பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/502

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

482 உயிர்ப்‌ பாறை அடுக்கியல்‌

482 உயிர்ப் பாறை அடுக்கியல் இடையூழிக்கால லைட்டுகளும் அம்மோனைட்டு களும் சிறந்த எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றன. புதை படிவங்களின் வடிவ அமைப்பியல். உயிரிகளில் ஏற்படும் திடீர் வடிவ அமைப்பு மாற்றங்கள், குறிப் பாக நிகழ் ஊழிப் (cenozoic age) பாறைகளையும் படிவுகளையும் ஒப்பிட்டுப் பார்க்க மிகவும் பயனுள்ளவையாகக் காணப்படுகின்றன. முக்கிய மாக மிதவை நுண் உயர்த்தொகுதிகளில் (planktonic foraminiferas) காணப்படும் ஓடுகளின் சுழற்சித் திசை இவ்வகை ஆய்வுக்குப் பயன்படுகிறது. குளோ பேர்ரோடாலியாவில் காணப்படும் மாற்றுச் சுழற்சி பிளியோசீன்-பிளிஸ்டோசீன் வரம்பை ஆழ்கடல் படிவுகளில் வரையறுக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது (படம் 2). சுழற்சி,திசைவெப்பத்தால் மாற்றப்படுவதுபோல் ஆய்வுகள் கருத்துத் தெரிவிக் கின்றன. மாற்றுச் சுழற்சிகள், பொதுவாகப் பெரிய அளவான காலநிலை மாற்றத்தால் ஏற்படுகின்றன. . வாழ்க்கைச் சூழல் அமைப்புகள். சில சமயங்களில். புதை படிவங்கள், குறிப்பிட்ட உயிர் அடுக்கியல் அமைப்புகள் (stratigraphic patterns) பெற்றுள்ளமை யால் ஒப்புமை முறைக்குப் பயனுள்ளவையாக உள்ளன. பொதுவாக கடல் முன்னேற்றம் (transgres- sion) கடல் பின்னிறக்கம் (regression) ஆகியவற்றால் வாழ்க்கைச் சூழல் பாதிக்கப்படுவதால் உயிரிகளின் வடிவியல் அமைப்பும் அதன் குணங்களும் மாறுபடு கின்றன. இவ்வித மாறுதல்கள் ஒப்பீட்டு முறைக்கு 10 மிகவும் உதவுகின்றன. பெரிய நிலப்பரப்பில் திடீ ரென்று மாறும் வாழ்க்கைச் சூழலால் பாதிக்கப் படும் உயிரிகள், பிற்காலத்தில் புதை படிவங்களைக் கொண்டு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அவை மிகச் சிறந்த எச்ச அமைப்புகளை வைத்து விட்டுப் போயுள்ளன. அளவுசார்ந்த ஒப்பீட்டு முறைகள். புதை படிவக் குடும்பங்களின் புள்ளியல் அளவுகளைக் கருத்திற் கொண்டு ஷா என்பார் ஒப்பீட்டு முறை ஒன்றை விளக்கியுள்ளார். இரு அமைவுகளின் குத்து அளவு களை X, Y அச்சுகளில் குறித்துக்கொண்டு இரு அமைவுகளின் பொதுவான புதை படிவங்களை வரை கட்டத்தில் புள்ளிகளாகக் குறிக்கலாம் (படம் 3). புதை படிவங்களின் வரம்புகள், இரு அமைவுகளிலும் ஒத்திருக்கும்போது, புள்ளிகளை இணைக்கும் கோடு நேராகவும் இரு அச்சுகளுக்கு 45° கோணத்திலும் அமையும். இது ஒப்புமைக் கோடு (correlation line) எனப்படும். இக்கோட்டின் தன்மை பாறைப் படிவு களின் காலத்தை அடிப்படையாகக் கொண்டது; பாறைப் படிவுக்கோடு காலம் மாறும்போது இரு வளைகோடாக அமையும். குறிப்பிட்ட காலத்தில் இரு அமைவுகளில் பாறை உண்டாகும் காலத்தின் விகிதத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். திடீரென்று ஏற்படும் பாறைப் படிவுக் கால மாற்றங்களை வரைப்படிவத்தில் குறிப்பிடும்போது இரு அமைவுக்கான ஒப்புமைக்கோடு நாய்க்கால் தூரம் (அமைவு "அ" வில் புதை படிவம்) 司 6

  • 6

+8 1, தூரம் (அமைவு வில் புதை படிவம்) 4 6 8 10 படம் 3. (ஆ) வரைகட்டத்தில் இரண்டு அளமவுகளுக்கு பொதுவான ஒப்புமை கோடு