பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/537

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்விசை இயக்கவியல்‌ 517

தன்மை (pH) 7 ஆகவும், வெப்பநிலை 35° C ஆகவும் நிலை நிறுத்தப்படும். ஐந்து நாள்களில் சாணம் பெருமளவில் சிதைவடைகிறது. உயிர்வளிமத்தில் மீத்தேன், ஈத்தேன் ஆகியவை தவிர, கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, ஹைட்ரஜன் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. இவற்றின் எரி ஆற்றல் ஒரு கன மீட்டருக்குப் பெட்ரோலிய எரி பொருள்களைவிடக் கூடுதலானது. வளிமம் அகற்றப் பட்ட பின்பு எஞ்சியுள்ள திண்மநிலைக் கழிவுப் பொருளை உரமாகப் பயன்படுத்தலாம். இக்கழிவில் நைட்ர ஜன் செறிவு (நொதித்திராத கழிவிலுள்ளதைக் காட்டிலும்) கூடுதலாக உள்ளதாலும், நோய்பரப்பும் நுண்ணுயிர்கள் அறவே அகற்றப்பட்டுள்ளமை யாலும், இது சிறந்த உரமாகக் கருதப்படுகின்றது. மே. இரா. பாலசுப்ரமணியன் உயிர்விசை இயக்கவியல் இது உயிரினங்களில் ஏற்படும் பல்வேறு செயல்பாடு களையும், இயக்கங்களையும் பற்றி விளக்கும் துறை யாகும். இதை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை உயிரினங்களின் நடத்தை முறைமை, அதற் சூரிய காரணிகள், அவற்றைக் கட்டுப்படுத்தும் சூழல்கள் இவற்றைப் பற்றிய விளக்க அறிவு தரும் நடத்தை இயக்கச் சீரியல் (behavioral dynamics), உயிரிகளின் அகச் சூழலை நிர்ணயிக்கும் வினைகள். கட்டுப்படுத்தப்படும் வகைகள் இவை குறித்த அகநிலை இயக்கச்சீரியல் (internal dynamics) உயிரிகளின் உடலில் ஆற்றல் உருவாக்கப்படும். முறைகள், அவற்றின் மாற்றங்கள் ஆகியவற்றைக் குறிப்பிடும் உயிராற்றலியல் (bioenergetics) எனப் படும். உயிரியக்கவியலின் சிறப்புக் கூறுகளாக,இரத்த ஓட்ட இயலையும், மனவியக்கவியலையும், அசைவு ஆய்வியலையும் குறிப்பிடலாம். அவை - நடத்தை முறைமைகள் -நடத்தை இயக்கச் சீரியல் ஓர் உயிரினத்தின் நடத்தை முறைமையைப் பல காரணிகள் உறுதிப்படுத்துகின்றன. இக்காரணி கள் ஒன்றுக்கொன்று இணைந்து செயலாற்றுவன வாகவும் சில நேரங்களில் ஒன்றன் மீது பிறிதொன்று ஆதிக்கம் செலுத்துவதாகவும் உள்ளன. புலன்களின் பாதிப்பு. புலனியங்கியல் (sensory physiology) கருத்துப்படி சுற்றுப்புறக் குறியீடுகளே ஓர் உயிரினத்தின் இயக்கத்தையும், செயல்களில் பெரும்பான்மையையும் கட்டுப்படுத்துகின்றன. தேனீக்கள், தங்களின் கண்ணோக்கையும் நுட்பமிகு நுகருந்தன்மையையும் கொண்டே தேனும், மகரந்த மும் இருக்கக் கூடிய ங்களைக் கண்டுபிடிக் உயிர்விசை இயக்கவியல் 517 கின்றன. குறிப்பிட்ட சில ஒலிகளோடு கூடிய ஒரு வகை நடனத்தை நடத்தி, தங்களின் துணைகளுக்குத் தேன் உள்ள இடங்களைக் காட்டிக் கொடுக்கின்றன. அவ்வாறே நீரிலுள்ள விலங்குகள் கரை நோக்கி வரு வதற்கு மணலிலிருந்து வெளிவரும் மணத்தினால் தூண்டப்படுவதே காரணமாகும். எனவே புலன்கள், நடத்தைக்குக் காரணமாகின்றன. மூளை மையம். உயிரினங்களின் ஒவ்வொரு செய லுக்கும் மூளையின் சில பகுதிகள் காரணமாயுள்ளன. இப்பகுதிகளின் கட்டளை விளைவாக நடத்தை நிச்சயிக்கப்படுகின்றது. இதற்கான செய்முறை விளக் கம் பல ஆய்வுக் கூடங்களில் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டுள்ள உயிரி மூளையின் வெவ்வேறு பகுதிகளில் சிறு சிறு மின்முனைகள் பொருத்தப்படுகின்றன. நுண்ணிய மின்முனைகள் ஆங்காங்கே பொருத்தப்பட்ட நிலையில், அவ்வுயிரி தன் அன்றாட வாழ்க்கை முறையைத் தடையின்றித் தொடர்கின்றது. குறிப்பிட்ட காலத்து ஆய்வின் போது மின்முனைகள் சுற்றோடு இணைக்கப்படுவ தால், மூளையின் வெவ்வேறு பகுதிகள் தூண்டப்படு கின்றன. தூண்டப்படும் பகுதிகளுக்கேற்ப அதன் செயல்களும்மாறுபடுகின்றன. இதன் மூலம் தாக்கு தல், தப்பித்தல், அஞ்சுதல், அச்சுறுத்தல், பசி,தாகம், வெகுளி, மகிழ்ச்சி, துயரம் போன்ற பலவேறு பண்பு களுக்கும் செயல்களுக்கும் மையங்கள் உள்ளன எனத் தெரியவந்துள்ளது. உயிரியின் சுற்றுப்புற ஊக்கிகளுக் கும் (stimuli) மன நிலைக்கும் தக்கவாறு வெவ் வேறுமூளை மையங்கள் தத்தம் கட்டளைகளைப் பிறப்பிக்க, இவற்றின் கூட்டு விளைவாக நடத்தை நிச்சயிக்கப்படுகின்றது. பல ஹார்மோன் ஊக்கி. சில வேதிப் பொருள்களும் மூளை மையங்களின் ஊக்கிகளாகப் பணிபுரிகின்றன. ஹார்மோன் வில்லைகளையோ (hormonal tablets ) வேறு சில கரிம வேதி வில்லைகளையோ மூளையின் பகுதிகளில் பொருத்தி வைத்து விட்டு, பின் அவ்வுயிரியின் நடத்தை மாறுபடும் விதத்தைக் கணிக்கலாம். அத்தகு ஆய்வுகளில், பல ஹார்மோன் கள் மூளையின் பல பகுதிகளிலும் நரம்பணுக்களி லும் ஆதிக்கம் செலுத்துவது தெளிவுறும். ஆண் உயிரிகளின் மூளை நரம்பணுக்கள் பெண்ணின ஹார்மோன்களால் தூண்டப்படும்போது, அவ்வுயிரி யின் நடத்தையில் பெண் தன்மை பொருந்தி விடு கின்றது. அவ்வாறே, பெண்ணின் நடத்தையிலும், தக்க வேதிப் பொருள்களினால் ஆண்தன்மை அதி கரிக்கவாம். இவ்வகை ஆய்வுகள் நடத்தை அறுதியிடுவதில் பிறிதொருலகைச் செயல் பாட்டை யும் புலப்படுத்துகின்றன. பலவேறு இயக்கவினை களைக் கட்டுப்படுத்துவதில் மூளை மையங்கள் எனப்படும் குறிப்பிட்ட மூளைப் பகுதிகள் மட்டும் பணியாற்றுவதில்லை. உடலின் வெவ்வேறு பகுதி