பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 உடல்‌ புறவுறை

290 உடல் புறவுறை கொண்டுள்ளது. எனினும் அவற்றின் பொருள் விகிதம் வேறுபடுகின்றது. ஊட்டப் மேல்தோல் செதில். கருச்சவ்வுடையவற்றின் மேல் தோலில் பாதுகாப்புக்காக அமைந்துள்ள இச்செதில் கள், வளரும் அடுக்கிலிருந்து உண்டாகின்றன. பல்லி இனத்தைச் சார்ந்த விலங்குகளில் மேல் தோல் முழுதும் இச்செதில்களால் மூடப்பட்டுள்ளன. ஃப்ரைனோ சோமாவில் இச்செதில்கள் பெரிய கூரான முள் போன்று அமைந்துள்ளன. ஆமையின் முதுகுப் புற ஓட்டில் ஸ்கூட்ஸ் (scutes) என அழைக்கப்படும் பெரிய செதில் தகடுகள் உள்ளன. முதலையின் மேல் தோலிலும் மிகப்பெரிய செதில் தகடுகள் காணப்படு கின்றன. பாம்புகளின் உடல்பகுதியில் மேல்தோல் தகடுகளாகவும் தலைப்பகுதியில் தடித்த கவசத் தகடு களாகவும் அமைந்துள்ளன. கிலுகிலுப்பைப் பாம்பு வால் முனையில் உள்ள கிலுகிலுப்பை என்ற செதில் அடுக்குகளை அசைப்பதன் மூலம் மற்ற விலங்கு களை அச்சுறுத்துவதற்கு ஒருவித ஒலியை உண் டாக்குகிறது. வளரும் அடுக்கிலுள்ள நிறமிகள் வண்ணங் காரணமாக மேல்தோல் செதில்கள் பல களில் காணப்படுகின்றன. பச்சோந்தி சூழ்நிலைக் கேற்ப மேல்தோலின் நிறத்தை மாற்றிக்கொள்வது குறிப்பிடத்தக்கது. ஊர்வனவற்றில் மேல்தோலின் பெரும்பகுதி அவ்வப்போது தோலுரிக்கப்பட்டுப் புதிய செதில்கள் உண்டாகின்றன. மேல்தோல் செதில்கள் பறவைகளின் கால்களிலும், வாலிலும், பூனையின் பாதத்திலும் காணப்படு கின்றன. ஆர்மடில்லோ போன்ற செதில்தோல் எறும்புத்திண்ணி வகைப் பாலூட்டிகளின் முழுதும் பெரிய மேல்தோல் செதில்கள் உள்ளன. எலியின் உடல் காணப் பறவைகளின் இறகுகள். பறவைகளின் இறகுகள் பறக்க உதவும் தகவமைப்புகளில் முதன்மையானவை ஆகும். ஊர்வனவற்றின் மேல்தோலில் படும் செதில்களே பறவைகளில் வளரும் அடுக்கி லிருந்து தோன்றும் சிறகுகளாகத் தோற்றம் பெற் றன எனக் கருதப்படுகிறது. பறவைகளின் உடலில் மூன்றுவகை இறகுகள் காணப்படுகின்றன. உருவ இறகுகள் இறக்கைகளிலும் வால் பகுதியிலும் அமைந்து உடல் வடிவம் பெறவும், பறக்கவும், திசைமாறவும் உதவுகின்றன. உடல் இறகுகள் உடலுக்கும், அடைக்காத்தலின் பொழுது முட்டை களுக்கு ஒரே சீரான தரவும் பயன் படுகின்றன. உடல் ஃபிலோப்லூம்கள் பகுதி யில் காணப்படும் மிகச் சிறிய இறகுகள் ஆகும். இறகுகளில் உள்ள நிறமிகளால் பறவைகள் வண்ணங்களில் காட்சியளிக்கின்றன. ஆண் பறவை களின் பல வண்ண இறகுகள் பெண் பறவைகளைக் கவர உதவுகின்றன. பழைய இறகுகள் அவ்வப் பொழுது உதிர்ந்து புதிய இறகுகள் தோன்று கின்றன. வெப்பம் பல் அலகுகள். பறவைகளின் அலகுகளும், பிளாட் டிப்பஸ் எனப்படும் முட்டையிடும் பாலூட்டியின் அலகும், ஆமையின் அலகும் மேல்தோல் வளரும் படலத்திலிருந்து தோன்றிய அமைப்புகளாகும். இவை மேல், கீழ்த் தாடைகளில் தொடர்ச்சியான பற்களற்ற பகுதிகளாகும். அலகுகள், செதில்கள் மூடிய அலகுகள் செதில்கள் அற்ற அலகுகள் என்று இரு வகைப்படும். பறவைகளின் உணவுப் பழக் கத்திற்கேற்ப அலகுகள் தகவமைப்புகளைப் பெற்றி ருக்கின்றன. குருவியின் தானியங்களைக் கொறிப்பதற்கும், காகத்தின் உணவைக் கொத்தி உண்பதற்கும், மரத்தை உளிபோன்ற அமைப்புடன் துளைப்பதற் கும், மீன்கொத்தியின் நீண்ட அலகு மீன் பிடிப்பதற் கும், கிளியின் அலகு கொட்டைகளை உண்பதற்கும். வாத்தின் அலகு நீரில் உயிரிகளைப் பிரித்தெடுப் பதற்கும் ஏற்றவாறு அமைந்துள்ளன. அவகு அலகு மரங்கொத்தியின் அலகு உரோமம். இது பாலூட்டிகளில் மட்டுமே வளரும் அடுக்கிலிருந்து தோன்றுகின்றது. மயிரின் அடர்த்தி பாலூட்டிகளில் வேறுபடுகின்றன. யும், நிறமும் மனித உடலில், மிகு மயிர் வளர்ச்சி, குறை மயிர் வளர்ச்சி, மயிர் வளராத்தன்மை என மாறுபாடுகள் காணப்படுகின்றன. மயிர்களின் கருப்பு, கருஞ் சிவப்பு நிறங்களுக்கு அவற்றிலுள்ள சிவப்பு, கருஞ்சிவப்பு நிறமிகளும், அவற்றின் அளவுமே காரணம் என அறியப்பட்டுள்ளது. நிறமிகள் இல்லாத மயிர்கள் வெண்மையாகவும், நிறமிகள் குறை வானவை சாம்பல் நிறத்திலும் காணப்படுகின்றன. மயிரில் மெடுல்லா என்ற உள்பகுதியும், கார்ட்டெக்ஸ் என்ற நடுப்பகுதியும், க்யூட்டிக்கிள் என்ற வெளிப் பகுதியும் உள்ளன. கெராட்டின் என்ற புரதம் உரோமங்களுக்குக் கடினத் தன்மையைக கொடுக் கின்றது. மயிர் உடலுக்கு ஒரு பாதுகாப்புப் போர்வையாகவும், வெப்பப் பாதுகாப்பு அடுக்காக வும், நீராவிப்போக்கு மற்றும் வெப்ப இழப்பைக் உதவுகின்றன. பூனை, சுண்டெலி குறைக்கவும் போன்றவற்றின் மீசை மயிர் உணர்வு உறுப்பாகச் செயல்படுகின்றது. கீழ் அடித்தகடும் கூர்நகம், நகம், குளம்பு. கருச்சவ்வுடைய விலங்கு களின் விரல் நுனிகளில் காணப்படும் இவை கார்னிய அடுக்கிலிருந்து உண்டாகின்றன. அங்குவிஸ் என்ற கூர்மையான ஒரு வளைந்த மேல்தகடும், என்ற மென்மையான அங்குவிஸ் சேர்ந்து கூர்நகமாக அமைகின்றன. ஊன் உண்ணும் பறவைகளிலும், பாலூட்டிகளிலும் இவை நன்கு வளர்ச்சியடைந்துள்ளன. பூனை போன்ற விலங்கு களால் கூர்நகங்களை உள்ளிழுக்கவும், வெளியே நீட்டவும் முடியும். மனித விரல் நகங்களில் அங்குவிஸ் அகன்று, தட்டையாக விரல் சதையின் மேல் பதிந் துள்ளது. நகமும் தோலும் சேருமிடத்தில் உள்ள