பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/377

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உணவு உற்பத்திச்‌ சட்டம்‌ 357

கூடிய உணவு தயாரித்தல், விற்பனை செய்தல், வழங்குதல் முதலியவை தடை செய்யப்பட்டன. போலியான கலப்பட உணவைப் பற்றித் தகவல் அறிய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட் டன. உணவின் தரத்தை முடிவுசெய்ய மையக்குழுமம் ஒன்று அமைக்கப்பட்டு, மைய மாநில அரசுகளுக்கு ஆலோசனை வழங்கவும் வழிசெய்யப்பட்டது. உணவு ஆய்வாளர்களை அமர்த்தல் பணியின் தன்மை அறிதல் முதலியன முடிவு செய்யப்பட்டன. மாநில அரசுகள். ஆய்வுப் பகுப்பாய்வாளர்களை அமர்த்தின. கர்நாட கத்தில் நிறுவப்பெற்ற மைய உணவுப் பகுப்பாய்வு நிலையம் தென்னகத்திலுள்ள கலப்பட உணவுகளைப் பகுப்பாய்வு செய்து கண்காணித்து வருகின்றது. இந்த நிறுவனம் உணவுப் பொருள்களின் தூய்மை யையும், நச்சுப் பொருள், வண்ணப் பாதுகாப்பு வேதிப் பொருள், உணவு நிலை பொருளின் அளவு இவற்றையும் செந்தரப்படுகிறது. மைய அரசால் நியமிக்கப்பட்ட ஒரு மையக் குழு உணவின் தரத்தை அறுதியிட்டு மைய மாநில அரசுகளுக்குப் பரிந்துரை வழங்கி வருகிறது. மைய உணவுப் பகுப்பு ஆய்வக கங்கள் நிறுவப்பட்டு அவற்றின் பணிகளும் பரிந்துரைக்கப்பட்டன. உணவுப் பொருள்களை வெளி நாடுகளிலிருந்து தகுந்த உரிமம் இல்லாமல் இறக்குமதி செய்ய இயலாது; கலப்பட உணவைத் தயாரித்தலோ, சேமித்து வைத்தலோ உரிமம் இன்றி உணவு தயாரித்தலோ விற்பதோ கூடாது. இச்சட்டத்தைச் செயல்படுத்த மைய, மாநில அரசுகள் பொது உணவுப் பகுப்பாய்வாளர்களை நியமித்து உணவு மாதிரிகளை எடுத்தல், பறிமுதல் செய்தல், ஆய்விற்கு அனுப்புதல் போன்ற பணிகளைச் செய்கின்றன. உணவு விற்பனை செய்வோர் தங்கள் பெயர், முகவரி ஆகிய தகவல்களை அளிக்க வேண்டும்; உணவு தயாரிக்குமிடம், சேமிப்பு, தூய்மை முதலான வற்றைக் கண்காணிக்க வேண்டும். குழுவின் பரிந்துரைப்படி மைய அரசு பல சட் டங்களை இயற்றலாம். உரிமம் தேவைப்படும் பொருள்கள், உரிமம் பெற வழி முறைகள், உணவின் தரத்தை நிர்ணயித்தல், உணவு உற்பத்தியிலும் விற் பனையிலும் கடுமையான வழிமுறைகளைக் கடைப் பிடித்தல், உணவைப் பதப்படுத்துதல், பெட்டிகளில் அடைத்தல் ஆகியவற்றை நுகர்வோர் எளிதில் கண்டுகொள்ளவும் ஏமாறாமல் இருக்கவும் வழி முறைகளை அறிவித்தல், கலப்பட உணவு தயாரித் தலைத் தடுத்தல், உணவு மாதிரிகளைச் சேமிக்கும் பெட்டிகள் புட்டிகளுக்கு மூடியிடுதல், குறியீடுதல் பற்றிய வழி முறைகள், உணவில் சேர்க்கப்படும் காப்புப்பொருள்கள், அவற்றைப் பயன்படுத்தும் அளவு முறைகள். உணவுடன் கலக்கப்படும் வண்ணங்கள், அவற்றின் அளவு போன்றவற்றிற்கு வழிமுறைகளையும், துள்ளது. வண்ணக் உணவு உற்பத்திச்சட்டம் 357 அதிகாரங்களையும் வகுத் நோயுள்ளவர் உணவு தயாரித்தலைத் தடுத்தல், உணவு மாதிரிகள் எடுத்தல், மூடிகளுக்கான குறியிடு தல், பகுப்பாய்விற்கு அனுப்புதல் ஆகியவை உணவு ஆய்வாளரின் பணிகளாகும். பகுப்பாய்விற்காக அனுப்பப்படும் மாதிரிகளை எடுக்கும் முறையையும் அவற்றின் அளவையும் மற்ற விவரங்களையும் தெளி வாகக் குறிப்பிட வேண்டும். அனுமதிக்கப்பட்ட கலவைகளைத் தவிர வேறு வண்ணங் களைக் கொண்டுள்ள பொருள்களை உணவுடன் சேர்க்கக் கூடாது. இயற்கை வண்ணத்தைத் தவிர வேறு வண்ணம் உணவுடன் சேர்த்திருப்பின் அது பற்றி முன் விளக்க அட்டையில் குறிப்பிட வேண்டும். வேதி வண்ணங்கள் உணவுடன் கலப்பதை இச் சட்டம் தடை செய்கின்றது. தூய உணவுப் பொருள் களில் இயற்கையாகக் காணப்படும் கலவைகளின் அளவையும் இச்சட்டம் முடிவுசெய்கிறது. கேசரிப் பருப்பு உற்பத்தி செய்வதையும் அதைக் கலப்படப் பொருளாகப் பயன்படுத்துவதையும் பழங்களைக் கனியச் செய்ய கால்சியம் கார்பைடு வளிமம் பயன் படுத்துவதையும் தடை செய்கிறது. இயற்கை மரணமெய்திய விலங்கு, பறவை முத லானவற்றின் இறைச்சி விற்பனையைத் தடை செய் கிறது. பூச்சிகளால் ஐந்து விழுக்காட்டிற்கு மேலும் பாதிப்பு ஏற்பட்ட பழம், உலர்ந்த பழம், கொட்டை முதலியவற்றை விற்பதையும் தடை செய்கிறது, உணவுப் பொருள்களை விற்கும் உரிமம் பெற விதி முறைகளை வகுத்துள்ளது. அவற்றின்படி உணவு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பாத்திரம், கருவி முதலானவை தூய்மையாக இருக்க வேண்டும். உணவு உற்பத்தியின்போது லாக்ட்டிக் அமிலம் டைடானியம் ஆக்சைடு, ஹிங்கரா போன்ற பொருள் களைப் பயன்படுத்தக்கூடாது. பூச்சிக் கொல்லி களைச் சேமித்தல் விற்பனை செய்தல் போன்ற செயல்களை உணவு உற்பத்திக் கூடத்தில் தவிர்க்க வேண்டும். உரிமம் பெற வேண்டிய உணவுப் பொருள்களையும், சேமித்தல், பதப்படுத்துதல் போன்ற முறைகளையும் இச்சட்டம் விளக்குகின்றது. உணவுப் பொருள்கள் கெடாமல் காக்கும் காப்புப் பொருள்களை உணவுடன் சேர்ப்பதில் அவற்றின் தரம், அளவு முதலியவற்றை விளக்கிக் கூறுகிறது. முதல், இரண்டாம் வகுப்புக் காப்புப் பொருள்களைப் பகுத்து அவற்றைப் பயன்படுத்த வேண்டிய முறை களையும் பரிந்துரைக்கின் றது. மணமூட்டிகளின் திறம், தன்மை, அளவு ஆகியவற்றைப் பயன்படுத்தும் முறை பற்றியும் இச்சட்டம் குறிப்பிடுகின்றது. அக்மார்க் தரக்கட்டுப்பாடு நிறுவனம், இந்திய அரசின் பொருள் விற்பனை ஆய்வுக் கண்காணிப் பாளரின்கீழ் இயங்குகிறது. வேளாண் பொருள்