால், உட்செலி இரத்த நாளங்கள் சீர்குலைந்து போகும். இந்நாளங்கள் நுண் குரு பழுவால் தாக்கப்படுகின்றன; தந்துகியின் வலிவற்ற இயல்பும் மிகுதியாகின்றது. இவை யாவும் கேளாமையையும், செவிட்டுத் தன்மையையும் தரு கின்றன. நலிவு வகைக் கேளாமை, முதிர்ந்தோரில் முது வதிர்மை (presbyacusis) காணப்படும். அதனால் கேட்குந்தன்மை குறையும். இதனைத் தோற்றுவிப் பதும் இரத்த நாளக் குறைபாடுகளே. முதுவதிர்மை உள்ளவரின் தமனிகள் இறுக்கமடைந்திருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. உதிரப் பட்டையம் நார் மிகையால் (fibrosis) தாக்கப்பட்டு இரத்த ஓட்டம் தடைப்படுகின்றது. அகவண்ணீர் உற்பத்தியில் மிகப் பெரும் பங்கு வகிக்கும் உதிரப் பட்டையமே நாராகப் போவதால், கேட்கும் தன்மை குறைந்து போகின்றது வேறு வகைகளில் கேளாமை, உடலின் வேறு பல உறுப்புகளைக் குறிப்பாகத் தாக்கும் கோளாறு களிலும், நோய்களிலும் துணைக் கோளாறாகச் செவிட்டுத் தன்மை ஏற்படுகின்றது. இதற்கு உட் செவிக் குருதி நாளங்களில் குறிப்பாகச் சுருள் வளைக் குருதி நாளங்களில் ஏற்படும் நலிவுகளே காரண