பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/397

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உணவு இடமாற்றம்‌ 377

செல்கிறது என்பதை உறுதிப்படுத்துகின்றன. இதைப் பின்வரும் ஆய்வினால் விளக்கலாம். செடியிலுள்ள ஓர் இலையைக் கண்ணாடிப் பெட்டிக்குள் மூடி வைத்து அதனுள் கதிரியக்கக் கார்பன் கொண்ட கார்பன் டைஆக்சைடு செலுத்தப்பட்டுச் செயற்கை முறையில் அதற்கு ஒளி கிடைக்குமாறு செய்யப் படும்போது கார்பேஹைட்ரேட் ஃபுளோயத்தின் வழியாகச் செல்கிறது என்று தெரியவந்தது. தண் டின் இலைக்கணுவின் மேல் புறத்திலும் கீழ்ப் புறத்திலும் சிறிது தொலைவில் உள்ள செல்களை அதிக வெப்பம் அல்லது குளிர்ச்சியின் மூலமாக அழித்து விட்டால் இலையில் உண்டாகும் உணவின் இடப்பெயர்ச்சி தடுக்கப்படுகிறது. இதனால் உணவு இடப்பெயர்ச்சி உயிருள்ள செல்களாகிய ஃபுளோயத் தின் வழியாகவே நடைபெறுகிறது என்று தெரிய வருகிறது. உயிருள்ள செல்களின் வளர்சிதைமாற்ற நிகழ்ச்சி அடக்கிகளால் (inhibitors) அடக்கப்படும் போது உணவு இடப்பெயர்ச்சி பெருமளவில் தடைப் படுகிறது. ஃபுளோயத்தின் நீள்வெட்டுத் தோற்றத் தின் அமைப்பு உணவுப் பொருள்களை எடுத்துச் செல்வதற்கேற்ப உள்ளது. இதில் நீண்ட குழாய் போன்ற துளைகளுடன் கூடிய சல்லடைத் தட்டுப் போன்ற குறுக்குச் சுவர்களைக் கொண்ட குழல்கள் உள்ளன. ஒரு குழல் செல்லின் சைட்டோபிளாசம் அதனை அடுத்துள்ள மற்றொரு செல்லின் சைட்டோபிளாசத் தோடு சல்லடைத் துளைகள் வழியாக இணைக்கப் பட்டிருப்பதால் நீண்ட தொலைவிற்கு உணவு இக் குழல்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுவது இயல் கிறது. தேவைக்கேற்ப இந்தச் சல்லடைக் குழாய்கள் அமைந்துள்ளன. பூசணிக் குடும்பத்தில் காய்களும் இலைகளும் பெரியனவாக இருப்பதால் அவற்றிற்குத் தேவை யான உணவு அதிக அளவு விரைவாக இலை யிலிருந்து தண்டுக்குச் செல்ல வேண்டியுள்ளமையால் அவற்றின் மெல்லிய தண்டில் சைலத்திற்கு இருபுறமும் ஃபுளோயம் அமைந்துள்ளது. சல்லடைக் குழாய் களில் உள்ள சல்லடைத் தட்டுப் போன்ற குறுக்குச் சுவர், வளர்ச்சிப் பருவத்தின் இறுதியில் அல்லது நோயுற்ற அல்லது காயமடைந்த நிலையில், காலோஸ் என்ற பொருளால் அடைபடும்போது, உணவின் இடப்பெயர்ச்சியும் நின்று விடுகிறது. இயற் கையில் வளர்ச்சிப் பருவத்தின் தொடக்கத்தில், காலோஸ் கரையும்போது உணவு இடப்பெயர்ச்சியும் தொடர்ந்து நடைபெறுகிறது. ஜெரானியம் செடியின் இலைப் பரப்பை நீர்த்த இயோசின் கரைசலில் மூழ்குமாறு வைத்தால் அந்த இலையிலிருந்து பெயர்ச்சி அடையும் கார்போ ஹைட்ரேட்டுகள், நைட்ரஜன் கரிமச் சேர்மங்கள் ஓரளவு குறையும். இந்த இலைகளின் ஃபுளோயத் உணவு இடமாற்றம் 377 திசுக்களை ஆய்வு செய்து பார்க்கும்போது அவற்றின் சல்லடைத் தட்டுகள் காலோஸ் பொருளால் மூடப் பட்டிருக்கும்; இது இயரேசின் வினை எனப்படும். ஃபுளோயத்தில் இரு வேறு பொருள்கள், ஒரே சமயத்தில் இருவேறு திசைகளில் செல்வது இரு திசை இடப்பெயர்ச்சி எனப்படும். பக்கச் பக்கச் அதே பருப்பு வகைச் செடியின் மூன்று பகுதிகளைக் கொண்ட கூட்டிலையில் நுனிச் சிற்றிலையிலிருந்து ஒளிரும் தன்மையுள்ள ஃபுளோரசின் சிற்றிலைகளுக்குக் கீழ்நோக்கிப் பரவுகிறது. சமயத்தில் சிற்றிலைகளிலிருந்து கார்போ ஹட்ரேட்டுகள் நுனிச் சிற்றிலைக்குப் பரவுகின்றன. இந்த இலைக்காம்பில் ஒரே சாற்றுக் கற்றைதான் உள்ளது. இதனால் இருவேறு பொருள்கள் ஒரே ஃபுளோயத்தின் மூலம்தான் எதிர்த் திசைகளில் செல் கின்றன என்று சீமேச்சர் ஆய்வுகள் தெளிவாக்கு கின்றன. இரவை விடப் பகலில் மிகுந்த அளவில் உணவு டப்பெயர்ச்சி நடைபெறுகிறது என்றும், வளர்ந்து கொண்டிருக்கும் கனிமுதலிய உறுப்புக்களுக்குப் போது மான அளவு உணவுப் பொருள்கள், கரைசலாகச் சல்லடைக் குழாயில் சைட்டோபிளாசத்தின் வழியாக உயர் வேகத்துடன் பெயர்ச்சி அடையும் என்றும் ஃபுளோயத்தில் உணவுப் பெயர்ச்சியின் வேகம் பெரு மளவு மணிக்கு 100-200 செ.மீ. என்றும் கணக்கிடப் பட்டுள்ளன. ஃபுளோயத்தில் நடைபெறும் உணவுப் பெயர்ச்சி யின் செயல் முறையை விளக்கும் கோட்பாடுகள் பின் வருமாறு: பரவுதல் கோட்பாடு. உணவுப் பெயர்ச்சி செறிவு மிகுந்த இடத்திலிருந்து, செறிவு குறைந்த இடத்தை நோக்கி நடைபெறுகிறது. இலைகளின் ஒளிச்சேர்க் கையால் சர்க்கரைப் பொருளின் செறிவு அதிகமாக வேரில் இதே சர்க்கரைப்பொருள் வளர்சிதை மாற்றங்களுக்குப் பயன்படுவதால் செறிவு குறை உள்ளது. இதனால் எளிய இயற்பியல் முறை யான பரவுதல் மூலம் சர்க்கரைப் பொருள் இலையி லிருந்து வேரை நோக்கிப் பெயர்ச்சி அடைகிறது. இதனால் இருவேறு கரிமப் பொருள்கள் தங்கள் செறிவுக்கேற்ப இருவேறு திசைகளில் ஒரே சமயத்தில் பெயர்ச்சி அடைவதை விளக்க முடியும். வாக ஊக்கப்பட்ட பரவுதல் கோட்பாடு. அறிவியல் வல்லு நர்களான மேசன், ஃபில்லிஸ் ஆகியோர் பரவுதல் கோட்பாட்டைச் சிறிது மாற்றியமைத்து ஃபுளோ யத்தில் நடைபெறுவது சாதாரண பரவுதல் அன்று என்றும், மூலக்கூறுகள் சல்லடைக் குழாயிலுள்ள புரோட்டோபிளாசத்தால் ஊக்குவிக்கப்படுவதாலும், அவை பரவுதலுக்குப் புரோட்டோபிளாசத்தால்