பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/391

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உணவு நஞ்சாதல்‌ 371

க முதலியவற்றிலிருந்து பாதுகாப்பாக அமைக்கப்பட வேண்டும். உணவுக் கூடங்களைத் தூய்மையுடன் வைத்துச் செயல்படுத்த பல்வேறு சட்டங்கள், ஒழுங்குமுறை கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பூச்சிக் கொல்லிகள், பூஞ்சாணக் கொல்லிகளை அறைகளின் மூலைகள், வெளிச்சமில்லாத இடங்களில், தொடர்ந்து சீராகத் தெளித்து வருவது நல்ல தூய்மையான நிலைமையை உண்டாக்கும். கூடங்களின் கூரைகள், விட்டங்கள், சேமிப்பு அறையிலுள்ள சிறு அறைகள் முதலானவற்றை நன்கு தூய்மையாக வைக்க வேண் டும். உணவு தயாரிக்கும் தொழிற் கூடங்களுக்குத் தூய நீர் அதிக அளவில் தேவைப்படும். பாதுகாக்கப் பட்ட குடிநீரைப் பயன்படுத்த வேண்டும். பாத்திரங் கள் நச்சு உலோகக் கலவைகள் கலந்திராத உலோகங் களால் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். கருவிகள், பாத்திரங்கள் முதலியவற்றில் சிறிதளவு மாசு காணப் படினும் நுண்ணுயிரிகள் பெருக நல்ல உணவும் பாழாகி விடும். பாதுகாப்பின்றி அமைக்கப்பட்ட எந்திரங்களைக் கழுவும் நீர் வேறு இடங்களில் படும் போது நுண்ணுயிரிகள் பரவுகின்றன; இதனால் தூய்மையும் பாதிக்கப்படுகிறது. . பழங்கால முதலே உணவை நன்கு பாதுகாக்க உலரவைத்தல் குளிரூட்டுதல் போன்ற பாதுகாப்பு முறைகள் கையாளப்பட்டு வருகின்றன. பழம். காய்கறி, மீன், ஊன் போன்றவற்றை நெடுங்காலம் சேமிக்க உலரவைக்கும் முறை பயன்பட்டது. புகை யூட்டுதல் முறையால் ஊன், மீன், உணவு ஆகிய வற்றைக் கெடாமல் பாதுகாக்கலாம். உணவைப் பாதுகாக்கும் முறைகளில், பதப்படுத்துதல் முறை பெருமளவில் கையாளப்படுகிறது. இம்முறையில் அதிக வெப்பநிலையிலுள்ள உணவில் நுண்ணுயிரிகள் அழிக்கப்பட்டு வெற்றிட அறைகளில் மூடப்பட்டுப் பாதுகாக்கப்படும். குறைந்த வெப்பநிலையில் பெரும்பாலான பாக் டீரியாக்களும் பூஞ்சான்களும் ஸ்போர்களை உண் டாக்கித் தங்கிவிடுகின்றன. குளிர் பதனப் பெட்டி களின் அறைகள், மூலைகள், வெடிப்புகள் முதலிய இடங்களை நன்கு கழுவித் தூய்மை செய்ய வேண்டும். இதற்காகப் பல விதிமுறைகள் கையாளப்படுகின்றன. உணவு தயாரிக்கப்படும் தொழிலகங்களில் பயன் படுத்தாத கழிவுகளை நன்முறையில் மூடியிட்ட பெட்டிகளில் அடைத்து அப்புறப்படுத்தல் நல்லது. எலி பூச்சி போன்றவை அணுகாவண்ணம் இரும்பு லைகளை வடிகால் குழாய், கழிவுநீர்க் குழாய்களின் இறுதியிடங்களில் அமைத்துப் பாதுகாக்க வேண்டும். பொறிகள் அமைத்துச் சேமிப்புக் கிடங்கு, தயாரிப்புப் பகுதியில் எலிகள் அணுகாவண்ணம் தடுக்க வேண்டும். பால் உற்பத்தித் தொழிலில் தூய்மை மிகவும் அ.க. 5-24 அ உணவு நஞ்சாதல் 371 இன்றியமையாதது. பெரும்பாலும் தேவைப்படும் தூய்மையின்றிப் பெறப்படும் பாலும், பால் பொருள் களும் எளிதில் பல நுண்ணுயிர்களால் பாதிக்கப் பட்டு வீணாகின்றன. தூய்மையான பால் உணவு பெறப் பால் சேமிப்புத் தொழிலகங்கள் தூய்மை ஆய்வுகளைத் திறம்படச் செயலாற்ற வேண்டும். பால் உணவைத் தூய்மையாகப் பெற பல்வேறு முறைகள் கையாளப்படுகின்றன. நீராவியை ஏறத்தாழப் பதினைந்து நிமிடங்களுக்குப் பால் சேமிப்புக் கொள் கலன்கள், குழாய்கள் மற்றும் பாத்திரங்களுக்குச் செலுத்துவது அல்லது கொதி நீரை ஏறத்தாழ ஐந்து நிமிடத்திற்கு ஊற்றுதல் அல்லது வெப்பமான காற்றை இருபது நிமிடத்திற்குச் செலுத்துதல் போன்ற முறைகள் கையாளப்படுகின்றன. புற ஊதாக் கதிர்கள் மூலம் நுண்ணுயிர்களை அழிக்கும் முறை, பால் மற்றும் பால் பொருள்களைப் பெட்டி களில் அடைக்கும் தறுவாயில் பயன்படுகிறது. மேலும் குளோரின் வளிமம், அயோடின் கலந்த பொருள்கள், கால்சியம் ஹைப்போகுளோரைடு குளோரைமைன் போன்ற வேதி மருந்துகளும் பால் தூய்மையாக அமையப் பயன்படுகின்றன. உணவு நஞ்சாதல் கு.பத்மநாபன் சுகாதரமற்ற முறையில் உணவுப் பொருள்களைப் பக்குவப்படுத்தல், சமைத்தல், பரிமாறுதல், உட் கொள்ளுதல் போன்ற செயல்களால் பல்லாயிரக் கணக்கான மக்கள் நச்சு உணவின் தாக்குதலுக் குள்ளாகலாம். உணவு அல்லது பானம் அருந்திய நாற்பத் தெட்டு மணி நேரத்தில் தீவிர இரைப்பைக் குடல ழற்சி ஏற்பட்டு வாந்தியும், வயிற்றுப்போக்கும் ஏற் பட்டால் அதற்கு உணவு நஞ்சாதல் (food poisioning ) என்று பெயர். சிறுகுடல் ஒவ்வாமையிலும் (சில மீன் வகைகளை உண்ட போது) பழுக்காத பழங்களைக் குழந்தைகள் தின்னும் போதும் இந்த நிலை ஏற்பட லாம். அமேனிட்டா பல்லாய்டு என்ற நச்சு அல்லது உணவில் காணப்படும் வேதி நச்சு அல்லது வேதி நச்சு இருந்த பாத்திரத்தில் வைக்கப்பட்ட உணவை உண்ட சூழ்நிலைகளில் உணவு நஞ்சாகும் நிலை உண்டாகலாம். விலை மலிவான எனாமல் அல்லது துத்தநாகப் பாத்திரங்களில் வைக்கப்பட்ட அமிலப் பழச் சாறுகளின் விளைவால் வெளிப்பட்ட ஆன்ட்டி மனி அல்லது துத்தநாகம் உணவு நஞ்சை உண்டாக்கு கிறது. முட்டை, இறைச்சி, பால் போன்ற சத்துள்ள உணவு வகைகளைத் தயார் செய்து பரிமாறும்