பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/416

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

396 உப்பு

396 உப்பு (NaCI) சேர்க்கும்போது, Na+ இன் செறிவு உயரும்; அயனிப்பெருக்கம், கரைதிறன் பெருக்கத்தை விஞ்சி விடும்; எனவே தூய சோப், அதன் தெவிட்டிய கரைசலிலிருந்து வீழ்படிவாகிவிடும். கடல்நீரிலிருந்து பெறப்படும் சாதாரணஉப்புடன் அயோடைடு போன்ற அயனிகள் கலந்திருக்கும். அந்தக் கடல் உப்பின் தெவிட்டிய கரைசலில் ஹைட் ஜன் குளோரைடு வளிமத்தை உட்செலுத்தினால் தூய சோடியம் குளோரைடு மட்டும் வீழ்படிவாகிறது. இச்செயல் முறைகளில் மிக அதிகமான அளவிலும் பொது அயனிகளைச் சேர்த்தல் கூடாது; ஏனெனில் உயர் அயனிச் செறிவுகளில் உப்பு விளைவு ஏற்பட்டுக் கரைதிறன் மிகுதியாகிவிடும். மேலும், அணைவு (complex) அயனிகள் உருவாதலும் தவிர்க்கப்படல் வேண்டும். அப்போதும் கரைதிறன் மிகுதியாகி விடுவதால் வீழ்படிவாதல் நிகழாது. உப்பிட்டுப் பிரித்தலும் இயலாது. இவ்வாறு உப்புகள் மட்டுமன்றி, நீரில் கரைந் துள்ள வளிமங்கள், திண்மங்கள், சில நீர்மங்களை யும் கூட ஓர் உப்பின் முன்னிலையில் கரைசலி செய்துவிடலாம். லிருந்து பிரியுமாறு அத்தகைய பொருள்களின் கரைதிறன் நீர் மூலக்கூறுகளுக்கும் கரைபொருளுக்குமிடைப்பட்ட வேதியியல் அல்லது இயற்பியல் இடையீடுகளைப் பொறுத்து அமைகிறது. இதனால் உப்பினால் ஈர்த்து வைக்கப்பட்டுள்ள நீர் மற்றொரு கரைபொருளுடன் இடையீடுறுவதற்கு இயலாத நிலை உருவாகிவிடுகிறது. அன்றியும், தொங்க வைக்கும் ஊடகத்தில் ஓர் உப்பைச் சேர்ப்ப தால் சில கூழ்மங்களையும் வீழ்படிவாக்க இயலும். உப்பு எஸ்.விவேகானந்தன் ஓர் அமிலத்தின் ஒன்று அல்லது அதற்கு மேற் பட்ட ஹைட்ரஜன் அயனிகள், ஒரு காரத்தின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எதிர் அயனிகளால் (anions) இடம் பெயர்ந்து உண்டாகும் சேர்மம் உப்பு (salt) எனப்படும். இதற்கு, சோடியம் குளோ ரைடு எனப்படும் சாதாரண உப்பு நல்ல எடுத்துக் காட்டாகும். இந்த இடப்பெயர்ச்சி நீரியக் கரைசல் களில் நிகழின் நீர் ஓர் உடன் பொருளாகும். அமிலம் + காரம் உப்பு + நீர் (எ.கா.) HCI + NaOH NaCl + H,O நீர் இடையீடுறாவண்ணமும் உப்புகள் தயாரிக்கப் படும். அவை திண்மநிலை உருவாக்கங்கள் ஆகும். இவற்றைப் பொதுவாக, அமில ஆக்சைடு + கார ஆக்சைடு உருகிச்

  • உப்பு

சேர்தல் உருகிச் உலோகம் + அலோகம் உப்பு சேர்தல் Fe + S FeS இவ்வாறு தயாரிக்கப்படும் உப்புக்களுக்கென்று சில தனிப்பண்புகளை வரையறுக்கலாம். அவை: உப்புகள் திண்மநிலையில் அயனிகளால்ஆன அணிக் கோலைகளைப் (lattices) பெற்றிருக்கும்; (நீரியக்) கரைசலில் அயனிகளாகப் பிரிகையுறும் தன்மையுடை யன; கரைந்த அல்லது உருகிய நிலையில் மின்னாற் றல் கடத்தும் பண்புடையன ஆகும். உப்புகள் எண்ணற்றவையாக இருப்பதால் இவற்றை வகைப்படுத்திப் பயில வேண்டும். பல் வேறு அடிப்படைகள் கொண்டு இவை எந்த அமி லங்களிலிருந்து பெறப்படுகின்றனவோ அவற்றில் அயனிகள், எத்தனை ஹைட்ராக்சைடு படுகின்றன என்பதைப் பொறுத்து, இவற்றை இயல்பு உப்புகள் (normal salts), அமில உப்புகள் (acid salts), கார உப்புகள் (basic salts) எனப் பிரிக்கலாம். ஹைட்ரஜன் அயனிகளால் இயைந்த நடுநிலையாக்கப் இயல்பு உப்புகள் - NaCI, NH,CI Na,SO,, அமில உப்புகள் Na,CO, Ca(PO,), NaHCO,, NaH, PO, Na,HPO, NaHSO, கார உப்புகள் - Pb(OH)CI, Sn(OH)CI அமில உப்புகள் நீரில் கரையும்போது அவற்றில் உள்ள இடம்பெயராத ஹைட்ரஜன் அயனிகள் பிரிகையுற்று வருவதால், கரைசல்கள் அமிலத் தன்மை யுடையனவாயிருக்கும். இவ்வாறே கார உப்புகளின் ஹைட்ராக்சைடு தொகுதிகள் கரைசல்களைக் கார மாக்கும். ஆனால் முதல்வகை உப்புகள் முற்றிலும் நடுநிலையான கரைசல்களையே தரும்; அவற்றில் பிரிகையுறத்தக்க ஹைட்ரஜன் அயனிகளோ ஹைட் ராக்சில் அயனிகளோ இல்லை. நீரில் கரையும்போது அனைத்து உப்புகளும் ஓரே அளவில் அயனியாவதில்லை. இவற்றின் அயனி யாகும் வீதங்களுக்கேற்ப இவற்றைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம். எளிய உப்புகள் - NaC1, NaHCO,, Pb(OH)CL,