பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/413

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உப்பங்கழிச்‌ சூழலமைப்பு 393

வற்றின் வாழ்க்கை முறையை அவை பெருமளவு பாதிக்கின்றன. கழிமுகங்களின் பண்புகள் உப்புத் உப்புத்தன்மை. கழிமுகப் பகுதிகளில் தன்மை 0.5-3.5% வரை உள்ளது. உப்புத் தன்மை மாறுபடுவதற்கு நான்கு காரணங்கள் உண்டு. அவை அமைந்துள்ள இடம், நன்னீர் வரத்தின் அளவு, கடல் ஒத ஏற்ற இறக்கம், ஆண்டின் பருவ நிலை எனப்படும். கோடைக் காலத்தில் ஆற்றுநீர் குறைந்த அளவில் கடலை நோக்கிப் பாயும்போது கடல் ஒத ஏற்ற இறக்கம் காரணமாகக் கடல் நீர் மிகு அளவில் கழிமுகத்தை நோக்கி வருகிறது. அதனால் உப்புத் தன்மை மிகும். மழைக்காலததில் ஆற்றில் வெள்ளம் பெருகி வருகிறது. இந்த நீரோட்ட வேகம் கடல் ஒத ஏற்ற இறக்கக் கடல் நீரோட்டத்தின் முன்னோக்கிய பாய்ச்சலைத் தடுத்து நிறுத்துகிறது. அக்காலங்களில் கழிமுகநீரின் உப்புத்தன்மை குறைவாகக் காணப் படுகிறது. பொதுவாக உப்புத் தன்மை நீர்மேற் பரப்பில் மிகுதியாக இருக்கின்றது. அடிப்பகுதியை நோக்கிச் செல்லும்போது படிப்படியாகக் குறைந்து கொண்டே செல்கிறது. இவ்வாறு உப்புத்தன்மையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் காரணமாக ஏனைய வாழிடங்களில் காணப்படாத பல சிக்கல்கள் இங்கு வாழும் உயிரினங்களின் வாழ்க்கைமுறையில் காணப் படுகின்றன. மெக்லஸ்கி என்பார் கழிமுகங்களை நேர்முகக் சுழிமுகம் எதிர்முகக் கழிமுகம் நடுநிலைக் கழிமுகம் என மூன்று வகைகளாகப் பிரித்துள்ளார். மேர்முகக் கழிமுகம். இத்தகைய சுழிமுகங்கள் வெப்பப் பகுதிகளில் மிகுதியாக உள்ளன. இக்கழி முகங்களில் கடல்நீர், புகுவாயிலிருந்து அடிப்பகுதி வழியாக ஆற்றுக்குள் செல்கின்றது. அது குறைந்த அளவில் பின்னர் ஆற்றின் மேற்பரப்பில் உள்ள நன்னீராகக் கலக்கிறது. எதிர்முகக் கழிமுகம். இத்தகைய கழிமுகங்களும் வெப்பப் பகுதியிலேயே காணப்படுகின்றன. மிகு வெப்பநிலை காரணமாக நீர் ஆவியாக மாறுவதால் நீரின் உப்புத்தன்மை அதிகரிக்கின்றது. அதனால் மேற்பரப்பு நீரின் உப்புச்செறிவு மிகுதியாகிறது; மிகு அடர்த்தி காரணமாக மேற்பரப்பு நீர் கீழ்ப் பகுதிக்குச் சென்று விடுகிறது. நடுநிலைக் கழிமுகம், நேர்முகக் கழிமுகம், எதிர் முகக் கழிமுகம் ஆகிய இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையைக் கொண்டவை நடுநிலைக் கழிமுகங்கள் என அழைக்கப்படுகின்றன. நீர்கலத்தல், கடல் நீரும் ஆற்று நீரும் கலப்பதால் நீர் கலங்கலாகிறது. ஓத ஏற்ற இறக்கமும் உப்பங் உப்பங்கழிச் சூழலமைப்பு 393 கழிகளில் நீர்க்கலங்கல் அடிப்பகுதியிலிருந்து மேல் பகுதி வரை காணப்படுகிறது; இதனை நெடுவாட்டக் கலங்கல் (vertical turbulance) என்பர். கடல்நீர் கலக்கும் இடத்தில் கிடைமட்டக் கலங்கல் ஏற்படு கிறது. இத்தகைய இடங்களில் நீர்ச்சுழல் (eddy for- mation) உருவாகின்றது. நீர்ச்சுழல் உள்ள இடங் களில் ஆக்சிஜனும், உணவுத் துகள்களும் மிகுதி யாகக் கிடைக்க வாய்ப்பு உண்டு. அதனால் நீர்க் சூழல் பகுதியை ஊட்டப் பொருள் முடக்குப்பொறி (nutrient trap) என்பர். யாகக் ▸ சேற்றுப்படிவ (அ) வண்டல் மண். பொதுவாகக் கழிமுகப் பகுதிகளில் வண்டல் மண் படிவு மிகுதி காணப்படுகின்றது. அமைதியான இடத்தி லுள்ள கடல் நீருடன் ஆற்றுநீர் வேகமாக வந்து கலக்கும் போது வண்டல் மண் படிவு ஏற்படுகிறது. கழிமுகங்களில் வாழும் பல உயிர்கள் வண்டல் மண்ணில் புதைந்து வாழ்கின்றன. வண்டல் மண் பகுதியினுள் ஒளி ஊடுருவிச் செல்வதால், தாவரங் களின் வளர்ச்சி குறைவாக இருக்கிறது. ஆறுகள், வடிகால் வழியாகக் கடலை நோக்கிச் செல்லும் கரிமட் பொருள்கள் உப்பங்கழிகள் வாயிலாகக் கடலுடன் சேர்கின்றன. பாக்ட்டீரியாக்கள் இந்தக் கரிமப் பொருள்களுடன் செயல்படுவதால் ஏற்படும் பொருள்கள், வண்டல் மண்ணில் புதைந்து காணப் படும். உயிரிக களுக்கு உணவாகப் பயன்படுகின்றன. அதே வேளையில் ஆறுகள், கழிமுகச் சூழ்நிலையை மாசுபடுத்தும் பொருள்களையும் கொண்டு வந்து சேர்க்கின்றன. இவை கழிமுகப் பகுதியில் நச்சுத் தன்மையை ஏற்படுத்தி ஆக்சிஜன் அளவையும் குறைக் கின்றன. கழிமுகப் பகுதிகளின் வகை. பாறைப்படிவு உப்பங்கழி. இங்கு மணல் படிவுகள் அல்லது லது பாறைகள் அலைகளின் செயலால் உருவா கின்றன. மழைக்காலத்தில் நீர்ச்சுழற்சி இருக்கும். மற்ற காலங்களில் இவை குட்டைகள் போன்று காணப்படும். இங்கு உப்புத் தன்மையின் அளவு 0.1-1.5% இருக்கும். மிகுவாட்டக் கழிமுகம். இத்தகைய கழிமுகங்கள் இந்தியாவில் மேற்குக் கடற்கரையில் உள்ளன. இவற்றில் நீரின் வேகம் அதிகமாக இருக்கும். அது குறைந்த தொலைவே பாய்வதால் இவ்வகைக் கழி முகங்களில் மணல், வண்டல் மண் படிவதற்கு மிகுதியான வாய்ப்பில்லை. குறைவாட்டக் கழிமுகம். இத்தகைய கழிமுகங் கள் இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் உள்ளன. நீரின் வேகமும் அடிமட்டவாட்டமும் குறைவாக இருக்கும். சில காலங்களில் ஆற்றின் நீர்வரத்துக் குறைவதாலோ ஆறு வறண்டு போவதாலோ இக் கழிமுகங்களில் கடற்புகுவாய்கள் மண்மேடிட்டுக் காணப்படும்.