பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/497

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்ப்‌ பாறை அடுக்கியல்‌ 477

போன்ற நோய்களுக்குத் தடுப்பு மருந்துகள் இம் முறையால் கண்டறியப்பட்டுள்ளன. தொழில் துறைப்பயன்பாடு. நொதித்தல் முறையில் உருவாக்கப்படும் திராட்சை மது பீர் ஆகிய மது பானங்கள் தயாரிப்பில் உயிர்நுட்பவியல் பெரிதும் பயன்படுகிறது. உயிரினங்களின் அனைத்து இயக்கங்களுக்கும் காரணமான நொதிகள் கூட உயிர்நுட்பவியல் உதவி யால் பெருமளவில் தயாரிக்கப்படுகின்றன. இவ்வறி வியல் கருத்தைக்கொண்டு எதிர்கால எரிபொருள் தேவையை நிறைவு செய்ய முடியும் என்று கூறப் படுகிறது. உயிர்நுட்ப அறிவியல் மூலம் மாசுபட்ட சுற்றுப் புறச் சூழ்நிலைகளைச் சிலவகைப் பாக்டீரியாக் களைக் கொண்டு தூய்மைப்படுத்த முடியும். சில பாக்டீரியாக்கள் DDT, 2,4,5-D என்ற வேதிப் பொருள்களைச் சிதைக்கின்றன. இவைபோலவே, மெழுகு, தார் வகைக்கழிவுப் பொருள்களையும் நச் சற்ற பொருள்களாக மாற்றி அமைக்க முடியும். மேலும் பல புதிய உத்திகள் கண்டறியப்பட்டு வரு கின்றன. கால்நடைத்துறைப்பயன்பாடு. இந்த ஆய்வு கால் நடை நோய்களுக்கான தடுப்பு மருந்துகளையும் உரு வாக்கியுள்ளது. கால்நடைகளில் நோய் எதிர்ப்பு ஆற்றலை உண்டாக்கவும், உயர் இனப்பசுக்களின் கருவுற்ற முட்டைகளை மலட்டுத்தன்மையுடைய பசுக் களுக்கு மாற்றி மலட்டுத்தன்மையுடைய பசுக்களை தாய்ப்பசுக்களாகவும், அவை கன்று ஈனும் முன்பே பாலினத்தை அறியவும், சில கால்நடை நோய் மருந்துகளை உருவாக்கவும் இவ்வறிவியல் பயன்படு கிறது. இந்த உயிர் நுட்பவியல் ஆய்வு மரபியல் துறை யில் பெரும் மறுமலர்ச்சியை உருவாக்கி உள்ள. து. வளர்ந்து வரும் அறிவியல் துறைகளில் உயிர் நுட்ப வியல் ஒரு தனிப்பட்ட இடத்தைப் பெறுகிறது. இந்த அறிவியல் துறையின் வளர்ச்சி, தொழில்துறை. வேளாண்மைத்துறை, கால்நடை இனப்பெருக்கவியல் துறை, மருத்துவத்துறை ஆகியவற்றில் புதிய மறு மலர்ச்சிகளை உருவாக்க உறுதுணையாக இருக்கும். உயிர் நுட்பவியல் பல உறுப்புகளைப் பெற்று இருந்தபோதும், அறிவியலாளர்கள் கீழ்க்காணும் நட வடிக்கைகளுக்கே முதலிடம் முதலிடம் தந்துள்ளனர். ஒரு-செல்-புரோட்டீன் நுண்ணுயிரிகள் மூலம் கழிவுப் பொருள்களைச் சிதைக்கச் செய்து, அவற்றை எளிய வேதிப் பொருள்களாக மாற்றி, கால்நடை களுக்குத் தீவனமாகப் பயன்படுத்துவது; கழிவு நீரைத் தூய்மை செய்து மீண்டும் அதை வேளாண்மை மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்துவது உயிர்ப் பாறை அடுக்கியல் 477 கழிவுப் பொருள்களை நுண்ணுயிர்களின் வளர்சிதை மாற்றத்தின் மூலமாகச் சிதைத்து மீத்தேன் போன்ற எரிவளிமங்களைத் தயாரிப்பது; கலப்பின விதைகளை உற்பத்தி செய்வது; தேவைப்பட்ட செடிகளைத் திசு வளர்ப்பு மூலம் தோற்றுவிப்பது; ஒளிச்சேர்க்கைச் சயலை அதிகரிக்கச் செய்வது; வேதிப்பூச்சிக் கொல் லிகள் நச்சுத்தன்மை வாய்ந்தவையானமையால், அவற்றைத் தவிர்த்து உயிர்வழிப் பூச்சிக் கொல்லிகள் தயாரித்தல் மற்றும் ஃபீரோமோன்கள் எனப்படும் வேதிப்பொருள்களைக் கொண்டு பூச்சி இனங்களைக் கட்டுப்படுத்துதல். ஹைட்ரஜன் வளிமத்தை வருங்கால எரிபொரு ளாகப் பயன்படுத்த நடவடிக்கைகள் எடுப்பது; தேவைக்கு ஏற்ப உயிரினங்களை மருத்துவத்தின் மூலம் மாற்றியமைத்தல் என்பனவே மரபியப்பொறி யியல் (genetic engineering) ஆகும். பலர் மரபியப் பொறியியல் தான் உயிர் நுட்பவியல் என்ற தவறான கொள்கையைக் கொண்டுள்ளனர். மரபியப் பொறி யியல் உயிர் நுட்பவியலின் ஓர் கூறாகும். உயிர்ப் பாறை அடுக்கியல் ச.ரா.சீரங்கசாமி பாறைகளின் வேதியியற் சேர்க்கை, அவற்றில் காணப்படும் புதை படிவங்கள், மேல் அடுக்கு முறைக் கொள்கை (order of superposition) ஆகிய வற்றைக் கருத்திற்கொண்டு புவி வரலாற்றைக் கண்டறியப் புவியமைப்பியல் அறிஞர்கள் முயலு கின்றனர். இவற்றில் புதை படிவங்களைக் கொண்டு நில அடுக்கியல் வரலாற்றைக் கண்டறிய உயிர்ப் பாறை அடுக்கியல் பிரிவு (biostratigraphy) உதவு கிறது. பாறைச் சுவடியின் ஏடுகளாகிய அமைவுகளில் (formation) ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு வாய்ந்த. வேதிச் சேர்க்கை மட்டுமல்லாமல் பிற அமைவு களுக்கு வேறுபட்ட புதை படிவங்களையும் தன் னகத்தே கொண்டுள்ளது. தொல் புவி வரலாற்றின் ஒவ்வொரு காலத்திலும் காணப்படும் விலங்குகளும் தாவரங்களும் தனிச் சிறப்புத் தன்மையைக் கொண் டிருக்கின்றன. சில குடும்ப விலங்குகளும் தாவரங் களும் நீண்ட காலம் வாழ்ந்து, நீண்ட அளவு விகி தத்தில் பரவியிருப்பினும் சில குடும்பங்கள் மட்டும் குறுகிய அளவு விகிதத்தில் ஒரு குறிப்பிட்ட காலமே வாழ்ந்திருக்கின்றன. எடுத்துக்காட்டாக. கிராப் டோலைட்ஸ், அம்மோனைட்ஸ் போன்ற மேற்புற வடிவ அமைப்புச் சிறப்புத் தன்மை வாய்ந்தவை. குறிப்பிட்ட குறுகிய காலத்தில் வாழ்ந்தமையால்