பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/407

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உதரப்பையுறை நீர்‌ 387

உத்திராடம் இது தனுசு விண்மீன் குழுவில் (sagittarius condtel lation) அமைந்துள்ள ஒரு விண்மீன் ஆகும்.உத்தி ராடம் (P. Sagittarius) ஓர் இரும் விண்மீன் (binary star) ஆகும். இது தமிழர்களின் வழக்கில் உள்ள இருபத்தேழு விண்மீன்களுள் இருபத்தொன்றாம் விண் மீன் ஆகும். உதரக் குழி பெ. வடிவேல் வயிற்றினுள் காணப்படும் புறப் பரிவிரிக்கும் (parietal peritoneum) வயிற்று உறுப்புகளின் மேல் காணப் படும் அகப்பரிவிரிக்கும் (visceral peritoneum ) இடைப் பட்ட வெற்றிடமே உதரக்குழி (peritonial cavity) எனப்படும். ஆண்களில் இது மூடப்பட்டு ஒரு தனி அறையாக இருந்தாலும் பெண்களில் இது வெளி உலகத்துடன் சினை நாள வழியாகவும், பெண் பிறப் புறுப்பின் வழியாகவும் தொடர்புடையது. இவ்விடை வெளியில் காணப்படும் குறைந்த அளவு நிணநீர், உறுப்புகளிடையே உராய்வைத் தடுக்கும் நீர்மமாக வும் உதவுகிறது. பெண்களில் சினையகத்திலிருந்து வெளிப்பட்ட சினையுடன் ஆண் விந்தும் அரிதாக உதரக் குழியினுள் காணப்படும். வயிற்றினுள் உள்ள அனைத்து உறுப்புகளும் உதரக்குழிக்குள் உள்ளவைபோல் தோன்றினாலும் அவை உதர உறை வழியே உதரக்குழிக்குள் நீண் டுள்ளமையால் பரிவிரியால் பிரிக்கப்படுகின்றன. உதரக்குழியுள் நீர் தேங்கினால் வயிற்று நீர்த் தேக்கம் அல்லது மகோதரம் (ascites) என்று குறிப்பிடப்படும். புற்றுநோய் அல்லது காயத்தில் இரத்தம் தேங்கினால் இரத்த உதரக்குழி ( haemoperitoneum) எனப்படும். இரைப்பை, குடல், துளை நோயில் ஆய்விற்காக உதரக்குழிக்குள் காற்றைச் செலுத்தினால் அதைக் காற்று உதிரக்குழி (pneumoperitoneum) *T GOT அழைப்பர். பல்வேறு உறுப்புக்களுடன் உள்ள தொடர்பால் பரிவிரி பின்வரும் சந்துகளை உண்டாக்கும். அவை: இரைப்பைப் பின் உள்ள சிறுகுழி அல்லது வயிற்றுச் சீலை முண்டுப்பை (omental bursa) வளை குடலை அடுத்துள்ள சந்து (sigmoid mesocolic recess) இலி யோ சீக்கல் சந்து (ilio caecal recess ) முன் குடல் சந்து (duodenal recess) எனப்படும். ஈரல்நோய், இரத்தக்குறைவு நோய்களில் உதரக் குழியில் நீர் சேர்ந்து மகோதரம் உண்டாகும். கொப் அ.க. 5.25அ உதரப்பையுறை நீர் 387 பூழக்கும் பியூபிக் என்பு இணையும் இடத்திற்கும் இடையே ஊசி கொண்டு குத்தி உதரக் குழியில் உள்ள நீரை எடுத்து ஆய்வு செய்யலாம். உதரக்குழி அகநோக்கி மூலம் வயிற்றுள் உள்ள காயங்களையும் ஆய்வு செய்யலாம். ஈரல் சீழ்க்கட்டி குடல்வால் சீழ்க் கட்டி முதலியவை உதரக்குழியில் சீழ் தோன்றக் காரணமாகின்றன. மா.ஜெ.பிரடெரிக் ஜோசப் உதரப்பையுறை நீர் வயிற்று உறுப்புகளின் உறை உதரப்பையுறை (peri- tonial membrane) எனப்படும். புப்பு உறை போல் இரு மடிப்புகள் கொண்ட இந்த உறையுள் மிகக் குறைந்த அளவிலேயே நீர்மம் காணப்படுகிறது. நோயுற்ற நிலையில் மிகையான அளவில் நீர்மம் காணப்பட்டால், அந்நிலை மகோதரம் (ascites) எனக் குறிப்பிடப்படுகிறது. உதரப்பையுறை, உள்உறை (visceral), வெளி உறை (parietal) என்ற இரு பகுதிகளாகப் பிரிக்கப் படுகிறது. உள்ளுறை வயிற்றினுள்ளேயுள்ள உறுப்பு களையும், வெளியுறை பெரிடோனிய குழியையும் மூடியுள்ளன. வெளி உறையில் நரம்புகள் மிகையாகக் காணப்படும். அவை உறுத்தப்பட்டால் கடுமையான வலி அப்பகுதியில் தோன்றக்கூடும். உள்உறையில் நரம்பிழைகள் அதிசுமாக இல்லாமையால் அங்கு உண்டாகும் வலி தெளிவற்று இருக்கும். உடலிலுள்ள குழிவுகள் அனைத்திலும், உதரக் குழியே மிகப் பெரியதாகும். இதன் பரப்பு பெரும் பாலும் உடல் தோலின் பரப்பு அளவை ஒத்திருக் கும். திரை போன்ற இது, தட்டையான பல பக்கங் களைக் கொண்ட செதிள் செல்களுடன் நார் இழைத் திசுவின் மெல்லிய அடுக்கின் மேலுள்ள பருமனான இரு மடிப்புகளையும் கொண்டதாகும். உதரக் குழி யின் அடியில், சிறிதளவு அரியோலத் திசு (areolar tissue) உள்ள இடத்தில் நிணநீர் நாளங்களும், இரத்த நுண் குழல்களின் பின்னல்களும் காணப்படு கின்றன. இவற்றில் இருந்தே உணவு உள் ஏற் பும், நீர்ம வெளிப்பாடும் நடைபெறுகின் றன. நல வாழ்வு நிலையில் போதுமான பெரிடோனிய நீர்மம் காணப்படுகிறது. வெளிறிய மஞ்சள் நிறத்தில் கூழ் போன்றுள்ள இந்நீர்மத்தில் நிணநீர்ச் செல்களும் வெள்ளையணுக்களும் காணப்படுவதால் உள்ளுறுப் புகள் எளிதில் உராய வாய்ப்பு இருக்கிறது. இந்நீர் மத்தின் ஒப்பு அடர்த்தி எண் 1000 ஆகும். வளிமம் நிறைந்த அசையும் உறுப்புகள் மிதக்கின்றன. உதரக் குழியின் அழுத்தத்தை அளவிட அழுத்தத்தை அளவிட முடியாவிடினும் வெளி அழுத்தத்தைவிடக் குறைவாகவே இருக்கலாம்.