பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/433

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உபரசம்‌ (சித்த) 413

குறியில் (sign) எதிராகவும் ஆவதால் அவை மதிப் பிழந்து விடுகின்றன. மேலும் உப்புப்பால மின் பகுளியின் இரு அயனிகளும் ஏறத்தாழச் சமமான கடத்துதிறன் பெற்றிருப்பின், அதாவது அவற்றின் பெயர்ச்சி எண்கள் (transport numbers) 0.5க்கு ஏறக்குறையச் சமமாக இருப்பின், பின்வரும் சமன் பாட்டின்படி, Ej RT F a. in 31 நீர்மச் சந்தி மின்னழுத்தம் மிகமிகக் குறைந்த மதிப் புடையதாகி விடும். இச்சமன்பாட்டில், E- நீர்மச்சந்தி மின்னழுத்தம், எதிர்மின் அயனியின் பெயர்ச்சி எண்; t - நேர் மின் அயனியின் பெயர்ச்சி எண்; R - வளிம மாறிலி; T - வெப்பநிலை; F - ஃபாரடே அளவு; a இரு மின்முனைக்கலங்களில் உள்ள மின்பகுளிகளின் சராசரி வினை வலிவுகள் (mean activities) ஆகும். எல்லையின் குறுக்கே கடத்தப்படும் மின்னோட்டத் தை அந்த அயனிகளே முழுக்க முழுக்கச் சுமந்து செல்ல வைப்பதே தெவிட்டிய கரைசலைப் பயன் படுத்துவதன் நோக்கம் ஆகும். இவ்வயனிகளின் செறிவுடன் ஒப்பிடும்போது, சந்தியின் இரு பக்கங் களிலும் இருக்கும் அயனிகளின் செறிவு மிகக் குறைவேயாகும். மின்னோட்டக் கடத்தலுக்கு அவை அளிக்கும் பங்கும் மிகக் குறைவாகிவிடுகிறது. எனவே சந்தியின் இருபக்கங்களிலும் ஒரே ஒரு மின்பகுளி இருப்பின் எத்தகைய நிலை உருவாகுமோ, ஏறத்தாழ அதே நிலை இப்போது உருவாகிவிடுகிறது. மின்கலக் உப்புப்பாலத்தைப் பயன்படுத்துவதால் பொது வாக இரு மின்கல நீர்மங்களும் ஒன்றோடொன்று கலந்து வீழ்படிவாகும் நிலை தவிர்க்கப்படுகிறது. எனினும் சில சமயங்களில். காட்டாக கரைசல்களில் ஒன்று வெள்ளி, மெர்குரஸ், தாலஸ் ஆகிய அயனிகளில் ஏதேனும் ஒன்றின் உப்பைப் பெற்றிருப்பின், உப்புப்பாலத்தில் பொட்டாசியம் குளோரைடு கரைசலைப் பயன்படுத்த இயலாது. மாற்றாக அம்மோனியம் நைட்ரேட், நைட்ரேட், சோடியம் நைட்ரேட், வித்தியம் அசெட்டேட் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் தெவிட்டிய கரைசலைப் பயன் படுத்தலாம். இப்பொருள்களின் அயனிகள் ஏறத் தாழச் சமமான நகர்வு வேகங்கள் (ionic mobilities) கொண்டிருக்க வேண்டும். சான்றாக K+, Ci¯ அயனிகளின் சமமான கடத்துதிறன்கள் முறையே 73.5, 76.3 ஓம் -1 செ.மீ. ஆகும். அவ்வாறே NH”, NO - அயனிகளுக்கு அவை முறையே 73.4, 71.4 ஓம் செ.மீ." ஆவதால் இவ்வயனி களில் நகர்வு வேகங்கள் சமமாகி அம்மின் பகுளிகள் உபரசம் (சித்த) 413 உப்புப்பாலத்தில் சிறப்பாகப் பணி புரியத் துணை நிற்கின்றன. உண்மையாகப் இவ்வாறாக உப்புப்பாலம் நீர்மச்சந்தி மின்ன ழுத்தத்தைப் பெரிதும் குறைப்பது ஆய்வு வாயிலாக நிறுவப்பட்டிருப்பினும் அதன் சரியான வழிமுறை நன்கு அறியப்படவில்லை. மேலும் உப்புப்பாலம் ஒரு நல்ல வெப்பவியக்கக் கருவி ஆகாது. எனவே பார்ப்பின். ஓர் உப்புப்பாலம் அமைந்துள்ள மின்கலத்தை உண்மையான வெப்ப இயக்க முறையில் செய்ய யலாது. அதாவது இதனைப் பயன்படுத்தி, தனி அயனிகளின் வினை வலிமையை எந்த வெப்ப இயக்கமுறை கொண்டும் அறுதியிடுவது கடினம் என்றாலும் செய்முறைக் கண்கொண்டு நோக்கும்போது அத்தோராயம் புறக் கணிக்கத் தக்கதேயாகும். உபரசம் (சித்த) எஸ். விவேகானந்தன் சித்தர் நூல்களின்படி உபரசங்களின் எண்ணிக்கை நூற்றிருபது ஆகும். உபரசம் என்னும் சொற் றொடரில் துணை என்று பொருள் பயக்கும் உப என்னும் சொல்லும், பாதரசம் அல்லது சூதபாடணம் என்னும் பொருள் தரும் இரசம் என்னும் சொல்லும் இணைந்துள்ளன. அதாவது இச்சொற்றொடர் இரசத்தின் பண்பில் அல்லது இரசத்தின் கூறில் ஓரளவு கொண்ட பொருள் எனப் பொருள்படும். உபரசங்கள் என்று கூறப்படும் சரக்குகளை வகைப் படுத்தும்போது அவற்றில் பெரும்பகுதி கனிமங் களாகவும் சிறுபான்மை உயிரினங்களிடமிருந்து பெறப்படும் பொருள்களாகவும் அமைந்துள்ளன. பயன்கள். இச்சரக்குகளில் பலவற்றைத் தக்க முறையில் பற்பம், செந்தூரம், சுண்ணம் எனப் பலவகை மருந்துகளாக்கி உள் மருந்துகளாகப் பயன் படுத்துவர். எடுத்துக்காட்டாக அன்னபேதி, செந் தூரம், கல்நார், பற்பம், காந்தபற்பம், அப்பிரக பற்பம், முத்துச்சிப்பி பற்பம், ஆமை ஓட்டுப் பற்பம், முட்டையோட்டுப் பற்பம், நத்தைப் பற்பம் என்பன வற்றைக் கூறலாம். அவற்றின் செய்முறை போன்ற வற்றைப் பல சித்தர்கள் நூல்களின் வாயிலாகக் கூறி உள்ளனர். உபரசச் சரக்குகளில் ஏற்புடையவற்றைச்சேர்த்து சத்தெடுத்து அந்த இரசத்தின் உதவியால் கட்டி, பலவகை இரசக் குளிகைகள் செய்யப்படுகின்றன. இதில் கனமனக் குளிகை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் உதவியால் சித்தர்கள் விண்வழிப்பயணம் செய்ததாக வரலாறுகள் கூறுகின்றன.