பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/431

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உப்பு நீக்கம்‌ 411

கிடைக்கிறது. இதை ஒரே நிலையில் மட்டும் நிகழ்த் தாமல் பல் நிலைகளில் நிகழ்த்துவதற்கு மீட்டு விளைவு ஆவி வடித்தல் (multiple effect distillation) எனப் பெயர். இந்த வழிமுறையினால் ஆவியாதலின் உள்ளுறை வெப்பத்தை (latent heat of evaporation ) ஒவ்வொரு நிலையிலும் சேர்த்து அடுத்த நிலைக்குப் பயன்படுத்த முடியும். எனவே, ஒவ்வோர் அடுத்த நிலையிலும் நிகழும் ஆவியாதல் மீண்டும் மீண்டும் குறைவான வெப்ப அழுத்த நிலைகளில் நிகழக் கூடும். இதனால் எரிபொருள் மிச்சப்படுத்தப்படு கிறது. இம்முறையில் ஒரு முக்கியமான இடர்ப்பாடு என்பது செதில் படிவதாகும். 71-82° வெப்பநிலை யில் நிகழும் இந்தச் செதில் படிவு, வெப்பப் பரி மாற்றத்தையும் வினைதிறனையும் பெரிதும் பாதிக் கிறது. எனவே, இதனைத் தடுக்க நீர் முதலில் 82° வரை சூடுபடுத்தப்பட்டு நிலைமைத் திரிபு நிகழா வண்ணம் அதன் வெப்பநிலை 121° வரை உயர்த்தப் படும். இதற்காக நீருடன் அமிலத்தைச் சேர்ப்பர். நீரின் ஒரு பகுதியை விரைவில் ஆவியாக்கி அடுத்த அறைக்கு அனுப்பி அங்கு குளிர்விப்பர். வெப்ப முறைகளில் பெரிதும் பயனளிக்கும் இம் முறை மூலம் நாள் ஒன்றுக்கு 10,000 காலன் (காலன் நாள் ) நன்னீர் பெற இயலும். இம்முறையில் கொதிகவக் குழாய் களைப் பக்கவாட்டில் அமைக்காமல் செங்குத்தாகச் செல்லுமாறு வைப்பின் (செங்குழாய் ஆவியாக்கி (vertical tube evaporator VTE) உள்வரும் உவர்நீர், குழாயின் உச்சியில் சிதறி மென்படிமமாகக் கீழே விழும். அப்போது வெப்பப் பரிமாற்றம் நன்கு நிகழு மாதலால் ஆவி வடித்தல் என்பது மேலும் எளி தாகும். உப்பு நீர் நீராவி 212F அமுக்கி கொதிக்கும் உப்பு நீர் வெளியே உப்பு நீர் உள்ளே குளிரும் நீராவி அமுக்கப்பட்ட நீராவி 222°F நன்னீர் வெளியே படம் 6. ஆவி அழுத்தம் இக்குழாய்களை (படம் 6) மேலும் நீளமாக அமைத்துச் செயல்படுத்தும் முறைக்கு நெடுங்குழாய் ஆவியாக்க முறை எனப் பெயர். இவ்வாறு பெறும் உப்பு நீக்கம் 411 நன்னீரின் அளவு 10,00,000 கா/நா ஆகும். இம் முறையை மேலும் செம்மைப்படுத்த ஆவியாதலை வெப்பத்தில் நிகழ்த்தாமல் அழுத்தம் பெருக்கிய நீராவியைக் கொண்டும் நிகழ்த்தலாம். செங்குழாய் ஆவியாக்கியில் உள்ள உருளை வடிவக் குழாயின் ஒரு புறம் (படம் 6) கொதித்த உவர் நீர் ஆவி, சதுர அங்குலத்துக்கு 3 பவுண்டு அழுத்த வீதத்திலும் 12 வெப்பநிலை மாறுபாட்டிலும் அமுக்கப்படும். இதனால் ஆவியாதல் மேலும் செம்மையாகும். கொதிகலன் எந்திரங்களை வெப்ப ஆற்றல் உருவாக்கி களுடன் இணைப்பதால் மிகமிகக் குறைவான செல வில் வெப்பு முறை மூலம் உப்பு நீக்கம் செய்ய முடியும். சூரிய ஆற்றல் ருக்கம். ண்ணாடி தூயநீர் காப்பு உப்புநீர் படம் 7. சூரிய வெப்ப ஆவி வடித்தல் மற்றொரு வகை உப்பு நீக்கம் குளிர்முறை உறை தலின் அடிப்படையில் நிகழ்கிறது. உப்புநீரை உறைய வைக்கும்போது தூய பனிக்கட்டிகள் உருவாகின்றன. இவற்றை உருக்கி நன்னீரைப் பெறலாம். ஆனால் சிறிதளவு உப்புநீர் பனிப்படிகங்களின் முனைகளில் ஒட்டிக்கொண்டிருக்கும்; சில சமயம் பனிப்படிக அணிக்கோவைகளுள்ளும் சிக்கிக்கொண்டிருக்கும். எனவே, இம்முறை இரு தனித்தனி நிலைகளாக நிகழ்த்தப்படும். முதலில் தூய பனிக்கட்டி பெறப் பட்டுப் பின்னர் அது மாசுகளிலிருந்து பிரிக்கப்படு கிறது. இம்முறையினால் 10, 000 கா/நா, நன்னீர் பெற இயலும் அழுத்தத்தை அதிகமாக்கி உறை தலை மேலும் செம்மையாக நிகழ்த்தினால் இந்த அளவை இருமடங்காக்கலாம். சிவ சமயம் நீரின் ஆவிக்குப் பதிலாகக் குளிரூட்டிகள் (refrigerants ) பயன்படும். பொதுவாக, பியூட்டேன் வளிமம் இதற்கு உதவும். குளிர்பதனி வளிமங்களில் இதுவே மிகச் சிக்கனமானது என்றாலும் செயல்முறைச் செலவினத்தை ஒப்பிடும்போது இம்முறை (படம் 8) மிகவும் சிக்கனமானதன்று.