பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/380

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360 உணவுக்‌ காளான்

360 ணவுக் காளான் சிப்பிக் காளான் வளர்ப்பு தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் விரைவாகப் பரவி வருகின்றது. வைக்கோல் காளான் வைக்கோல் காளானில் முக்கியமாக வால்வேலி யெல்லா வால்வேசியா வால்வேரியெல்லா எஸ்கு லெண்டா ஆகிய இரு வகைகள் உள்ளன. இவற்றுள் வால்வேரியெல்லா வால்வேசியா கூடுதல் விளைச் சலைக் கொடுக்கும் வகையாகும். 2-3 வித்துப்புட்டி தயாரித்தல். வைக்கோலை செ.மீ. நீளத்தில் சிறு துண்டுகளாக வெட்டிக் கொண்டு புட்டிகளில் முக்கால் புட்டி உயரத்திற்கு நிரப்ப வேண்டும். புட்டிக்குள் நீரை ஊற்றி வைத்து 12-16 மணி நேரத்திற்குப்பிறகு, புட்டியைக் கவிழ்த்து வைத்து நீரை வடிக்க வேண்டும். புட்டிக்குள் ஒரு குச்சியை நடுவில் நுழைத்துச் சிறிது துளை இருக்கும் படிச் செய்து அதனுள் ஏறத்தாழப் பதினைந்து கிராம் கொள்ளு அல்லது துவரைப் பொடியைச் சேர்த்த பின் பஞ்சினால் புட்டியை மூடி வைக்க வேண்டும். அதற்கு மேல் காகிதத்தைச் சுற்றி நூலைக் கொண்டு கட்டிய பின் அமுக்க வெப்ப மூட்டியில் (autoclare) இருபது இராத்தல் அழுத்தத் தில் ஒரு மணி நேரம் வைத்திருக்க வேண்டும். இவ் வாறு தொற்று நீக்கிய புட்டிகளை வெளியில் எடுத்து வைத்துச் சூடு தணிந்த பின் காளான் பூசணத்தை வளர்த்து வைத்திருக்கும் பெட்டிரித் தட்டிலிருந்து சிறு பகுதியை உட்புகுத்தும் கம்பியால் (inaculation needle) எடுத்துப் புட்டிக்குள் செலுத்த வேண்டும். பின்பு புட்டிகளை மூடி, அறையில் வைத்திருந்து காளான் பூசணம் வளர்ந்த பின் காளான் படுக்கை தயாரிக்கப் பயன்படுத்தலாம். படுக்கை தயாரித்தல், மரப் பலகையாலோ செங் கல்லாலோ தண்ணீர் தேங்கி நிற்காதவாறு மேடை அமைத்துக் கொள்ள வேண்டும். படுக்கை அமைப் பதற்குப் பத்துக் கிலோ வைக்கோல், இரு வித்துப் புட்டிகள், ஐம்பது கிராம் கொள்ளு அல்லது துவரைப் பொடி வெள்ளைப் பாலித்தீன் தாள் ஆகியவை தேவைப்படும். வைக்கோலை 1-14 மீட்டர் நீளமுள்ள சிறு கற்றைகளாகக் கட்டி வைக்க வேண்டும். ஒரு படுக்கைக்கு இருபத்தெட்டுக் கற்றைகள் தேவைப் படும். ஒரு கற்றையின் எடை ஏறத்தாழ கால் கிலோ. கற்றைகளை 6-8 மணி நேரம் வரை நீரில் ஊற வைத்து வடித்து விட வேண்டும். இதற்காகத் தயாரிக்கப்பட்ட மேடையில் நான்கு கற்றைகளை அவற்றின் தடித்த பகுதி ஒரே பக் கத்தில் இருக்குமாறு வரிசையாக வைத்து நடுவி லுள்ள இரு கற்றைகளை மட்டும் பிரித்துச் சம மாகப் பரப்பிவிட வேண்டும். நான்கு கற்றைகளை எடுத்து அவற்றின் தடித்த பகுதி முதலில் போடப் பட்ட நான்கு கற்றைகளின் தடித்த பகுதியின் எதிர்ப்புறம் அமையுமாறு அதாலது தலைமாறாகப் போட வேண்டும். இந்த எட்டுக்கற்றைகள் கொண்டது ஓர் அடுக்கு எனப்படும். இக்கூற்றை களின் நீளத்தை இரு பக்கத்திலும் சமமாக நறுக்கி விட வேண்டும். காளான் வித்துப் புட்டிகளை உடைத்து அதற் குள் இருப்பவற்றை எடுத்து 2-4 செ.மீ. தடிப்புள்ள சிறு துண்டுகளாக்க வேண்டும். இவ்வித்துத் துண்டு களைப் படுக்கையின் அடுக்கில் நான்கு ஓரங்களி லிருந்தும் 3-6 செ.மீ. தள்ளி, பத்து செ.மீ. இடை வெளியில் வைத்து அவற்றின் மேல் கொள்ளு அல்லது துவரைப்பொடியைத் தூவ வேண்டும். பின்னர் இதன் மேல் இரண்டாம் அடுக்கினைப் போட வேண்டும். இரண்டாம் அடுக்கும் முதல் அடுக்கைப் போல எட்டுக் கற்றைகளால் ஆனது. ஆனால் இரண்டாம் அடுக்கின் எட்டுக் கற்றைகளும் முதல் அடுக்கின் குறுக்கே அமைய வேண்டும். பின்பு இரண்டாம் அடுக்கின் நீளத்தைச் சமமாக வெட்டி விட்டு முதல் அடுக்கின் மீது வைத்தது போல வித்துத் துண்டுகளை வைத்து, கொள்ளு அல்லது துவரைப் பொடியைத் தூவ வேண்டும். பின்பு மூன்றாம் அடுக்கை இரண்டாம் அடுக்குக்குக் குறுக்காகவும் தூவ முதல் அடுக்குக்கு இணையாகவும் அமைக்க வேண்டும். இறுதியாக வித்துத்துண்டுகளை வைத்துக் கொள்ளுப் பொடி அல்லது துவரைப் பொடியைத் வேண்டும். நான்காம் அடுக்கை மூன்றாம் அடுக்குக்குக் குறுக்காகவும் இரண்டாம் அடுக்குக்கு இணையாகவும் அமைக்க வேண்டும். ஆனால் இந்த அடுக்கில் நான்கு சுற்றைகளே போதுமானவை. நடுவிலுள்ள இரு கற்றைகளைப் பிரித்துச் சமமாகப் பரப்பிவிட வேண்டும். பின்னர் பாலித்தீன் காகிதம் கொண்டு படுக் கையை மூடி வைக்க வேண்டும். ஒரு வாரத்திற்குப் பின் பாலித்தீன் காகிதத்தை நீக்கிவிட்டு முதன் முறையாகத் தண்ணீர் தெளிக்க வேண்டும். பின் இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு ஒரு முறை தண்ணீர் தெளித்து வர வேண்டும். காளான படுக்கை போட்டது முதல் 10-14 நாள்களில் காளான் கள் தோன்றும். ஒரு படுக்கையிலிருந்து ஏறத்தாழ ஒன்றரைக் கிலோ காளான் கிடைக்கும். இக்காளான் 30°-35°C வெப்பநிலையில் விளைச்சலைக் கொடுக்கும். எனவே சமவெளிப் பகுதிகளில் உயர் கோடைக் காலத்தில் இக்காளானை வளர்க்கலாம். சிப்பிக் கானான் பிளிரோட்டஸ் சஜோர்-காஜா, பிளிரோட்டஸ் சிட்ரினோப்பைலியேட்டஸ் என்ற இரு வகைகள் கூடுதலான விளைவுத் திறனைக் கொண்டவை. வித்துப் புட்டி தயாரித்தல். சோளத் தானியத்தை ஓரளவு வேக வைத்துத் தண்ணீரை வடித்துவிட்டு,