பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடனொளிர்தல்‌ 305

ஒரே வரிசையிலுள்ள அனைத்துச் சேர்மங்களின் வேதிப்பண்புகளும் ஒரே மாதிரியாக இருக்கும். எடுத்துக்காட்டாக, மீத்தேன் (CH,), ஈதேன் (C, Hg), புரோப்பேன் (CHg) போன்ற அல்க்கேன்கள் வரிசை யைச் சேர்ந்த அனைத்துச் சேர்மங்களும் வேதிப் பண்புகளில் மிகவும் ஒத்திருக்கின் றன. உறைநிலை. கொதிநிலை, அடர்த்தி போன்ற இயற்பியல் பண்புகள் சேர்மத்தின் மூலக்கூறு எடை அதிகரிக்கும்போது படிப்படியாக மாறுகின்றன. இவ்வாறு கரிமச் சேர்மங்களை உடனொத்த தொடர் புடைய வரிசைப்படி பிரிப்பதால் ஆயிரக்கணக்கான சேர்மங்களின் பண்புகளைச் சில வரிசைகளின் வாயி லாக எளிதில் தொகுத்துப் பயிலலாம். உடனொத்த தொடர்புடைய வரிசைச் சேர் மங்களைப் பொது வாய்பாடு மூலம் குறிப்பிடுவது போல, அவற்றைப் பொதுவான முறைகளின் மூலம் தயாரிக்கலாம். உடனொத்த தொடர்புடைய வரிசையைச் சேர்ந்த ஒரு சேர்மத்தை அடுத்த உயர்மட்டத்திற்கோ கீழ்மட்டத்திற்கோ மாற்றவும் இயலும். (எ.கா) மெத்தில் ஆல்கஹாலை எத்தில் ஆல்க ஹாலாக மாற்றுதல்: KCN CH,OH CHI CH,CN Na/ஆல்கஹால் HNO₂ CHỊCH,NH. CH,CH,OH ஈத்தைல் ஆல்கஹாலை மீத்தைல் ஆல்கஹாலாக மாற்றுதல் (0) → CH,COOH CH,COONH, NH, CH,CH,OH வெப்பம் Br. KOH CH,CONH. HNO, CHÍNH, CH, OH இச் சிறப்பான உடனொத்த தொடர் புடைய வரிசைத் தன்மை கரிமச் சேர்மங்களுக்கே உரியது. கனிமச் சேர்மங்களிடையே படுவதில்லை. காணப் உடனொத்த தொடர்புடைய வரிசையின் குறைந்த மூலக்கூறு எடை கொண்ட படிகளின் பண்புகளிலிருந்து உயர் மூலக்கூறு எடை கொண்ட படிகளின் பண்புகளை ஓரளவுக்குச் சரியாகக் கணிக் கலாம். அதாவது, இதுவரை தயாரிக்காத சேர்மத் தின் பண்புகளை இதனால் ஏறக்குறையச் சரியாகக் கூறமுடியும். ஒரே ஒரு வினைப்படுதொகுதி மட்டும் இருந்தால் உடனொத்த தொடர்புடைய வரிசைகளின் அ.க.5-20 உடனொளிர்தல் 305 பண்புகள் பெரும்பாலும் மாறுவதில்லை. ஆனால் ஒன்றிற்கு மேற்பட்ட வினைப்படு தொகுதிகள் இருந் தால் அவற்றின் பண்புகள் அவற்றிற்கிடைப்பட்ட தொலைவைப் பொறுத்திருக்கும்; ஆனால் அவற்றிற் கிடைப்பட்ட தொலைவு மிகுதியாக இருந்தால் பண்பு கள் பெருமளவு மாறுபடுவதில்லை. எஸ். நாகராஜன் gr Coorg. R.O.C Norman and D.J. Wadington, Modern Organic Chemistry, Second Edition, ELBS, London, 1975; R.T. Morrison and R.N.Boyd, Organic Chemistry Third Edition, Prentice Hall India, New Delhi, 1975. உடனொளிர்தல் பல பொருள்கள் குறைந்த அலை நீளமுள்ள கதிர் வீச்சுகளை (x,uv- கதிர்கள்) உறிஞ்சிக் கண்ணுக்குப் புலப்படும்படியாக ஒளிவிடுகின்றன. இதற்கு உறிஞ்சி ஒளிர்தல் அல்லது உடனொளிர்தல் (fluorescence) என்று பெயர். காட்டாக, கால்சியம் ஃபுளூரைடு, இயோசின் போன்ற சாயப்பொருள் கரைசல்கள், அயோடின் ஆவி ஆகியவை கதிர்வீச்சிற்குட்படின் அவை ஒளிக்கதிர்களை உறிஞ்சி உடனொளிர்கின்றன. உடனொளிர்தல் நின்றொளிர்தலைப் (phosphore- scence) போல் அல்லாமல் கதிர்வீச்சு நிறுத்தப்பட்ட வுடன் நின்றுவிடும் இயல்பைக் கொண்டது. ஸ்டோக் என்ற அறிவியலார் கருத்துப்படி உடனொளிர்தலில் வெளிப்படும் ஒளியின் அலை நீளம், பாய்ச்சப்பட்ட ஒளியின் அலை நீளத்தை விட மிகுதியாகும். அதாவது வெளிப்படும் ஒளியின் ஆற்றல் குறைவு. ஆனால் சிற்சில உடனொளிர்தலில் வெளிப்படும் ஒளியின் அலைநீளம் குறைவாக இருப் பதும் உண்டு. இதற்கு ஸ்டோக் எதிர்ப் பண்பு எனப் பெயர். அணு அல்லது மூலக்கூறை உயர் ஆற்றல் மட்டத்திற்குக் கிளர்வுறச் செய்தால் ஏறக்குறைய 10 நொடியில் மிகையான ஆற்றல் உடனொளிர் தலாக வெளிப்படுகிறது. அணுக்களில் உறிஞ்சப்பட்ட ஒளியின் அலை நீளமும், வெளிவிடப்பட்ட ஒளியின் அலை நீளமும் ஒன்றேயாதலால் இதனை உடனிசைவு உடனொளிர்தல் எனலாம். சான்றாகப் பாதரச ஆவியில் அதன் அணுக்கள் தாழ் ஆற்றல் நிலையில் உள்ளன. இவற்றின் மேல் புறஊதாக் கதிர்களைச் செலுத்தினால் இவ்வணுக்கள் 2537 A அலை நீளக் கதிர்களை உறிஞ்சிக் கிளர்வுறு நிலையை எய்து கின்றன. ஆவியின் அழுத்தம் குறைவாக இருக்கை யில் அணுக்களிடையே மோதல்கள் இரா எனவே, .