பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 உண்ணி

330 உண்ணி உண்ணி உலகிலுள்ள உயிரினங்களில் எண்பது விழுக்காடு கணுக்காலிகளே (arthopoda) ஆகும். இவை ஆறு வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் உண்ணிகள் (ticks) ஐந்தாம் வகுப்பாகிய வகுப்பில் உள்ள அகாரினா என்ற சார்ந்தவை. சிலந்தி வரிசையைச் ஆகிய உண்ணிகள் பெரும்பாலும் தாவரங்களிலோ விலங்குகளிலோ ஒட்டுண்ணிகளாகவே வாழ்கின்றன. சில வகை உண்ணிகள் மனிதனிடமும் அவனால் வளர்க்கப்படும் ஆடு, மாடு, நாய் போன்ற விலங்கு களிடமும் கொடிய நோய்களைப் பரப்புகின்றன. உண்ணிகள் இந்த விலங்குகளின் தோலிலும் தசை இரத்தத்தை உறிஞ்சு யிலும் இருந்துகொண்டு கின்றன. இவை இக்சோடிடே, அர்காசிடே இரு குடும்பங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இக்சோடிடே. இக்குடும்பத்தைச் சார்ந்த உண்ணி களின் வாய் உறுப்புகள் நீளமாக அமைந்திருக்கும். உறுதியானவை; கவசமேல் தோல்கள் இல்லை; உடலின் மேல் பகுதி கைட்டின் சட்டகத் தால் ஆனது; மலப்புழை சிறியது; உணர்கொம்பு மிகவும் நீளமாக இருக்கும். இக்குடும்பத்தில் இக் சோடஸ், ஹயலோமா, ஆம்பிளியோம்மா, ரிபிசெல் பாலஸ், ஹீமோஃபைசாலிஸ், டெர்மாசென்டர் ஆகிய உண்ணிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. கண்கள் இக்சோடஸ். இந்தவகை உண்ணிகள் பெரும் பாலும் பாலூட்டிகளில் ஒட்டுண்ணிகளாக இருக் கின்றன. இக்சோடல் ரிசினஸ் என்பது கால்நடை ஒட்டுண்ணி ஆகும். இக்சோடஸ் பெர்சல்கேட்டஸ், இக்சோடஸ் ஹாலோசைலஸ் ஆகியவை கால்நடை களிடமும், நாய், பூனைகளிடமும் ஒட்டுண்ணி களாக வாழ்கின்றன. 2800 ஹயலோமா. இந்த வகை உண்ணிகளின் மேல் தோல் மிகவும் கடினமாக இருக்கும். நன்கு முதிர்ச்சி யடைந்த உண்ணிகள் பெரியவகைப் பாலூட்டி களிலும் நன்கு முதிராதலை எலி, பறவைகளிடமும் ஒட்டுண்ணிகளாக தீங்கு வாழ்கின்றன. இவை தரும் வைரஸ்களை உடலில் சுமந்து சென்று பாலூட்டி, பறவை இவற்றில் ரிக்கெட்சியா என்னும் நோயைப் பரப்புகின்றன. ஆம்பிளியோம் மா. இவ்வுண்ணிகள் நட்சத்திர உண்ணிகள் எனப்படுகின்றன. ஏனெனில், இவற் றின் மேல் தோலில் நட்சத்திர வடிவில் வெண் புள்ளிகள் காணப்படுகின்றன. இவ்வுண்ணிகள் மனி தனுடைய தோலில் புற ஒட்டுண்ணிகளாக வாழ் கின்றன. மேலும் முயல், நாய், பூனை ஆகியவற் றிலும் இவை ஒட்டுண்ணிகளாக வாழ்கின்றன. இவை கால்நடைகளின் காதுப்பகுதியில் அதிகமாகக் காணப்படும். ரிபிசெஃபாலஸ். இவ்வுண்ணிகள் க மண்ணின் நிறத்தை ஒத்துள்ளமையால் பழுப்பு நிற உண்ணிகள் உலகெங்கும் எனப்படுகின்றன. இவை காணப் பட்டாலும் முக்கியமாக ஊனுண்ணிகளிடமே (நாய், வகைகள்) ஒட்டுண்ணியாக வாழ்கின்றன. வை பௌடோனியஸ் காய்ச்சலை நாய்களிடம் பரப்புகின்றன. பூனை ஹீமோஃபைசாலிஸ். இவை மிகச்சிறிய உண்ணி களாகும். இவை சிறிய பாலூட்டி, பறவை இவற்றில் ஒட்டுண்ணிகளாக வாழ்கின்றன. இவ்வகை உண்ணி கள் முயல்களிடம் புண்களைத் தோற்றுவிக் கின்றன. புண்கள் சிறிய புள்ளிகள் போலத் தோற்ற மளிக்கும். எனவே இது புள்ளிக்காய்ச்சல் எனப் படுகிறது. இந்நோயால் தாக்கப்பட்ட முயல்கள் ஒரு வாரத்திற்குள் இறந்து விடுகின்றன. இவ்வகைக் காய்ச்சல் மனிதர்களுக்கு வரும் டைபாய்டு போல இருப்பதால் உண்ணி டைஃபஸ் (tick typhus) எனப் படுகிறது. டெர்மாசென்டர். மனிதர்களுக்குத் தீமை விளை விக்கும் உண்ணிகளில் இவை பெரும் பங்கு வகிக் கின்றன. இவை மர உண்ணிகள் எனப்படுகின்றன. இவ்வுண்ணிகள் மனிதர்களுக்கு மிகவும் தீமை தரக் கூடிய நோய்களை அதிக அளவில் பரப்புவதால் இவை உண்மையான நல்வாழ்வுச் சாபப்பெட்டி (veritable pandora's box) எனப்படுகின்றன. இவ்வுண்ணிகள் வைரஸ்கள் மூலமாகப் புள்ளிக் காய்ச்சல், தோலில் சிறுகாயங்கள் வெள்ளைவரி அல் லது இரத்தச்சோகை, புருசெல்லோசிஸ், முஸ்நோய், மஞ்சள் காய்ச்சல், மூளை வீக்கம் போன்ற கொடிய நோய்களைப் பரப்புகின்றன. இந்நோய்களால் தாக் கப்பட்டவர்களுக்கு முதலில் கை, கால்கள்