பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/365

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உணர்விழக்கச்‌ செய்யும்‌ கருவி 345

வாஸ்குலார் குழாய்களில் முக்கியமாகப் புளோயம் (phloem) திசுவில் நடைபெறுவதாகும். அங்கு தூண்டு தல் நொடிக்கு 0.7 செ.மீ. தூரம் செல்லும். இலை யின் முதற்காம்பில் நொடிக்கு 26 செ. மீ. வேகத்தில் தூண்டுதல் கடத்தப்படுவதாகக் கணக்கிட்டுள்ளனர். 1916 இல் ரிக்கா என்பவர் சலனத் தூண்டுதலுக்கு ஒருவகை ஹார்மோன் காரணமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். இலைக் காம்புகள் 10-15 நிமிடத் திற்குள் மீட்சி நிலையை அடைந்துவிடும். அண்மை யில் நடந்த ஆய்வுகள் மூலம் பொட்டாசியம் அயனி களும் தொடர்ந்து குளோரைடு அயனிகளும் மோட்டார் செல்களின் செயலுக்குக் காரணமா கின்றன என்பது தெரிய வருகிறது. ஸ்னோ என்பார் மைமோஸா செடியில் அசைவு களை மூன்றாகப் பிரித்துள்ளார். காயப்படுத்தாமல் தூண்டுதல் ஏற்படுத்துவது குறைவுவேகக் கடத்தல் என்பதாகும். காயப்படுத்துவதால் தூண்டுதல் என்பது எரிப்பதால் ஏற்படும் தூண்டுதலாகும். இங்கு தூண்டு தலுக்குக் காரணமான பொருள்கள் ஸைலம் மூலம் கடத்தப்படுகின்றன. சிற்றிலைகள் நீக்கப்படுவதால் ஏற்படும் தூண்டு தல் என்பது மிகுவிரைவு வேகக் கடத்தல் ஆகும். ஸ்னோவின் இவ்வகைப்பாட்டில் அசைவைப் பற்றிய முழு உண்மை தெரியாவிட்டாலும் மேற்கொண்டு நடத்த வேண்டிய ஆய்வுகளுக்கு ஒரு பயனுள்ள அடிப்படையாக அமைந்துள்ளது என்று கருதலாம். தி. ஸ்ரீகணேசன் உணர்நிலை மனிதன் விழித்திருக்கும்போது, உளவயத் தூண்டல் களுக்கு மறுவினை அளிக்கும்போது. தன் நடத்தை யாலும் பேச்சாலும், தன்னைப் பற்றியும் தன் சூழ் நிலையைப் பற்றியும் முழுமையாகத் தெரிந்திருக் கிறான் என வெளிக் காட்டுவதே உணர்நிலை {consciousness) ஆகும். இந்த இயல்பான நிலை, ஒவ் வொரு நாளும் மாற்றமடையலாம். துடிப்புடன் ஆழ்ந்த சிந்தனையில் இருப்பவர் சில சமயம் சோர் வடைந்து, துயில் நிலையை அடைகிறார். இதே உணர் நிலை தூக்கத்தின்போது மாற்றமடைகிறது. அப்போது முழுமையாக நினைவிழந்தவரைப்போல் இல்லாமல், தூண்டல்களுக்கு மறுவினை புரிகிறார். மீண்டும் மீண்டும் தூண்டப்பட்டால் இயல்பான உணர் நிலையை அடைகிறார். இதே உணர் திறன் கவனக்குறைவான, குழப்ப யான, மந்தமான நிலைகளை அடையலாம். அப் மான ล உணர்விழக்கச் செய்யும் கருவி 345 போது தன் சூழ்நிலையைப் பற்றி அதிகமாகக் கவலைப்படுவதில்லை. குழப்ப நிலையில் திட்டவட்ட முடிவு எடுக்க முடிவதில்லை. வேகமாகவும், லரிசையாகவும் செயல்பட முடிவதில்லை. பெரிதும் குழப்பமடைந்த கவனக் குறைவான ஒருவர் மிக எளிய ஆணைகளுக்குக் கீழ்ப்படிகிறார். அப்போது சிந்திக்கும் திறன் இல்லாமல் போகிறது. அவரது பேச்சும், சில சொற்களுடன் முடிந்துவிடும். உணர் திறனில் ஏற்படும் மாற்றங்களை மூளை மின்னலை வரைபடம் மூலம் தெரிந்து கொள்ளலாம். இயல்பான விழிப்பு நிலையில், அலைவு எண்கள், ஒரு வினாடிக்கு 8-15 (ஆல்பா-லயம்) ஆகவும் ஒரு வினாடிக்கு 16-25 (பீட்டா-லயம்) ஆகவும் காணப் படுகின்றன. பல நோய் நிலைகளில் (ஆக்சிஜன் குறைவு, சர்க்கரை, குறை இரத்தம், அமில மிகை நிலை, கார மிகை நிலை, மிகையான அல்லது குறைவான பொட்டாசியம், மிகையான அம்மோனியா, தயமின் மற்றும் நிக்கோடினிக் அமிலம், வைட்டமின் B. பென்ட்டோதெனிக் அமிலம், பைரிடாக்சின் குறைவு நிலை) உணர்திறன் மாற்றமடைகிறது. 100 கிராம் மூளைத் திசுவுக்கு ஆக்சிஜன் இரண்டு மில்லி லிட்டருக்குக் குறைந்தால் உணர் திறன் சீர்குலைகிறது. சர்க்கரைக் குறை இரத்த நிலையில் பெருமூளை இரத்த ஓட்டம் இயல்பாக இருந்தாலும் பெருமூளை வளர்சிதை மாற்ற நிலையில் குறைந்து விடுகிறது. இத்தகைய துணை நொதிகளின் குறைபாட்டால், தயமின், Bடி குறைநிலையில், பெரு மூளை இரத்த ஓட்டம் சீராக இருந்தாலும், பெரு மூளை வளர்சிதைமாற்றம் குறைவாக இருந்தாலும் உணர்திறன் குறைகிறது. உடல் வெப்பம் மிகவும் அதிகரித்தாலும் (41°C க்கு மேலாக) மிகவும் குறைந் தாலும் (35°C க்கு கீழே) முழுமையாக உணர்திறன் இல்லாமல் உணர்விழப்பு நிலை உண்டாகிறது. இதற்கு மேலும் பல காரணங்கள் உண்டு. இதற் குரிய காரணத்தை அறிந்து மருத்துவம் அளித்தால், உணர்திறன் மீண்டும் உண்டாகிறது. உணர்விழக்கச் செய்யும் கருவி மு. ப. கிருஷ்ணன் பழங்கால மனிதர்கள் விலங்குகளை வேட்டையாடி இறைச்சியை உணவாகப் பயன்படுத்தினர். பழைய முறைப்படி உணவுக்காக விலங்கினங்களைக் கொல்லுவதற்குக் கோல், சம்மட்டி, கோடரி, மரச் சுத்தி முதலிய கருவிகளைப் பயன்படுத்தினர். இவ் வகைக் கருவிகள் மூலம் கொல்லும்போது விலங்