பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடுக்கணத்து இடைப்பொருள்‌ 313

மீன்களால் தள்ளப்பட்ட பகுதிகளாகவும் இருக்க லாம் எனக் கருதப்படுகிறது. உடுக்கண இடைவளிமம் (inter stellar gas). வளிமங்கள் உடுக்கண இடைப்பொருளின் பெரும் பகுதிகளாக இருந்தபோதிலும் விண்மீன்களிலிருந்து வரும் ஒளியை இலை மறைப்பதில்லை. இவற்றின் வழியே ஒளி ஊடுருவி வருவதால். விண்மீன் ஒளி யால் இவை தெரிவதில்லை. ஆனால் சில இடங்களில் உடனொளிர்தலினால் (fluorescence) இவை வெளிச்ச மாக மின்னுகின்றன. இந்த வளிமங்கள் விண்மீன் நிறமாலையில் உறிஞ்சல் கோடுகளை உண்டாக்குவ துடன் கதிர்வீச்சு அலைகளையும் வெளியிடுகின்றன. மிகுதியான வெப்பமுள்ள விண்மீன்களுக்கு அருகேயுள்ள இடைப்பொருளில்ஹைட்ரஜன் வளிமம், விண்மீன்களிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களால் அயனிகளாக்கப்படுகின் றன. இவ்வாறு அயனிகளாக் கப்பட்ட ஹைட்ரஜன் மிகுதியாக ஒளிர்கின்றது. இவற்றிற்கு வெளிவிடும் ஒண்முகிற்படலம் எனப் பெயர். இங்கு வளிமத்தின் அடர்த்தி மிகுதியாக இருக்கும். ஓரியன் மண்டலத்திலுள்ள வட அமெ ரிக்க ஒண்முகிற்படலமும், தனுசு விண்மீன் குழுவில் உள்ள உப்பங்கழி ஒண்முகிற்படலமும் ஒளிரும் ஒண் முகிற்படலங்களுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். அயனிகளாக்கப்படாத ஹைட்ரஜன் கண்களுக்குப் புலனாவதில்லை. ஆனால் இவை, விண்மீன் நிற மாலையில் உறிஞ்சல் கோடுகளை மிகத் தெளிவாக உண்டாக்குகின்றன. இடைப்பொருள்களிலிருந்து வரும் வெவ்வேறு வகைக் கதிர் அலைகள் மூலம், அங்கு உயிரினங்கள் தோன்றுவதற்குக் மாக உள்ள நீர், அம்மோனியா, ஆல்கஹால், கார் பன் மோனாக்சைடு போன்ற பல பொருள்கள் உள்ள நிலை புலனாகிறது. காரண விண்மீன்களின் பிறப்பும் இறப்பும். அண்டத்தின் இயக்கம் உடுக்கணத்து இடைப்பொருளில்தான் கொடங்குகிறது. முதலில் அண்டவெளியில் புரோட் டான் என்ற நேர்மின்னூட்டத் துகள்களும் எலெக்ட் ரான் என்ற எதிர் மின்னூட்டத் துகள்களும் எங்கும் பரவி இருந்தன. இவை ஒன்றோடு ஒன்று ஈர்க்கப் பட்டு நெருங்கும்போது ஒரு புரோட்டானை மையங் கொண்டு ஓர் எலெக்ட்ரான் சுழல ஆரம்பிக்கிறது. இச்சேர்க்கை ஒரு ஹைட்ரஜன் அணுவாகும். ஈர்ப்பு விசையால் இவ்வணுக்கள் ஒன்று சேர்ந்து பெரிய மேகமாகின்றன. றன. ஏறத்தாழ ஆயிரத்து அறுநூறு கோடி கிலோ மீட்டர் விட்டங்கொண்ட மேகங்கள் சுருங்கிச் சுருங்கி ஒரு விண்மீனாகும். ஈர்ப்பு விசை எப்பொழுதும் தொடர்ந்து இயங் கிக் கொண்டிருப்பதால் மிகப் பெரிய ஹைட்ரஜன் மேகமண்டலம் சுருங்குகிறது. சுருங்கிய நிலையில் ஈர்ப்பு விசை மேலும் அதிகமாகிறது. ஹைட்ரஜன் அணுக்கள் மிகவும் இறுக்கப்படுவதால் வெப்பம் உடுக்கணத்து இடைப்பொருள் 313 அதிகமாகிறது. 50,000 C வெப்பநிலை அடையும் போது ஹைட்ரஜன் அணுக்கள் வேகமாக மோதிக் கொள்கின்றன. இவ்விதம் பல கோடி ஆண்டுகள் சென்றபின் வெப்பம் கோடி டிகிரி செல்சியசாக உயருகிறது. இப்பொழுது நான்கு புரோட்டான்கள் ஒன்று சேர ஹீலியம் என்ற புதிய வளிமம் உண்டா கிறது. இந்நிகழ்ச்சிக்கு அணுப்பிணைவு (atomic fusion) எனப் பெயர். ஹீலியம் அணுக்கள் உண் டாகும் போது அதிக வெப்பமும், கதிர்களும் வெளி யிடப்படுகின்றன. இது ஹைட்ரஜன் குண்டு வெடிக் கும் செயலைப் போன்றதாகும். ஒரு ஹைட்ரஜன் குண்டு வெடிக்குபோது ஒரு சில கிலோகிராம் ஹீலியம் மட்டுமே உண்டாகிறது. ஆனால் ஒரு விண்மீனின் மையத்தில் ஒரு வினாடிக்கு ஐம்பத்தாறு கோடிடன் ஹீலியம் உற்பத்தியாகிறது. வெளி நோக்கி உண்டாகும் அணுவெடிப்பும் உள்நோக்கி இழுக்கும் ஈர்ப்பு விசையும் ஒன்றுக்கொன்று எதிராக இயங்க ஒரு சமநிலை ஏற்படுகிறது. இந்தச் சமநிலையில் தான் விண்மீன்கள் கோளம் போன்ற உருவை அடை கின்றன. சூரியனும் ஒரு விண்மீனாகும். இதன் விட்டம் பதினாறுலட்சம் கிலோ மீட்டராக உள்ளது. விண்மீனின் உட்பகுதியில் அணுவெடிப்பு, பல கோடி ஆண்டுகள் நடைபெற்ற பின், அதன் மையத்தில் ஹீலியச் சாம்பல் என்ற ஹீலிய வளிமம் மட்டுமே இருக்கும். பல விண்மீன்கள் மிகவும் வெப்பமாகவும் மிகப் பெருத்தும் நீலநிறமாகவும் விரைவில் எரியும் தன்மை உடையனவாகவும் இருக்கும். இவை நீலப் பெருவிண் மீன்கள் (blue giants) எனப்படும். இதற்கு ரைகல் விண்மீன் எடுத்துக்காட்டாகும். சில விண்மீன்கள் இயல்பான வெப்பத்துடனும், மஞ்சள் நிறத்துடனும் சூரியனைப் போன்று பருமன் கொண்டும், இயல்பாக எரியும் தன்மையுடனும் இருக்கும். சில விண்மீன்கள் குறைந்த வெப்பத்துடனும் குறைந்த எடைகொண்டும். ஆனால் மிகப் பெருத்தும், சிவப்பு நிறத்துடனும், மெதுவாக எரியும் தன்மை கொண்டும் இருக்கும். இவை சிவப்புப் பெருவிண்மீன்கள் எனப்படும். இதற்கு, திருவாதிரை விண்மீன் எடுத்துக்காட்டாகும். 1913 இல் ரசல் என்ற அமெரிக்க வானியல் வல்லு நர் விண்மீன்களை வகைப்படுத்தும் முறையில் விண் மீன்களின் வெப்பத்தையும் ஒளியையும் இணைக்கும் வரைபடம் அமைக்கும்போது வரைபடம் கீழ்நோக்கிச் சீராக வளைந்து இறங்குவதைக் கண்டார். இவ் வளைவரைக்கு ரசல் வரைபடம் எனப் பெயர். பெரும்பாலான விண்மீன்கள் இக் கோட்டில் இடம் பெறுகின்றன. அனைத்து வகை விண்மீன்களும் போதுமான காலம் (கோடிக்கணக்காண ஆண்டுகள்) எரிந்தபின் ஹைட்ரஜனில் பத்து விழுக்காடு ஹீலியமாக மாறு கின்றது. இப்போழுது விண்மீன்கள் பருமனாகவும்