பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/494

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

474 உயிர்நிறை (உயிர்க்‌ கூளம்‌)

474 உயிர்நிறை (உயிர்க் கூளம்) உயிர்த்தொலை அளவியில் மூன்று நிலைகள் உள்ளன. இவை ஆற்றுகை (transduction), தத்துகை, (transmission), பதவுகை (processing), ஆகியவை யாம். உயிரியற் சைகைகள் (biological signals) மின் சைகைகளாகவோ, பிற வகை ஆற்றல்களைப் பயன்கொள்ளக் கூடிய ஒப்புமைச் சைகைகளாகவோ {analog signals) ஆற்றுப் பொறிகளால் (transducers ) மாற்றப்படுகின்றன. இதுவே ஆற்றுகை ஆகும். அடுத்த நிலையில், இச்சைகைகள் தேவைப்படும் இடங்களுக்குச் செலுத்தப்படுகின்ற நிலையில் தத்து கையாம். இறுதி நிலையான பதவுகையில் பெறுகைக் களத்திற்குச் சைகைகள் வந்தவுடன், அவை மீண்டும் முதல் வகை சைகைகளாக மாற்றப்படவேண்டும். இல்லையெனில், கணிப்பு முறைகளுக்கேற்ப, அதே செய்தியைத் தரும் வேறு வகைச் சைகைகளாக்கப் பட வேண்டும். மருத்துவ உயிரியல் தொலையளவி ஆய்வுகளுக் குத் தனியான சிறுசிறு பண்பலைத் தத்துப் பொறி கள் (frequency modulated transmitters) பயன்படு கின்றன. அல்லிணை அகத்துப்பு அல்லது எண்டோ ரேடியோஸான்டே எனப்படும் இப்பொறி விழுங் கப்படக் கூடிய வில்லையாகவோ (ரேடியோ மாத் திரை (radio pill) உடலின் ஓரிடத்தில் பொருத்தப் படக் கூடிய கருவியாகவோ இருக்கலாம். ஒவ்வொரு பொறியும், ஏறத்தாழ இரண்டாண்டுகளுக்கு உயிரியற் சைகைகளை வாங்கி வெளியிடக் கூடியவை. குடலழுத்தம், குருதியழுத்தம், உடல் வெப்பம், கதிரியக்க வீச்சு, இதய மின் வரைவு, மூளை மின் வரைவு போன்றவற்றோடு நோயாளியின் உடலில் காயம் பட்ட இடங்கள், குருதி வழியும் இடங்கள், உடைந்தொழுகும் குருதி நாளங்கள் ஆகியவற்றை யும், உயிர்த்தொலை அளவி மூலம் தெளிவாகக் கண்டறியலாம். பெரிய ஆய்வுக் கருவிகளும், கம்பியிணைப்பு களும் இல்லாமையால் உயிர்த்தொலை அளவியின் பணி மிகு பயனுடையதாகின்றது. விலங்கினங்களில் ஆய்வு செய்யும்போது, அவற்றைக் கட்டிப் போட்டுத் துன்புறுத்த வேண்டியதில்லை. அவ்வாறே மிகு நோய் வாய்ப்பட்டுக் கிடக்கும் நோயாளிகளுக்கும் கருவி களைக் கொண்டு இடையூறு ஏற்படுத்த வேண்டிய தில்லை. அவ்வகையானும், உயிர்த் தொலை அளவி மருத்துவ ஆய்வுகளில் மிகுந்த பணியாற்றுகின்றது. சுதா சேஷய்யன் உயிர்நிறை (உயிர்க் கூளம்) ஒரு வாழிடத்தில் உள்ள உயிர்ப்பொருள்கள் அனைத் தும் சேர்ந்ததே அவ்விடத்தின் உயிர்க்கூளம் (biomass ) ஊன் எனப்படும். உணவை உற்பத்தி செய்யும் உற்பத்தி உயிரிகள் எனப்படும் தாவரங்களையும், இவற்றை உண்ணக்கூடிய தாவர உண்ணிகள் எனும் முதன் நுகர்பவையையும் (primary consumers) இவற்றை உண்ணக்கூடிய ஊன் உண்ணிகளான இரண்டாம் (secondary consumers) நுகர்பவையையும் உண்ணிகளில் வேட்டையாடி உண்ணும் ஊன் உண்ணிகளான மூன்றாம் நிலை நுகர்பவையையும், (tertiary consumers), இவை அனைத்தும் இறந்த பின்பு மட்கி அழுகச் செய்யும் பாக்ட்டீரியா போன்ற சிதைப்பவையையும் குறிக்கக் கூடிய பொதுச் சொல்லே உயிர்க் கூளமாகும். தயாரிப்பலை,நுகர்பவை, சிதைப்பவை ஆகிய மூன்று முக்கிய பகுதிகளும் சேர்ந்து உயிரின் எடை ஆகிய உயிர்க் கூளம் எனப்படுகிறது. உயிர்க் கூளத்தை வாழிடத்து உயிரிகளின் நிறை அல்லது எடை என்றும் குறிப்பிடலாம். எடுத்துக்காட்டாக ஒரு குட்டையின் உயிர்க் கூளம் என்பது அக்குட்டையி லுள்ள நீர்த்தாவரங்களின் எடை, அந்நீரிலுள்ள பாம்பு, தவளை, மிதவையுயிரி, ஒருயிர் உண்ணி நத்தை, மீன் ஆகிய அனைத்தின் ஒட்டு மொத்த மான எடையே ஆகும். மிகப்பெரிய வாழிடங்களான காடுகளின் உயிர்க் கூளம் அங்குக்காணப்படும் மரங் களின் உயரம், பருமனைக் கொண்டே கணக்கிடப் படுகிறது. உயிர்க் கூளங்களைக் கணக்கிடும் போது தாவரங்களை ஆற்றல் உற்பத்தியிலும், ஏனைய உயிரிகளை ஆற்றலை அழித்து நுகரும் பகுதியிலும் கணக்கிட்டுத் தாவரங்களை விட உயிரிகள் அதி கரிக்கும் வாழிடங்களின் அழிவுத்தன்மையையும், தாவரங்கள் மிகுந்திருக்கும் வாழிடங்களில் உயிர்கள் பல்கிப் பெருவதையும் உயிர்க் கூள விகிதமாகச் சூழ்நிலை வல்லுநர்கள் விவரித்துள்ளனர். என்று உயிர்க் கூனம் அளவிடுதல். ஒரு வாழிடத்திலுள்ள உயிர்க் கூளத்தை அளவிடுதல் மிகவும் கடினமான செயலாகும். சிலர் அவ்வாழிடத்தில் உயிரிகள் உற் பத்தி செய்யும் அல்லது பயன்படுத்தும் ஆற்றவை (கலோரி) அளவிடுதல் மூலம் அளவிடலாம் கூறியுள்ளனர். சிலர் வாழிடத்திலுள்ள தாவரங்கள், நுண்ணுயிர்களின் எடையையும் அவற்றை உண் கின்ற விலங்குகளின் எடையையும் கொண்டு அள விடலாம் (கிராம்/மீட்டர்") என்றும் கூறியுள்ளனர். பலர் இந்த அளவிடுதல் உயிரிகளின் செல்களைக் கணக்கிடுவதற்கு ஒப்பாகும் என்றும், உயிரிகளின் செல்களிலுள்ள சேமிப்பு ஆற்றல் எனப்படும் அடினோசின் ட்ரைபாஸ்ஃபேட்டி (APT) எண்ணிக் கையே ஒரு வாழிடத்தின் உயிர்க் கூளம் என்றும் வரையறுத்துள்ளனர். எடுத்துக்காட்டாக ஒரு குட்டையின் ஆற்றல் உற்பத்தியை அங்குள்ள ஒரு கனமீட்டர் நீரில் காணப்படும் மிதவையுயிரியின் உலர் நிறையைக்