பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 உண்ணும்‌ முறை

334 உண்ணும் முறை தகடு மேண்ட்டில் மடலுடன் இணைந்துள்ளது. வெளிப்படலத்தின் உள்தகடும். உட்படலத்தின் வெளித்தகடும் செவுள் அச்சுடன் இணைந்துள்ளன. அமைந்துள்ள நாடா இவை பக்கத்தில் போன்ற ணையா ஒவ்வொரு படலத்தின் இரு தகடுகளும் குறுக்கு இணைப்புகளால் இணைக்கப்பட்டுள்ளன. முழுத்தகடுகள் அல்ல. ஒன்றுக்குப் ஒன்றாக பட்டையான செவுள் இழைகள் இணைந்து தகடு போன்ற தோற்றம் பெற்றுள்ளன. செவுள் இழை கள் முழு நீளத்திற்கும் முழுமையாக மையால் செவுள் இழை தகட்டில் ஆங்காங்கே யிடைத் துளைகள் உள்ளன. இவற்றைச் செவுள் தகட்டுத் துளைகள் என்பர். மேண்ட்டில் மடலின் உட்பரப்பிலுள்ள குற்றிழைகளும், செவுள்தகட்டி லுள்ள குற்றிழைகளும் அசைவதால் உட்செலுத்து துளை வழியாக நீர் மேண்ட்டில் குழிக்குள் செல் கிறது. இந்த நீரோட்டம் செவுள்தகட்டுத் துளைகள் வழியாகச் செவுள் படலத்தின் இரு தகடுகளுக் கிடையே நுழைந்து மேல்நோக்கிச் சென்று, பின்னர் பின்னோக்கிச் சென்று இறுதியாக வெளிச்செலுத்தும் துளை வழியாக மேண்ட்டில் குழியைவிட்டு வெளி யேறுகிறது. அப்போது செவுள் தமனியிலுள்ள இரத்தம் ஆக்சிஜனேற்றம் பெறுகிறது. இந்த நீர் செவுள் தகடுகளின்மேல் படும்போது, அந்நீரிலுள்ள நுண் உணவுப் பொருள்கள், அத்தகடுகளின் மேற் பரப்பிலுள்ள மெல்லிய சிலேட்டுமப் பொருளின் மேல் ஒட்டிக்கொள்கின்றன. செவுளிழைகளின் முகப்புக் குற்றிழைகள் (frontal cilia) மேல்நோக்கி அல்லது கீழ்நோக்கி அசைந்து சிலேட்டுமத்தையும் அதனுடன் ஒட்டிக் கொண்டுள்ள உணவுப்பொருள் களையும் நகர்த்துகின்றன. வெளிப்படலத்தின் வெளித் தகட்டில், உணவுப்பொருள் சிலேட்டுமத் தொகுப்பு மேல்நோக்கி நகர்ந்து, தகட்டின் மேல் விளிம்பு மேண்ட்டில் போர்வை இணையும் இடத்தை அடைந்து, அங்கிருந்து முன்னோக்கி நகர்ந்து இரு உதட்டுத் தகடுகளுக்குமிடையே செல்கிறது. வெளிப்படலத்தின் உள் தகட்டில் உண்டாகும் உணவுப்பொருள் சிலேட்டுமத் தொகுப்பு மூலம் மேல்நோக்கி நகர்கிறது. இத்தகட்டின் மேல்விளிம்பை அடைந்ததும் அங்கிருந்து உட்படலத்தின் வெளித் தகட்டை அடைந்து கீழ்நோக்கி நகர்ந்து அதன்கீழ் விளிம்பிற்கு வருகிறது. உட்படலத்தின் உள்தகட்டின் உணவுத்தொகுப்பு, கீழ்நோக்கி நகர்ந்து கீழ் விளிம்பை அடைகிறது. உட்படலத்தின் கீழ்விளிம்பில் ஒரு நீள் வரிப்பள்ளம் உள்ளது. உணவுத் தொகுதி இப் பள்ளத்தை அடைந்ததும் முன்னோக்கிச் சென்று செவுளின் முன் முனையில் இரு உதட்டுத் தகடு களுக்கு இடையில் செல்கிறது. உதட்டுத் தகடுகளுக்கு இடையில் சரியான உணவுத் துகள்கள் தேர்வு செய்யப்பட்டு வாய் வழியாக உணவுக்குழலுக்குள் செலுத்தப்படுகின்றன. உணவாகாத் துகள்கள் கீழ்ப் பக்கம் தள்ளிவிடப்படுகின்றன. அத்தகைய துகள்கள் மேண்டில் குழியின் அடிப்பகுதியை அடைந்து பின்னர் அங்கிருந்து வெளியேற்றப்படுகின்றன. கலப்பைக் ஏ காலிகளின் கிளை இரைப்பையுடன் ஓரிணைக் குழாய்கள் இணைந்துள்ளன. இக்குழாய் கள் மீண்டும் மீண்டும் பலமுறை பல களாகப் பிரிகின்றன. அதனால் ஒரு பெரும் நுண் குழாய்த் தொகுதி உண்டாகிறது. இத் தொகுப் பின் நுண்குழாய்களைச் செரிமானக் குழாய்கள் எனலாம். னென்றால் இக்குழாய்களின் சுவர்ச் செல்கள் நுண்ணிய உணவுப்பொருள்களை விழுங்கு கின்றன. அந்தச் செல்களுக்குள்ளேயே உணவுச் செரிமானம் நடைபெறுகிறது. இந்த உணவுச் செரி மானத்திற்குச் செல்லகச் செரிமானம் (intracellular digestion) என்று பெயர். உணவுத்தொகுப்பு, செவுள் தகடுகளின் மேற்பரப்பில் நகர்ந்து செல்லுதல், கீழ் நீர்வரிப்பள்ளத்தில் முன்னோக்கிச் செல்லுதல், இரு உதட்டுத் தகடுகளுக்கு இடையில் உணவுத்துகள்கள் தேர்வு செய்யப்படுதல் போன்ற செயல்கள் அனைத் தும் குற்றிழைகளின் இயக்கங்களால் நடைபெறு கின்றன. தசை அசைவுகளால் உண்ணுதல். சொறிமீன்கள் எனப்படும் குழிக் குடலிகளில் தசை அலைவுகளின் உதவியால் உண்ணுதல் நடைபெறுகிறது. உடல் தசைகள் சுருங்கும்போது உடலின் உட்குழியிலுள்ள நீர் வாய் வழியாக வெளியேறுகிறது. சுருங்கிய தசைகள் மீண்டும் விரிவடையும்போது வாய் வழி யாக நீர் உள்ளே செல்கிறது. இந்த நீருடன் உட் செல்லும் நுண்ணுயிரிகளே இவற்றின் உணவாகும். சீப்புச் செவுளிகளும் இந்த முறையிலேயே உண் கின்றன. பெரும்பொருள் உண்ணுதல். பெரும்பாலான விலங் கினங்கள் நுண்பொருள்களைவிடச் சற்றுப் பெரிய உணவுத்துக்கள்களை அல்லது ஓரளவுக்குப் பெரியன வாக உள்ள உணவுப் பொருள்களை உண்ணுகின் றன. நுண்ணுயிருண்ணிகள் யாவும் நீரில் வாழும் விலங்குகளாகும். நிலத்தில் வாழும் விலங்குகளால் அத்தகைய நுண் உணவுப்பொருளைத் திரட்டி உணவாகக் கொள்ள முடிவதில்லை. ஊடகத்துடன் உணவு கொள்ளுதல். மண்புழுக்கள் மண்ணில் வளை தோண்டி அவற்றில் வாழ்கின்றன. மண்புழு தன் தொண்டையுள் மண்ணை உறிஞ்சி வளை தோண்டுகிறது. இந்த மண் உணவுப்பாதை வழியாகப் பின்னோக்கிச் சென்று மலப்புழை வழியாக வெளியேறுகிறது. இந்த மண்ணில் உள்ள உயிரிப்பொருள்தான் மண்புழுவிற்கு உணவாகிறது. அரெனிக்கோலா போன்ற பல்சுனைப் புழுக்களும் தொண்டையின் உதவியால் மண்ணை உட்கொண்டு