பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/499

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்ப்‌ பாறை அடுக்கியல்‌ 479

சைலேச்சர் என்பவரும் ஐரோப்பாவில் காணப்படும் புகழ் வாய்ந்த ஆழ்நீர் பிளைஸ் படிவுகளிலும் இவ் வகை வளைவுகளால் எளிதில் அடுக்கின் நிரலை அமைத்திட முடியும் என நிறுவியுள்ளார். இவ் வளைவுகள், திடீரென்று ஏற்படும் படிவு நிலைகளை யும் பாறை அடுக்கின் காலத்தையும் அறுதியிட உதவுகின்றன. காலநிலை, சுற்றுச் சூழல் இலை மாறும்போது பாறைப் படிவுகளிலும் இயற்பியல் வேதியியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. புதை படிவங்களிலும் குறிப்பிட்ட மாற்றங்கள் ஏற்படுகின்றன. இம்மாற் றங்கள் தெளிவாகத் தெரியும் வண்ணம் இருக்கும். இத்தகைய புதை படிவங்கள் உயிர்ப்படிநிலை (biofacies) எனக் குறிப்பிடப்படுகின்றன. உயிர் அடுக்கியல் அலகுகள் உயிர் வளாகம். பாறை அடுக்கு நிரலில் பயன்படும் பிரிவுகளைப் போலப் புதை படிவங்களை அடிப்படையாகக் கொண்டு உயிர் அடுக்கியல் பயன்படுகின்றன. அலகுகள் இவற்றின் வரம்புகள், புதை படிவங்களின் தோற்றம், அதிகளவு நிறைவு, அவற்றின் மறைவு போன்றவை தொல்லுயிர் அடிப்படைத் தத்துவத்தின் மூலம் வரையறுக்கப்படும். உயிர் அடிப்படை உயிர் அடுக்கியல் அலகு, வளாகம் (biozone) என அழைக்கப்படும். எவ்வகை உயிரிகளும் அனைத்துவகைப் பாறைகளிலும் புதை படிவங்களாகப் படியமாட்டா. ஓர் உயிர் தன்னு டைய உயிர் வளாகத்தை அமைப்பது, அதன் விரை வான பரவுதலையும், கால நிலைகளையும், சுற்றுப் புறச் சூழ்நிலைகளையும் பொறுத்தமையும். உறுதியான தடுப்பு இல்லாவிடில், பெரும்பாலான உயிரிகள் பெரும் புவியியல் பரப்பில் விரைவில் பரவக் கூடும். ஆனால் புவியியல் வரையறை ஒவ் வோர் உயிரிக்கும் அளவுகோலாக அமைகிறது. குறிப்பாக அகலாங்கு அளவுகளில் விரைவாக உயிரி கள் பரவுவதை வெப்பநிலை, சுற்றுப்புற சூழ்நிலை ஆகியவை தடுக்கின்றன. கடல்களும் நிலங்களும் குறிப்பிட்ட இடத்தில் வாழும் விலங்குகளின் பரவலைத் தடுக்கின்றன. சிலசமயங்களில் மிதக்கும் தன்மை, பறவைகளின் எச்சம், மிகு விசையுள்ள காற்று முதலியன தடுக்கும் ஆற்றலையும் மீறித் துடைத்தெடுக்கும் வழிகளை ஏற்படுத்துவதுண்டு. இவ்வழிகளுக்குத் தீவுகள் பாலங்களாக அமை கின்றன. தொடர்ச்சியான ஆனால் குறுகிய இப் பாதைகளை இடப்பெயர்ச்சி இடைநடைக்கூடம் migration corridor) எனக் corridor) எனக் குறிப்பிடுகின்றனர். எ.கா: பனாமாவில் உள்ள இஸ்த்மஸ், மிருகங்கள் தென் அமெரிக்காவிலிருந்து, வட அமெரிக்காவிற்குச் செல்லக்கூடிய இப்பெயர்ச்சி இடைநடைக் கூட மாக, பிளிஸ்டோசீன் காலத்தில் செயல்பட்டதற்குச் சான்றுகள் உள்ளன. உயிர்ப் பாறை அடுக்கியல் 479 விதைகளும், மகரந்தப் பொடிகளும் காற்று எடுத்துச் சென்று பரப்பும் பொருள்களில் முக்கிய மானவையாகும். காற்றின் விசைக்கேற்ப விழும் இடங்களில் அவை பாறைகளில் படிந்து மரப்பொருள் புதை படிவங்களை ஏற்படுத்துகின்றன. குறிப்பிட்ட வெப்ப மாற்றங்களும் தடைகளும் குறிப்பிட்ட உயிரிகளுக்கு ஏற்ப அமைந்து குறிப் பிட்ட உயிரிகளின் புதை படிவங்களைக் கொண்ட இடங்களை ஏற்படுத்துகின்றன. இப்பகுதி உயிர்ப் புவியியற் கடமை எல்லைகள் ( biogeographic provi- nces) என அழைக்கப்படும். வரையறுக்கப்பட்டுள்ள உயிர்ப் புவியியற் கடமை எல்லைகளில் சில குறிப் பிட்ட உயிரிகளே காணப்படுகின்றன. களைக் புதை படிவங்களின் ஒப்புமை உயிர் அடுக்கியல் அலகுகளினால் கால உறவு கண்டுபிடிக்க இயலும். சில வகையான அடுக்கியல் ஒப்புமைகளைப் பற்றிய சில கருத்துக்கள் பின் வருமாறு: உயிர் து. நில அடுக்கியல் வரம்புகளும், வளாகங்களும். நில அடுக்கியலில் பாறைகளில் செங்குத்தாகக் காணப் படும் புதை படிவங்களின் விரிவு, அடிப்படைக் கருத்து களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. புதை படிவ உயிரிகளின் பரவும் தன்மை பாறைகளின் குணங்கள், நில அமைப்பு, பாறைகளின் வேதியியற் சேர்க்கை முதலியவற்றை அடிப்படையாகக் கொண்ட பாறைகளின் குத்து அளவைக் குறித்த பின்னர், அவற்றில் காணப்படும் புதை படிவங்களின் அளவுகளைக் குறித்து நில அடுக்கியல் நிரலை எளி தாக உண்டாக்குகின்றனர். காலத்தைக் கணக்கிடும். போது, நீண்ட அமைவில் குறிப்பிட்ட ஒரேயொரு புதை படிவக் குடும்பம் இருக்கும்போது மேலே காணப்படும் புதை படிவம், கீழே காணப்படும் புதை படிவம் எனக் கருத்திற் கொள்ள வேண்டும். இவை வேறுபட்ட காலநிலைகளைக் குறிக்கக் கூடும். ஏனெ னில் இடப் பெயர்ச்சி, இடத்திற்கு இடம் மறையும் வேறுபடும் தன்மை முதலியவற்றால் இவை தாக்கு தல்களுக்கு உட்பட்டிருக்கக்கூடும். வரலாற்றுச் சிறப்புப் பெற்ற ஒப்புமை முறை, பெரும்பாலும் புதை படிவங்களின் மிகுதியும் நிறைமை அடிப்படையில் அமைந்துள்ளது. உள் சுற்றுப்புறச் சூழ்நிலையின் சிறப்பும், உயிரிகளின் எச்சப் பகுதிகளை மண் படிவுகளில் பாதுகாக்கும் முறையும், புதை படிவங்களின் மிகுதியாக நிறை மைக்கு அளவுகோலாக அமைகின்றன. பெரும் பாலும் ஏற்றுக்கொள்ளப்படும் உயிர் அடுக்கியல் வளாகங்கள் இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற் பட்ட புதை படிவ உயிரிகளின் அளவுகளை அடிப் படையாகக் கொண்டவை. இவை தொகுதி வளா கம் (assemblage zone) என அழைக்கப்படும்.