பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்ணும்‌ முறை 335

உண்ணும் முறை 335 அதிலுள்ள உயிரிப்பொருள்களை உணவாகக் கொள் கின்றன. யுப்போரி பியா கல்லியாநாஸ்ஸா போன்ற ஓட்டுடலிகளும் மண்ணை உண்டு அதிலுள்ள உயிரிப் பொருளை உணவாகக் கொள்கின்றன. இவை தம் வாயுறுப்புகளால் மண்ணை உள்ளே தள்ளுகின்றன. சுரண்டுதல், துளைத்தல் முறை. கடல்பிரட்டை கள். அரிஸ்ட்டாட்டல் உறுப்பினால் உணவைச் சிறு துகள்களாகச் சுரண்டி எடுக்கின் றன. மெல்லுடலி களின் தொண்டையில் அராவுநாக்கு என்னும் உறுப்பு உள்ளது. தசையியக்கத்தினால் இது முன் பின்னாக அசைக்கப்படுகிறது. இந்த அராவு நாக்கின் உதவியால் உணவுப்பொருளை நுண்துகள்களாக மாற்றுகின்றன. இவை செல் அகச் செரிமானத்திற்கு உள்ளாகும் அளவிற்கு நுண் துகள்களாகவுள்ளன. டெரிடோ என்னும் தகட்டுச்செவுள் மெல்லுடலி கப்பல், படகுகளின் மரப் பகுதிகளைத் துளைத்து மரத் துளைகளில் வாழ்கிறது. துளைக்கப்படும் மரத் தூ ளே இதன் உணவாகும். கறையான்கள் தம் உறுதியான கடினத்தாடைகளால் மரத்தைத் துளைத்து வாழ்கின்றன. மரத்துகளே இவற்றிற்கு உணவாகும். பிடித்துண்ணும் உறை. சில விலங்குகளில் காணப் படும் உண்ணும் உறுப்புகள் இரையைப் பிடிப் பதற்கு மட்டுமே பயன்படும். ஆனால் வேறு சில விலங்குகளில் இவை உணவைப் பிடிப்பதற்கும். பிடித்த உணவைச் சிறு துகள்களாக மாற்றுவதற்கும் பயன்படுகின் றன. வேறு சிலவற்றில் உணவைப் பிடித்தலுக்குப் பயன்படும் உறுப்புகளே செரிமான உறுப்புகளாகவும் செயல்படும். இந்த அடிப்படை யில் பிடித்துண்ணும் முறையில் மூன்று மூன்று வகைகள் உள்ளன. குழிக்குடலிகளின் கொட்டும் செல்கள், சில தட்டைப் புழுக்களின் வெளியே நீட்டக்கூடிய தொண்ட, பைல்சுணைப்புழுக்களின் தாடைகள், கழனி நத்தையில் காணப்படும் பற்கள், தலைக் காலிகளின் கைநீட்சிகள் போன்றவை உணவைப் பற்றிப் பிடிக்க மட்டுமே உதவுகின்றன. பல் பூச்சிகள், ஓட்டுடலிகள், அராக்னிடுகள், காலுயிரிகள் ஆகியவற்றின் வாயுறுப்புகள், மெல் லுடலிகளின் அராவுநாக்கு. முதுகெலும்புடைய வற்றின் பற்களுடன் தாடைகள் ஆகியவை உணவைப் பற்றிப் பிடிக்கவும் பின்னர் துகள்களாக அரைக்கவும் பயன்படுகின்றன. அதனைத் நட்சத்திர மீன்கள் என்னும் முள்தோலிகள் தங்கள் குழாய்க் கால்களால் கடல் மட்டிகளின் ஓடு களைத் திறக்கின்றன. அதே நேரத்தில் இரைப்பை வெளியே நீண்டு இரையைச் சூழ்ந்து கொள்கிறது. வெளியே பிதுங்கியுள்ள இரைப்பையில் உணவு இருக்கும்போதே அது செரிக்கப்பட்டு உள் உறிஞ்சப் படுகிறது. ஊனுண்ணி வயிற்றுக்காலிகள், தலைக் காலிகள் போன்ற வேறு சில விலங்கினங்களிலும் உணவைப்பிடித்த உறுப்புகளில் அது உள்ளபோதே ஓரளவு புறஉணவுச் செரிமானம் நடைபெறுகிறது. நீர்மப்பொருள் உட்கொள்ளுதல். அந்துப்பூச்சிகள், வண்ணத்துப்பூச்சிகள், தேனீக்கள் போன்றவை நீர்மப்பொருளை உணவாக உட்கொள்கின்றன. இவற்றின் வாயுறுப்புகள் நீர்மப்பொருளை உறிஞ்சி உணவுக்குழலுக்குள் செலுத்துதற்கு ஏற்ப அமைந்து உள்ளன. மூட்டைப்பூச்சி, பேன், கொசு போன்றவை பிற விலங்குகளின் தோலைத் துளைத்து அவற்றின் இரத்தக்குழாய்களிலுள்ள இரத்தத்தை உறிஞ்சு கின்றன. இவற்றின் வாயுறுப்புகள் துளைக்கும் கருவியாகவும், உறிஞ்சு குழலாகவும் மாற்றம் பெற்றுள்ளன. கொக்கிப்புழுக்கள், அட்டைகள், வட்டவாயின (cyclostome) போன்றவை தம் கெட்டி யான தாடைகளாலும் பற்களாலும் பிற விலங்கு களின் தோலில் காயம் ஏற்படுத்தி ஏற்படுத்தி அக்காயத்தி லிருந்து வெளிவரும் இரத்தத்தை உறிஞ்சி காள்கின்றன. துளை ளைத்து உறிஞ்சும் விலங்குகளும், காயப் படுத்தி உறிஞ்சும் விலங்குகளும், இரத்தத்தை உறிஞ்சும்போது அவற்றின் உமிழ்நீர் இரத்தத் துடன் கலக்கிறது. அதனால் இரத்தம் உறையாமல் தொடர்ந்து உறிஞ்சப்படுகிறது. வீட்டு ஈக்கள் கரை யும் பொருள்களைக் கரைசல்களாக்கியபின் அவற்றை உறிஞ்சுகின்றன. உணவின்மேல் உட்கார்ந்ததும்