பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/546

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

526 உயிர்‌ வேதியியலும்‌ தாவர நோயியலும்‌

526 உயிர் வேதியியலும் தாவர நோயியலும் யேற்றப்படுகின்றன. அப்போது இந்தச் சேர்மங் களில் மறைந்து கிடக்கும் சக்தி, வெப்பமாக வெளி யேற்றப்படுகிறது. வெளிப்படுகின்ற சக்தி, ATP என்ற வேதிப்பொருளில் தேக்கப்படுகிறது. தசையின் அசைவு நியுக்ளியிக் அமிலம், புரதத் தயாரிப்பு ஆகிய வேதியியல் மாற்றங்களுக்கு ATP யிலுள்ள ஆற்றலே பயன்படுகிறது. பெரிய தொடர் கூட்டுப் பொருள்கள் சிதைக்கப்படுவதோடல்லாமல், சிறிய வேதிப் பொருள்களிலிருந்து தொடர் மூலக் கூறுகள் (எ.கா: ஹீமோகுளோபின்) தயாரிக்கப் படுவதும் வளர்சிதைமாற்றத்தில் அடங்கும். உயிர் வேதியியல் ஆராய்ச்சி. உயிர் வேதியியல், பல ஆராய்ச்சிப் பிரிவுகளில் முக்கிய பங்கு பெறு கின்றது. உயர் உயிரினங்களில் வினையூக்கிகள் செயல் படும் முறை பற்றிய ஆய்வில், படிவளர்ச்சி, உயிரினப் பிறப்பு, மரபுக் கூறின் செயல்முறை, தாவரங்களின் ஒளிச்சேர்க்கை, உயிர் ஒளி உமிழ்தல் புற்றுநோய் ஆராய்ச்சி, சோதனைக்கருவியின் கருவளர்ச்சி மர பியற் பொறியியல் போன்ற பல பிரிவுகளில் உயிர் வேதியியல் ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. பயன்பாடு, மருத்துவத்துறையின் நோய்க் கண்டு பிடிப்பில், உயிர்வேதியியல் பெரிதும் பயன்படுகிறது. இரத்தத்திலுள்ள குளுக்கோஸ் என்ற சர்க்கரைப் பொருள், கொலஸ்ட்ரால் போன்ற கொழுப்புப் பொருள், புரதம், யூரியா உப்பு, நொதிகள், கனிமப் பொருள்கள் போன்றவற்றைச் சோதனை செய்வதன் மூலம் பல நோய்களைக் கண்டுபிடிக்க முடியும். மருந்துப் பொருள்கள் தயாரிப்பிலும் உயிர்வேதி யியல் இடம் பெறுகிறது. உயிரித் தொழில் நுட்பம் நிலை நிறுத்தப்பட்ட நொதிகள் (immobilized enzymes) திசு வளர்ப்பு போன்ற பயன்பாட்டுப் பிரிவுகளிலும் உயிர்வேதியியல் அறிவு பயன்படுகிறது. ச.சதாசிவம் உயிர் வேதியியலும் தாவர நோயியலும் தாவர நோயியலின் உயிர் வேதியியல் ஆய்வு பத் தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் தொடங்கிற்று. முதலில் நொதித்தலும், ஒட்டுண்ணி வாழ்க்கையும் ஆராயப்பட்டன. நுண்ணுயிர்களைப் பற்றிய அறிவும் வளரத் தொடங்கியது. கோச் பாஸ்ச்சர் என்போர் பாக்டீரியாவும், ஈஸ்ட்டும் மனி தனிடம் பல் நோய்களைத் தோற்றுவிக்கின்றன என்பதுபற்றியும், நொதித்தலைப் பற்றியும் உலகுக்கு எடுத்துரைத்தனர். டீ பேரி எனும் வல்லுநர் லேட் பிளைட் எனும் நோய் பைட்டோப்தாரா இன்ஃபெஸ்டன்ஸ் என்ற பூஞ்சையில் சில நச்சுப் பொருள்களாலும். சில நொதிகளாலும் தோற்றுவிக்கப்படுகிறது எனக் கண்டறிந்து, தாவர நோயியலில் உயிர் வேதியியலைப் புகுத்தியதால் அவர் அதன் தந்தை என்று போற்றப் படுகிறார். வான் டைகம் என்பார் பூஞ்சைகளின் மூலமாக டேனின் கேலிக் அமிலமாக மாறும் முறையைக் கண்டறிந்தார். ரவ்லின் பூஞ்சைகளுக்குத் தேவையான கனிப்பொருள் உணவூட்டம் பற்றியும் ஆராய்ந்தார். வெஃமர் என்பார் கரிம அமிலங்களைப் பூஞ்சைகளில் இருக்கும் சர்க்கரையிலிருந்து தயாரிப்பதை விளக்கி னார். உயிர் வேதியியல் அறிவு பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து தொடங்கிப் பூஞ்சைகளைத் தொழில் துறைக்குக் கொண்டு சென்றுவிட்டது.ஒரு காலத்தில் எல்லாப் பூஞ்சைகளும் ஒவ்வொரு தொழிற் சாலை இயங்குவதற்குப் பயன்படும் என்றும் பூஞ்சை கள் பல தொழில் துறைகளில் பயன்படுத்தப் படுகின்றன என்றும் பாஸ்ச்சர் கூறினார். அஸ்பர் ஜிலஸ் நைகர் சிட்ரிக் அமிலம் தயாரிப்பதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது என்றும் லூயி பாஸ்ச்சர் கூறினார். 1922 ஆம் ஆண்டு உலகத் திற்குத் தேவையான 90% கால்சியம் சிட்ரேட் இத்தாலியில் ஆரஞ்சுப் பழச்சாறிலிருந்து தயாரிக்கப் பட்டது. ஆனால் பூஞ்சையைப் பயன்படுத்தி அதையே உலகெங்கும் தயாரிக்கத் துவங்கியவுடன் எட்டு ஆண்டில் அதன் ஏற்றுமதி குறைந்துவிட்டது. பூஞ்சைக் கொல்லியான ஆர்செனல் என்ற வேதிப் பொருள் தாவர நோயியல் ஆராய்ச்சியாளர் களுக்கு மிகவும் இன்றியமையாதது. 1882 ஆம் ஆண்டு மில்லரிடட் என்பவரால் போர்ட்டோ கலவை பூஞ்சைக் கொல்லியாகக் கண்டுபிடிக்கப்பட்டது. பின் டைதயோகார்பமேட்டுகள் (dithiocarbamates) அமெரிக்காவில் உள்ள டுபோன்ட் கம்பெனியில் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் இருந்து கரிமப் பூஞ்சைக் கொல்லிகள் ஒன்றன் பின் ஒன்றாகக் கண்டுபிடிக்கப்பட்டன. பின் நுண்ணுயிர் எதிர்ப்புப் பொருள்களும் பூஞ்சைக் கொல்லியில் சேர்ந்து விட்டன. வேளாண்மை. 1915 ஆம் ஆண்டு வரை பூஞ்சைகள் மண்ணிலும் வாழும் என்பது கண்டுபிடிக்கப்பட வில்லை. வேக்ஸ்மேன், ரெயின்கிங், மன்னாஸ், கேரட் முதலிய வல்லுநர்கள் மண்ணில் உள்ள பூஞ்சைகள் தாவரங்களில் செல்லுலோஸ் முதலியவற்றைச் சிதைத் துக் கார்பன்- நைட்ரஜன் சுழற்சி இயற்கையில் நடப்ப தற்கு உதவுகின்றன என் ன்று கண்டறிந்த பின்னர் மண்ணில் உள்ள பூஞ்சைகளின் சூழ்நிலையியல் இப்பொழுது பெரிதும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப் படுகிறது. உணவுத்துறையில், பாலாடைக் கட்டி முதிரும் போது அதில் வளரும் பூஞ்சைகள் பற்றிய அறிவு