பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/559

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரியல்‌ கடிகைகளும்‌, செயல்‌ நிகழ்வொழுங்கும்‌ 539

உயர் ஈர்ப்பு விசையின்போது கடற்கரையில் காணப்படும் குரூனியன் மீன்கள் கிண்டகாலச் செயல் நிகழ்வொழுங்கு. பகலும் இரவும் மாறி மாறித் தோன்றுவதால் உயிரினங் களில் நாள்முறை மாற்றங்கள் நிகழ்வதைப் போலப் பருவகால மாற்றங்களைச் சார்ந்து நீண்ட காலச் சுழற்சி மாற்றங்களும் காணப்படுகின்றன. பகலில் சூரிய ஒளி வீசும் நேர அளவைச் சார்ந்து பல உயிரி னங்கள் செயல்படுகின்றன. பறவைகள் வலசை போதல், கூடுகட்டுதல், இனப்பெருக்கம் செய்தல், கூட்டுப் புழுக்களிலிருந்து பூச்சிகள் வெளிவருதல். தாவரங்களின் வளர்ச்சி, பூக்கள் மலர்தல், விதை முளைத்தல் போன்ற பல உயிர்ச் செயல்கள் பருவ கால மாற்றங்களுக்குட்பட்டவை. உலகின் மித வெப்பப் பகுதிகளில் காணப்படும் பெரும்பாலான உயிரினங்களில் பருவகால மாற்றங்களைக் காண லாம். இவை பெரும்பாலும் சூரிய உதயத்தையும் மறைவையும் சார்ந்து செயல்படுகின்றன. பல தாவரங்கள் கூடுதலான பகல் நேரமும் குறைவான இரவு நேரமும் கொண்ட இளவேனிற் காலத்தில் பூக்கத் தொடங்குகின்றன. பல விலங்கி னங்கள் இளவேனில் காலத்தில் இனப்பெருக்கம் செய்கின்றன. இவை காலையில் சூரிய ஒளி படுவ தற்கேற்ப இயங்குகின்றன. சூரியன் உதயமாகி 16-18 மணி நேரத்தில் இவற்றின் உயிர்ச் செயல்கள் உச்ச நிலையை அடைகின்றன. ஆண்டுக்கு இரண்டுமுறை உயிரியல் கடிகைகளும், செயல் நிகழ்வொழுங்கும் 539 ஒரே அளவு பகல் நேரம் கொண்ட நாள்கள் வரு கின்றன. ஆகையால் உயிரினங்களின் பருவகாலச் செயல்களைக் கட்டுப்படுத்தக் கூடிய மற்றோர் அமைப்பு இருக்க வேண்டும். இதன்படி பறவைகள் நீண்ட பகல் நேர நாள்களுக்கேற்பச் செயல்படுவ தற்குக் குறைவான பகல் நேரமுடைய நாள்களிலேயே ஆயத்தம் செய்கின்றன. உலகின் மிதவெப்பப் பகுதிகளிலுள்ள மரங்கள் வெப்பப் பகுதிகளில் வளர்க்கப்பட்டால் அவற்றின் பூத்தல், இலையுதிர்த்தல், மொக்குவிடுதல் போன்ற செயல்களின் நிகழ்வொழுங்கு மாறிவிடும். ஒரே மரத்தின் கிளைகள் கூட வெவ்வேறு பருவகால மாற்றங்களைக் காட்டுகின்றன. மனிதர்களில் உயிரியல் கடிகைகளும் செயல் நிகழ் வொழுங்கும். மற்ற உயிரினங்களில் காணப்படுவதைப் போன்று மனிதர்களிலும் முறையாகச் செயல்படும் உயிரியல் கடிகைகள் உள்ளன. இவற்றுள் வெளிப் படையாகத் தெரிவது மனிதர்கள் உறக்க-விழிப்புச் சுழற்சியே. இதயச் செயல்பாட்டு வீதமும் 24 மணி நேர அடிப்படையில் வேறுபடுகிறது. நாளமில்லாச் சுரப்பிகளின் இயக்கம், இரத்த உட்கூறுகளின் அளவு, சிறுநீரகங்களால் கழிவு நீக்கம் செய்யப்படும் கழிவுப் பொருள்களின் அளவு ஆகியவையும் வேறுபடு கின்றன. தொலை தூரப் பயணம் செய்வோர்களின் உயிரியல் கடிகைகள் பாதிக்கப்படுவதால் அவர்கள் உடற்செயல்களில் மாற்றங்கள் காணப்படுகின்றன. இத்தகைய மாற்றங்களை ஜெட் விமான ஓட்டுநர் களிடம் தெளிவாகக் காணலாம். உயிரியல் கடிகைகளின் முக்கியத்துவம். ஓர் உயிரி, அதன் சூழ்நிலையில் ஏற்படும் சுழற்சி மாற்றங்களுக் கேற்ப இயங்குவதற்கு அதன் உயிரியல் கடிகை உதவுகிறது. எடுத்துக்காட்டாகக் குறைவான ஈர்ப் பின் போது நண்டுகள் ஒளிந்து கொள்வதால் அவற்றைப் பிடித்து உண்ணும் கடற்காகத்திடமி ருந்து தப்பிப் பிழைக்கின்றன. தேனீக்கள் நேரத்திற் கேற்பச் செயல்படுவதால் அவை குறிப்பிட்ட நேரத்தில் மலரும் பூக்களில் இருந்து தேனைப் பெற முடிகிறது. இவ்வாறே ஆழ்கடல் விலங்குகள் உயிரியல் கடிகைக்கேற்ப இயங்குவதால் இரவு நேரத்தில் உணவு மிகுதியாகக் கிடைக்கும் நீர்ப் பரப்புக்கிருகில் வந்து உணவு தேடுகின்றன. பறவை, மீன், பூச்சி,போன்ற உயிரினங்கள். உயிரியல் கடிகைகளின் உதவியால் வானியல் முறை களைக் கையாண்டு திசைகளை அறிந்து கொள்கின் றன. இவ்வாறு சில வலசைப் பறவைகள் தொலை ளிலுள்ள சிறிய தீவுகளுக்கும் சரியான திசையறிந்து சென்று திரும்புகின்றன. உயிரியல் கடிகைகள் திசை அறிந்துகொள்ள மட்டுமல்லாமல் பூமியில் களை