பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/488

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

468 உயிர்‌ ஒளி உமிழ்வு

468 உயிர் ஒளி உமிழ்வு களிலுள்ள வேதி ஆற்றலை ஒளியாக மாற்றி, அதனால் மினுமினுப்பாகத் தோன்றச் செய்யும் ஒரு தனிச்சிறப்புள்ள செயலாகும். இப்பண்பினைக் கொண்டுள்ள விலங்குகளில் களில் பெரும்பாலானவை கடலின் பல்வேறு ஆழங்களிலும், நிலத்திலும் வாழ் பவை. உயிர்ஒளி உமிழ்வு (bioluminescence) சில விலங்குகளின் தனித்தன்மையான சூழ்நிலைகளுக் கேற்பத் தங்களைத் தகவமைத்துக் கொள்ளும் முக்கியத்துவம் உடையது. இப்பண்பு திசுக்களின் வளர்சிதைமாற்றத்தில் நடைபெறும் வேதிச் செயலால் தோன்றும் ஓர் உடன்விளைவு என்று கண்டறிந் துள்ளர். இதைத் தசைகள், நரம்புகள், நாளமில்லாச் சுரப்பிகளின் ஹார்மோன்கள் ஆகியவை கட்டுப் படுத்துகின்றன. விலங்குகள் இரை தேடுவதற்கும், எதிரியை அச்சுறுத்தவும், மாற்று பாலின் விலங்கை இனப்பெருக்கத்திற்காகக் கவர்வதற்கும் ஒளியுமிழ்வு பயன்படுகிறது. ஒளி உமிழும் உயிரி. ஒளி உமிழும் திறன், நுண்ணு யிர்களான பாக்டீரியா, பூஞ்சை, நாக்டிலூக்கா, குழி யுடலிகளில் ஹைட்ராய்டு வகைப் பாலிப்பு, கூழ் மீன், சைபனோபோர், கடல் பேனா டீனோஃபோர் ஆகியவற்றில் காணப்படுகின்றன. வளைதசைப் புழுக்களில் ஐசீனியா, கீட்டாப் டீரஸ், டோமாப்டெரிஸ், செதில் புழுக்கள், சிப்ரிடினா என்னும் ஆஸ்ட்ரகோடு வகை ஒட்டுடலி, கோபி பாடுகள் போன்றவற்றிலும் இவ்வொளிர்வு காணப் படுகின்றன. கூனிறால் (shrimp) யூபாசிடு ஆகிய வற்றில் உள்ள ஒளி உமிழ்வுறுப்புகளில் ஒளிச்செல் களில் அடியில் ஒளி பிரதிபலிக்கும் அடுக்கும் அவற் றின் மேற்புறம் ஒரு வில்லையும் (lens) அமைந் துள்ளன. செர போலியோடோபிளாவிலும் பூச்சிகளில் டோபிளானஸின் இளவுயிரியிலும் ஒளி மால்பீஜியன் நுண்குழல்கள் என்னும் கழிவு நீக்கவுறுப்புகளிலிருந்து தோன்றுகிறது. லேம்பிரிடு, எலாஸ்டெரிடு என்னும் ஒளியுறுப்புகளைக் கொண்ட மீன்