பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/541

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்‌ வளியேற்ற குளம்‌ 521

காற்று உயிர் வளியேற்ற குளம் CO₂ சூரிய ஒளி N₂ 11th H wNGSTEAL பாசி கழிவுநீர் O2 பாக்ட்டீரியா CO2 NH3, PO4. H2O 521 உயிர் வளியேற்றகுளத்தில் பாக்ட்டீரியா CH4 + CO2 + NH3 பாக்ட்டீரியா - பாசி ஆகியவற்றின் செயலாற்றல் முனையில் வெளியேற்றும் வகையில் அமைக்கப்படும் குளம் உயிர் வளியேற்ற குளமாகும். து பரந்த நீர்ப்பரப்பையும் குறைந்த ஆழத்தையும் கொண்ட தாக அமைக்கப்படும். பேணுதல் செலவு மிகவும் குறைவாயுள்ளதால் கிராமங்கள், சிறு நகரங்கள், ஆலைகள் முதலியவற் றில் இருந்து வெளிப்படும் கழிவுநீரைத் தூய்மைப் படுத்த இதனைப் பயன்படுத்தலாம். ஓரளவு தூய்மை யாக்கப்பட்ட நீரை மேலும் தூய்மையாக்க முன்பு இக்குளத்தைப் பயன்படுத்தினர். ஆனால் இப்போது முழுத்தூய்மையாக்கத்திற்கும் இதைப் பயன்படுத்து கின்றனர். இதை ஓர் உயிர்வளி சார்ந்த தூய் மையாக்கக் கருவி எனக் கருதலாம். இதில் உயிர் வளி அற்ற சிலபகுதிகள் ஆங்காங்கே காணப்படலாம். பாக்ட்டீரியா, பாசி ஆகிய இரு வகைப்பட்ட நுண் கிருமிகள் குளத்தைத் தூய்மையாக்கும் வேலையை மிகுதியாகச் செய்கின்றன. பாக்ட்டீரி யாக்கள் கழிவுப் பொருள்களை உட்கொண்டு வளர் கின்றன.பாசியோ இவ்வளர்ச்சிக்கு வேண்டிய ஆற் றலை ஒளிச்சேர்க்கையின் மூலம் சூரிய ஒளியினின்று பெற்று, பாக்ட்டீரியா உற்பத்தி செய்த கார்பன் டை ஆக்சைடை உட்கொண்டு தன் பெருக்கத்தை கிறது. இப்பெருக்கத்தின் விளைவாக உயிர் வளி தோற்றுவிக்கப்படுகிறது. இவ்வுயிர்வளியைப் பாக்ட்டீரியாக்கள் தம் வளர்ச்சிக்குத் தேவையான வளர்க்கி உயிர் வளியாகப் பயன்படுத்திக் கொள்கின் றன. இத னால் பாக்ட்டீரியாவுக்கும் பாசிக்கும் இடையே ஒரு இணை வாழ்வு நிலை நிலவுகிறது. உயிர் வளியேற்ற குளத்தில் நிகழும் இத்தன்மையைப் படம் 1 சித்தி ரிக்கிறது. உயிர் வளியேற்ற குளங்களைச் ச சற்று பெரியன வாகவே உருவாக்க வேண்டும். உயிர் வளியேற்றத் துக்கு உட்படாத சில திண்மப் பொருள்களும் பாக்ட் டீரியாக்களும் குளத்தின் அடி மட்டத்தில் தங்குகின் றன. பாக்ட்டீரியாக்கள் அங்கு இறந்து உயிர் வளி யேற்றம் பெற்று எண்ணிக்கையில் குறைகின்றன. ஆகவே குளத்தில் இருந்து வெளிப்படும் நீரில் பேக்டீரியக்களோ திடப்பொருள்களோ காணப்பட மாட்டா. இக்குளங்களின் வடிவமைப்பில் கீழ்க் காணும் தர அளவுகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். - வரை ஒரு நாளில் 60 - 100 கிலோ கிராம் உயிர் வேதிய ஆக்சிஜன் தேவைக்குத் தேவையான நீர்ப்பரப்பு ஒரு ஹெக்டேர்; ஆழம் 1மீ -1.5மீ. வரை; நீர்த்தேக்க நாள்கள் 15 முதல் 20 வரை அமைய வேண்டும். இக் குளங்கள் மண் கரைகளால் கட்டப்பட லாம். இக்கரைகளின் பக்கச் சரிவுகள் 1:3 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். கரையின் மேல் மட்ட