பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/489

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்‌ ஒளி உமிழ்வு 469

இரு கூட்டங்களைச் சேர்ந்த அனல் ஈ (fire fly) மிகச்சிறந்த ஒளி உமிழ் உயிரி ஆகும். இதன் வயிற் றில் உள்ள ஒளி உமிழ் உறுப்பில் இரு செல் அடுக்கு கள் உண்டு. அவற்றில் கீழ் அடுக்கில் ஒளி உமிழ் செல்களால் உண்டாக்கப்படும் ஒளியை மேல் அடுக் கில் உள்ள செல்கள் பிரதிபலிக்கின்றன. மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த குகுஜோ வண்டான பைரோ ஃபோரஸில் பச்சை ஒளியை உமிழும் உறுப்பும், செம் மஞ்சள் ஒளியை உமிழும் உறுப்பும் உள்ளன. தென் அமெரிக்காவைச் சேர்ந்த ரயில்வே புழு எனப்படும் ஃபிரிக்ஸோத்ரிக்ஸின் தலைப்பகுதியில் சிவப்புநிற உயிர் ஒளி உமிழ்வு 469 ஒளி உமிழ்தலும், உடலின் கண்டங்களில் பச்சை நிற ஒளி உமிழ்தலும் காணப்படுகின்றன. மெல்லுடலிகளில் பாறைத் துளைக்கும் சிப்பி யாகிய ஃபோலஸ் தன்,ஒளி உமிழ் சுரப்பிகளிலிருந்து வரும் சுரப்பைத் தூம்புக் குழாயில் செலுத்தி ஒளி உண்டாக்குகிறது. சில நியூடிபிராங்கு வகை நத்தை களில் ஒளி உமிழும் செல்கள் உடலெங்கும் உள்ளன. லாலிகோவில் ஒளி உமிழ் பாக்டீரியாக்கள் ஒளியை உண்டாக்குகின்றன. ஆனால் ஏனைய தலைக்காலிக் ளில் அவற்றின் உடற்செல்களே ஒளியை உண்டாக்கு! தூண்டில் மீனில் காணப்படும் ஒளியுமிழும் உறுப்பு