பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/473

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயவிடல்‌, எந்திர 453

எடுத்துச் செல்லும் அலை அதிர்வெண்ணைக் காட்டுமாறு ஒரு முக்கோண அல்லது சைன் வடிவ அதிர்வெண் நேர வளைகோட்டைக் கொடுக்குமாறு செய்யப்படுகிறது.தரையில் இருந்து புறப்படும் அதிர் வெண்களுக்கும், பரப்பப்படும் அதிர்வெண்களுக்கும் உள்ள வேறுபாடு நேரப் பின்தங்கலின் அள வாகும். சில அதிர்வெண் பண்பேற்ற ரேடார்களில் மின்னியல் அதிர்வெண்மானிகள் பயன்படுகின்றன. உயரத்திலிருந்து வரும் சைகையோடு பல நெடுக்கங் களில் சைகைகளை மீண்டும் பெறுவதால் 10% அதிக மான நெடுக்க அதிர்வெண்ணைக் காட்டலாம். ஒரு காட்டி, மையத்திலுள்ள செர்வோ பரப்பிகாட்டும் வேகத்தைச் சரி செய்கிறது. பரப்பி காட்டும் வேகமே நெடுக்கமாக ஒரு மானியில் காட்டும்படிச் செய்யப்படுகிறது. அதிர்வெண் பண்பேற்றப்பட்ட ரேடார்கள் சாதாரணமாக நூறு அடிக்குக் குறைவான உயரங் களை அளக்கப் பயன்படுகின் றன. அதிர்வெண் பண் பேற்றத் தொடர் அலை உயரமானிகளைப் பயன் படுத்தியும் புவியின் மட்டத்திற்கு மேல் உயரம் அளக்கப்படுகிறது. விண்ணூர்தி ரேடியோ உயர மானிகளுக்கு 4.2 GHJ 4.4 GH, பட்டைகள் ஒதுக் கப்படுகின்றன. உயவிடல், எந்திர ஆர். வெள்ளைச்சாமி -கே.ஆர்.கோவிந்தன் சுழலக்கூடிய பகுதிகளின் நடுவே ஏற்படும் உராய் வைத் தடுக்கவும், உராய்வினால் ஏற்படும் வெப்பத் உயவிடல், எந்திர 453 தைக் குறைக்கவும் பயன்படும் வழுவழுப்பான பசை போன்ற பொருளுக்கு உயவுப்பொருள் (lubricant) என்று பெயர். திண்ம, நீர்ம, திண்ம- நீர்ம நிலைகளில் இவை பயன்படுகின்றன. திண்ம கிராஃபைட், டால்க், மைக்கா போன்றவை திண்ம நிலை உயவுப்பொருளுக்கும் கனிம எண்ணெய் நீர்ம நிலை உயவுப்பொருளுக்கும் சான்றுகளாகும். பெட்ரோலியம் வடித்துப் பகுக்கும்போது நீர்ம நிலை உயவுப் பொருள்களைத் துணைப் பொருள்களாகப் பெறவாம். திண்ம, நீர்ம வடிவத்தில் கிரீஸ் (grease) அதிக அளவில் பயன்படுகிறது. செயற்கை முறையில் தயாரிக்கப்படும் கனிம எண்ணெய் பேருந்துகள், சுமை ஏற்றிச் செல்லும் ஊர்திகள், நிலத்தை உழும் எந்திரக் கருவிகளில் அதிக அளவில் பயன்படுகிறது. இது சொட்டுச் சொட்டாகச் செலுத்தும் முறையிலோ, தெளிக்கும் அல்லது குளியல் முறையிலோ, கிரீஸ்கிண்ண முறை யிலோ, அழுத்தும் முறையிலோ பொறிக்குள் செலுத்தப்படுகிறது. இவற்றுள் தெளிக்கும் முறையும் அழுத்தும் முறையும் அதிக அளவில் பயன்படு கின்றன. தெளிக்கும் முறை. இம் முறையில் உராய்வைத் தடுக்கும் எண்ணெய் பொறிக்குக் கீழ் அமைக்கப் பட்டு இருக்கும் எண்ணெய் நிரப்பிகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. படம் 1 இல் காட்டியபடி இந்த முறையில் எண்ணெய் ஒரு சிறிய கரண்டி போன்ற பகுதியால் எடுத்துத் தெளிக்கப்படுகிறது. இணைக்கும் கம்பியின் கீழ்ப்பகுதியில் பொருத்தப் பட்டுள்ள பொறிசுழலும்போது ஒவ்வொரு சுற்றிற் கும் இந்தக் கரண்டி எண்ணெயில் மூழ்கி எண் ணெயைப் பொறியின் உருளைச் (சிலிண்டர்) சுவர் 3 1. இணைப்புத்தண்டு 1. வணர் அ. வரிக்குடம் 4 எண்ணெய்த் தொட்டி 5. குழாய். படம் 1 . தெளிக்கும் முறையால் செலுத்துதல்