பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/484

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

464 உயிர்‌ ஒலியியல்‌

464 உயிர் ஒலியியல் வலிமை ஆனால் அதுவும் தவறாக இருக்கலாம். தீர்க்கக் குறிப்பாக அறுவைக்குப் பிந்திய நரம்பு நார்ப்புற்றுக்கட்டி மருத்துவத்தில் வலியை நீக்கக் கேளா ஒலி ஏற்றது எனத் தெரிகிறது. பியர்மான் உடலிலுள்ள வடுக்களை நீக்க கேளா ஒலிகளைப் பயன் படுத்தியுள்ளார். மூளைத்திசுக்கட்டிகளைக் கண்டு பிடிக்கவும், இரத்த நாளங்களை இனம் காணவும் கேளா ஒலி கள் உதவும். உடலிலுள்ள வேற்றுப் பொருள்கள், பித்தப்பைக் கற்கள் ஆகியவற்றைக் கண்டுபிடிக் கவும் அவை பயன்படும். குடலிலுள்ள கோழைச் சவ்வின் தடிமனை அளக்கக் கேளா ஒலிகளைப் பயன்படுத்தும் ஒரு முறையை வைல்டு என்பார் கண்டுபிடித்துள்ளார். ஆஸ்திரேலியா வேளாண்மைத் துறையினர் சூலுற்ற ஆடுகளின் கருப்பையில் உள்ள குட்டிகளின் எண்ணிக்கையை அறியக் கேளா ஒலி யைப் பயன்படுத்துகின்றனர். எலும்புத் திசுவைப்பரிசீலிக்க எலும்பு எதிரொலி மானி (echo osteometer) என்ற கருவியை ரஷ்ய அறிவியலார் உருவாக்கியுள்ளனர். ஓர் ஊடகத்தின் வழியாக ஒலி அதிர்வுகள் பயணம் செய்யும் வேகம் அதன் அடர்த்தியைப் பொறுத்தது. இத்தத்துவத்தின் அடிப்படையில் இக்கேளாஒலிக்கருவி அமைக்கப்பட் டுள்ளது. எலும்பின் சாதாரணப் பண்புகளில் ஐந்து விழுக்காடு மாற்றம் ஏற்பட்டால் கூட இது கண்டு பிடித்துவிடும். இதைக் கொண்டு சூலுற்ற பெண் களின் எலும்புத் திசுக்களில் ஏற்படும் மாற்றங்களைத் தொடர்ந்து கண்காணிக்க முடிகிறது. எலும்பின் ஒரு முனையில் ஒலி அலைகள் செலுத்தப்பட்டு மறு முனையில் வாங்கப்படுகின்றன. ஒலி அலைகள் எலும்பைக் கடந்து செல்ல ஆகும் நேரம் ஒளிர் திரை மீது காட்டப்படும். இதன் உதவியால் ஒலி அலைகளின் வேகத்தைத் துல்லியமாகக் கணக்கிட லாம். இதனால் எலும்புத் திசுக்களின் அடர்த்தி யையும் வலுவையும் கணிக்கலாம். இதயநோயறிதலில் கேளாஒலி பரவலாகப் பயன் படுகிறது. அதை மருத்துவத்தில் பயன்படுத்துவது பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். இதய எதிரொலி இதய மின்னலை வரைவி (echocardiography) என்ற கருவி இதயத்தசையில் பட்டுப் பிரதிபலிக்கும் கேளா ஒலியை ஒரு திரையில் காட்டுகிறது. இதயத் தசை ஒழுங்காக இயங்கிக் கொண்டிருக்கும்போது திரையில் வரிசையாக அலைகள் தெரியும். இதயத் தசையில் அலையியக்கம் இல்லாத, அசைவில்லாத ஒரு சிறு பகுதி திரையில் தெரியுமானால் அப்பகுதியில் இரத்தப் பாய்வு இல்லாமல் அங்குள்ள இதயத் தசை இரத்த நலிவு காரணமாக இதயத்தசை சிதைந்துவிட்டது எனத் தெரிந்து கொள்ளலாம். கேளாஒலி உயிருள்ள திசுக்களில் நீர்மங்களின் பாய்வைத் தீவிரப்படுத்துகிறது. நீர்மமான இரத்தம் நன்கு பாய்ந்தால்தான் இதயத் திசுக்கள் நல்ல நிலை யிலிருக்கும். கேளா ஒலி - செல்சவ்வுகளினூடாக அயனிகள் கடத்தப்படுவதையும், இரத்தச் சீரத்தின் ஒளிர்வையும் தீவிரப்படுத்துகிறது. நோயுற்ற உறுப் பில் வளர்சிதை மாற்றம் இயல்பான நிலைக்குத் திரும்பிவிட்டதைத் தெரிந்து கொள்வதற்கு இது ஓர் அடையாளமாகும். இது நோய் குணமாக இன்றி யமையாதது. ரஷ்ய வல்லுநர்கள் 800 - 900 கிலோ சைக்கிள்! நொடி வரை அதிர்வெண்ணுள்ள 0.2 வாட்/செ.மீ. ஆற்றலுள்ள கேளா ஒலிக் கற்றைகள் இதய நோய் மருத்துவத்திற்கு ஏற்றவை என்று கண்டுபிடித் துள்ளனர். இதயத் தாக்குதலின் தொடக்க நிலை களிலேயே கேளா ஒலி மருத்துவம் அளித்தால் இதயத் துடிப்பின் லயப் பிறழ்ச்சி தவிர்க்கப்பட்டு இதயத் தசைகளிலேற்படும் சேதத்தின் அளவும் கணிசமாகக் குறைக்கப்படும். இதயத் தாக்குதலின்போது கேளா ஒலி மருத்துவம் அளித்தால் மார்பு நெறிப்பு இதய வலி குறைவதையும், மூச்சு விடுதல் எளிதாவதையும் காணமுடிகிறது. ஒலி உணர்வு. காது ஒலியை உணர்வதற்கு தேவையான சிறுமச் செறிவு 10-12 வாட்/மீ' எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காற்று மூலக்கூறுகள் அறை வெப்பநிலையில் சீரற்று அலைந்து கொண்டி ருக்கும் போது 10-4 நி/மீ" அளவில் அழுத்தங்களைத் தோற்றுவிக்கின்றன. இதனால் செவியில் ஏற்படும் உணர்ச்சி, வெப்ப ஒலி எனப்படும். இந்த அலையியக் கத்தின் போது மூலக்கூறுகள் பெறுகின்ற வீச்சை விடப் பன்மடங்கு அதிகமான வீச்சு செவிப் பறையி லேற்படும். இதற்கு வெளிச்செவிக் குழாய் ஓர் ஆற்றல் பெருக்கியாகச் செயல்பட்டு உதவும். ஒலியெழுப்பப்பட்டவுடன் காற்றில் தோன்றும் அலைகள் செவிக்குழலில் புகுந்து செவிப்பறையை அசைக்கின்றன. இந்த இயக்கம் நடுச்செவியிலுள்ள சிற்றெலும்புகளின் வழியே சென்று சுருள்வளை அமைப்பில் உள்ள நீள்வட்டத்துளையை அடைத்துக் கொண்டுள்ள சவ்வை அடைகிறது. பின்னர் இந்த அதிர்வுகள் ஸ்கேலாவெஸ்டிபியூல் வழியாகவும், ரீஸ் னர் சவ்வு வழியாகவும் பேசிலார் சவ்வையடைந்து கோர்ட்டியிலுள்ள உணர் கோல்களை அடைகின் றன. இக்கோல்கள் பல வடிவுகளிலுள்ளன. எனவே, அவை எந்த ஓர் அதிர்வெண்ணுடனும் ஒத்ததிர்வு செய்யும் தன்மை உடையன. ஒவ்வோர் ஒலியையும் அதற்குச் சமமான இயல்பு அதிர்வெண்ணுள்ள ஒரு கோல் தேர்ந்தெடுத்து அதைச் செவி நரம்புக்கு அனுப்பும். இறுதியில் ஒலி அலைகள் மூளையினால் மொழி பெயர்க்கப்படுகின்றன. இத் தத்துவம் ஹெம் ஹோல்ட்ஸ் என்பாரால் வெளியிடப்பட்டது.