பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/442

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422 உயர்‌ அழுத்த நுட்பம்‌

422 உயர் அழுத்த நுட்பம் உயர் அழுத்த இயற்பியலின் முதன்மையான லாக நீடிக்கிறது. சிக்க உயர் அழுத்த இயற்பியல் ஆய்வுகளில் காலம் சென்ற பெர்சி பிரிட்க்மானின் பங்கு சிறப்பானது. அவர் 1946 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார். 1908 இலிருந்து தொடங்கி நாற்பது ஆண்டுக்காலம் அவருடைய ஆய்வுகள் உயர் அழுத்த இயற்பியலில் முன்னணியிலிருந்தன; அவர் உரு வாக்கிய கருவிகள், உயர் அழுத்தங்களின் இயற்பியல் பண்புகளில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி அவர் கண்டறிந்த உண்மைகள் ஆகியவற்றையே இன்றைய உயர் அழுத்த ஆய்வுகள் பெரிதும் சார்ந்திருக் கின்றன. உயர் அழுத்த நுட்பம் கே.என்.இராமச்சந்திரன் பல்வேறு நிலைகளில் பயன்படும் அழுத்தங்களில் ஏறக் குறைய பத்தாயிரம் பார் (bar) அழுத்தத்திற்கும் அதிகமான அழுத்தம் உயர் அழுத்தம் எனப்படுகிறது. (ஒரு பார் என்பது 0.9869 காற்று மண்டல அழுத்தம் ஆகும்). உயர் அழுத்தத்தில் ஒரு பொருளின் வேதி, இயற்பியல் பண்புகள் பெரிதும் மாறுபடுகின்றன. எடுத்துக்காட்டாக, எஃகில் படிந்துள்ள உயவு எண்ணெய்த்துளி, உயர் அழுத்தத்தில் திண்ம நிலையை அடைந்து எஃகில் பள்ளத்தை உண்டாக்கும் அளவுக்கு உறுதி பெற முடியும். இரும்புக் கலனில் உருகும் சாதாரண உப்பு, உயர் அழுத்தத்தில் இரும்புக் கலன் உருகும் போதும் உருகாமலிருக்கும். புவியின் அடியில் செல்லச் செல்ல அழுத்தம் அதி கரிப்பதால் புவியடி நிகழ்ச்சிகள் உயர் அழுத்தத்தில் நிகழ்கின்றன. குண்டு வெடிப்புகள் ஏற்படுத்தும் அதிர்ச்சியலைகள் உயர் அழுத்தத்தை உண்டாக்கு கின்றன. உயர் விண்மீன்களின் மையத்தில் பொதுவாக அழுத்தம் நிலவுகிறது. எனவே உயர் அழுத்த ஆய் வுகள் தேவைப்படுகின்றன. இவற்றிற்குத் தகுந்த கருவிகளை உருவாக்க உயர் அழுத்த நுட்பம் தேவைப்படுகின்றது. ஆய்வுக் கூடங்களில் 10 106 பார் வரை உயர் அழுத்தத்தை உருவாக்கப் பல வகையான உயர் அழுத்தக் கருவிகள் பயன்படுகின் றன. இக்கருவிகளில் விசை, கன அளவு மாற்றம் இவற்றை அளவிட அளவு மானிகள் உண்டு. ஒரு பொருளை உயர் அழுத்தத்துக்குட்படுத்தி அதன் வேதி மற்றும் இயற்பியல் பண்புகளைக் கண்டறி வதற்கு ஒளிச்சிதறல் எக்ஸ் கதிர் கோட்டம் (x-ray diffraction), மாஸ்பார் உட்கவர்பு (maussbaurabsorp- tion), மின்தடை (electrical resistance), நிறமாலை முதலான ஆய்வுகளை வெவ்வேறு வெப்ப நிலையில் செய்ய வேண்டும். தண்டு-உருளைக்கருவி (piston-cylinder appara- tus ). படம் 1இல்காட்டப்பட்டுள்ள தண்டும், உருளை யும் கொண்ட உயர் அழுத்தக் கருவிதான் அமைப்பில் மிகவும் எளிமையானதாகும். இதில் ஒரு தண்டு பருமனான சுவர் கொண்ட ஒரு உருளையினுள் நகருகிறது. தண்டும் உருளையும் ஒன்றுக்கொன்று எதிராக உயர்ந்த விசையில் அழுத்தப்படும். விசை யையும், உருளையுள் தண்டின் இடப்பெயர்ச்சியையும் அளக்கத் தகுந்த அமைப்புகளுண்டு. உருளைக்கும் தண்டுக்கும் இடைப்பட்ட வெளியில் உயர் அழுத்தம் பெறவேண்டிய பொருள் இருக்கும். தண்டிலிருந்து பொருளுக்கு அழுத்தத்தைக் கடத்துவதற்காக உருளைக்கும் பொருளுக்கும் இடையில் அழுத்தம் கடத்தும் ஊடகம் (pressure transmitting medium) இருக்கும். நீர்ம நிலையில் இது அழுத்தத்தை அனைத்துத் திசைகளிலும் ஒரே அளவாகக் கடத்தும், மிக அதிகமான உயர் அழுத்தத்தில் இது திண்ம நிலைக்கு மாறுவதாலும்,உயர் அழுத்தத்தில் நீர்ம நிலையில் இது கசிந்து வெளிவருவதாலும், 11 படம் 1. தண்டு உருளைக் கருவி 5 9 10 பல 1. அழுத்தி 2. மின் அரிதில் கடத்தி 3. வெப்ப இரட்டை குளிர்விக்கும் அமைப்பு 5. கடினப்படுத்தப்பட்ட என்கு 6. மின் சூடுபடுத்தி 7. அழுத்தப்படும் பொருள் 8. அழுத்தக் கடத்தி உருளை 10. தண்டு 11. விசை. 9 23