பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/479

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்‌ இயற்பியல்‌ 459

களை உயிர்வேதித் துறை வெளிப்படுத்தியிருக்கிறது. மைட்டோகான்டிரியங்களுக்குள் உள்ள பிறைகளின் பரப்பளவே இந்தத்தனித் திறமைகளுக்குக் காரணமா யிருக்கலாம். இவ்வாறு பசுங்கணிகங்களிலும் (chloroplast) பரப்பளவை அதிகப்படுத்தும் வகையில் ஒரு கட்டு மான அமைப்பு உருவாகியிருக்கிறது. பசுங்கணிகத் தில்தான் ஒளி பிடிக்கப்பட்டு அதன் ஆற்றலில் ஒரு பகுதி ஒளிச்சேர்க்கையின் உதவியால் உற்பத்தியாகும் சர்க்கரைகள் மற்றும் வேறு கரிமச் சேர்மங்களுக் கிடையிலுள்ள வேதிப் பிணைப்பாற்றலாகச் சேமித்து வைக்கப்படும். ஒளிச்சேர்க்கை என்பது கார்பன் டைஆக்சைடு, நீர் போன்ற எளிய மூலக்கூறுகளைக் கொண்டு பலபடித்தான இயற்பியல், வேதி வினை களின் உதவியால் சர்க்கரைகளையும் வேறு கரிமச் சேர்மங்களையும் உற்பத்தி செய்யும் செயல்முறை யாகும். அதில் எளிய ஒளிவேதிச் செயல் (photoche- mical) முறைகள் மட்டுமன்றி வினைஊக்கிச் செயல் முறைகளும் பங்குகொள்கின்றன. சில கட் பசுங்கணிகத்தின் விவரமான கட்டமைப்பிலும் கண்ணிலுள்ள விழித் திரையில் உள்ள டமைப்புகளிலும் குறிப்பிடத்தக்க வகையில் ஒற்றுமை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. விழித் திரையிலுள்ள அந்த அமைப்புகளும் பசுங்கணிகங்களைப் போலவே ஒளியைப் பிடித்து அதை வேதி ஆற்றலாக மாற்றும் பணியைச் செய்கின்றன. பொருள்களையே கொல்லப்பட்ட மாதிரிப் எலக்ட்ரான் நுண்ணோக்கியின் உதவியால் ஆய்வு செய்ய முடியும் என்றாலும் அது உயிருடனுள்ள அமைப்புகளைப் புரிந்துகொள்வதில் பேருதவி புரி கிறது. மேலும் மேலும் அதிகமான கடினத்தன்மை யுள்ள பணிகளில் அதை ஈடுபடுத்தும்போது புத்தம் புதிய உயிர் இயற்பியல் துறை முதன்மைப் பங்காற்ற வேண்டியுள்ளது. ஒளியியல் நுண்ணோக்கியால் நேரடியாக வெளிப் படுத்த முடியாத முக்கிய அமைப்புகளில் செல் சவ்வு (cell membrane) ஒன்றாகும். அது செல்லைச் சுற்றுப் பொருள்களிலிருந்து பிரித்துக் காட்டும் ஒரு மெல்லிய படலமாக உள்ளது. வியப்பூட்டும் வகையில் பலபடித் தான முறையில் அது செல்லுக்கும் அதன் சுற்றுப் புறங்களுக்கும் இடையில் நடைபெற்றுக் கொண்டிருக் கும் ஊட்டப் பொருள் பரிமாற்றங்களை ஒழுங்கு படுத்துகிறது. 1930 இன் தொடக்கத்தில் செல் தொங்கல் நீர்மங்களின் (cell suspension) உயர் அதிர்வெண், மாறுபடும் மின்கடத்து திறன் (high frequency alternating current) ஆகியவற்றின் அள வீடுகள், பலவகை அயனிகள் மூலக் கூறுகளான செல்சவ்வுகளின் வழியாக ஊடுருவிச் செல்லும் வேகங்கள் போன்ற பல உயிர் இயற்பியல் தகவல் உயிர் இயற்பியல் 459 களின் அடிப்படையில் செல் சவ்வில் இரு மெலிந்த புரதப்படலங்கள் உள்ளன என்றும் அவற்றிற்கிடை யில் ஐம்பது ஆங்ஸ்ட்ராம் தடிமனுள்ள ஒரு கொழுப் புப் பொருள் (lipid) படலம் உள்ளது என்றும் ஊகிக்கப்பட்டது. 1950 இன் தொடக்கத்தில் எலக்ட்ரான் நுண் ணோக்கி பலவகைப்பட்ட செல் சவ்வுகள் ஏறத்தாழ இருநூறு ஆங்ஸ்ட்ராம் தடிப்புள்ளவை எனவும் அவற்றில் ஏறத்தாழ எழுபது ஆங்ஸ்ட்ராம் தடிப் புள்ள இரு படலங்களுக்கிடையில் ஏறத்தாழ ஐம்பது ஆங்ஸ்ட்ராம் தடிப்புள்ள ஒரு படவம் உள்ள அமைப் புக் காணப்படுவதாகவும் உறுதிப்படுத்தியது. இவ் வாறு பல உயிரி இயற்பியல் முறைகளில் சேகரிக்கப் பட்ட பலதரப்பட்ட தகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கருத்தின் துணையால் ஒரு புதிய உயிர் இயற்பியல் அணுகுமுறை ஏற்பட்டது. செல் சவ்வுகளின் அமைப்புகள் செயல்பாடுகள் பற்றிய பிரச்சினைகள் பலபடித்தானவை. எக்ஸ்கதிர் விளிம்பு விலகல். படிகங்களில் ஒரு குறிப்பிட்ட வகையான அணுக்கள் அல்லது அணுத் தொகுப்புகள், குறிப்பிட்ட திசைகளில் குறிப்பிட்ட தொலைவு இடைவெளிகளில் மீண்டும் மீண்டும் வரும். இந்நிலையில் அவற்றுக்கிடையிலுள்ள இடம் சார்ந்த உறவுகளைக் (spatial relations ) கண்டுபிடிக்க எக்ஸ் கதிர் விளிம்பு விலகல் (X-ray diffration) ஒரு வலிவான சுருவியாகும். உயிரற்ற படிகங்களிலும், செல்களின் எளிய ஆக்கக் கூறுகளான சர்க்கரைகள், அமினோ அமிலங்கள் ஆகியவற்றிலுள்ள அணு வடிவமைப்பை (configuration) எக்ஸ் கதிர் விளிம்பு விலகல் முழுமையாக வெளிப்படுத்தியிருக்கிறது. செல்களின் பலபடித்தான கட்டமைப்புள்ள ஆக்கக் கூறுகளின் சரியான அமைப்பைக் கண்டுபிடிப்பதில் இந்த உத்தி சிறப்பான முடிவுகளை அளிக்கவில்லை யென்றாலும் அது வெளிப்படுத்தியுள்ள பல தகவல் களை வேறு வேறு எந்த முறையினாலும் பெற்றிருக்க முடியாது. 1920 இல் குளுக்கோஸ் சர்க்கரைமூலம் கூறு களில் அணுக்களின் இடம் சார்ந்த அணிக்கோவை அமைப்பைக் கண்டுபிடிப்பதில் எக்ஸ் கதிர் விளிம்பு விலகல் முறை சிறப்பான பங்காற்றியது. இந்த மூலக்கூறுகள் வேதி முறைகளில் இணைந்து பெரும் நீளமுள்ள சொல்லுலோஸ் (cellulose) cellulose) மூலக்கூறு களாக உருவெடுக்கின்றன. இந்தச் செல்லுலோஸ்தான் தாவரச் செல் சுவர்களின் அடிப்படையான ஆக்கக் கூறாகும். எனவே மரத்திற்கும் அதுவே அடிப்படை யான ஆக்கக் கூறு எனலாம். இம்முறையில் புரதங் களை ஆராய்ந்தபோது வியப்பூட்டும் தகவல்கள் கிடைத்தன. புரதங்களில் ஏராளமான வகைகள் உள்ளன. அவற்றின் அமைப்பு பலபடித்தானது. உயிரினங்களுக்கே உரிய சிறப்பியல்பான அவை