பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 இறகு

பொப்பிறகு மனிக்கட்டு அல்லா உள்ளங்கை மேற்கை ரேடியன் இரண்டாம் நிலை இறகுகள் புறாவில் இறகை இறது ஈர்க்கு இறகுத்தண்டு திறகுக் கீழ்த்துனை இறகு மேல் துனை அடித்தாவி இறக்கையிறகு இறகுப் பரப்பு முதல் நிலை இறகுகள் இறகு 39 களின் கீழ்ப்பக்கத்திலும், அண்மை நுண்ணிழைகளின் மேற்பக்கத்திலும் இறகுக் கொக்கிகள் உள்ளன. இவை ஒன்றோடொன்று பொருந்திக்கொள்வதால் இறகிழைகள் நெருங்கி அமைந்து இறகுப்படலம் உண்டாகிறது. இப்பொருந்துதல் கேடுற்றால் இறகுப் படலத்தில் பிளவுகள் உண்டாகும்; பறவை தன் அலகால் இழைகளைக் கோதிவிடும்போது இது சீரடைந்து முழுமை பெறும். வளர்ச்சி. இறகுக்காலின் அடிப்பகுதியில் மாறு பாடுகள் பெறாத மேல்தோல், கீழ்த்தோல் செல்கள் குவிந்து இறகு முகிழ்ப்பு உண்டாகிறது. இது இறகு வளர்தலின் தொடக்க நிலையாகும். இந்த முகிழ்ப்பு பல நீளவாட்ட வரிமேடுகளுள்ள நீள் உருளையாக வளர்கிறது. இந்த வரிமேடுகளே பின்னர் இறகிழைகளாக உருப்பெறுகின்றன. நீள் உருளையின் கீழ்நடுக்கோட்டின் இருமருங்கிலும் காணப்படும் இந்த இழைகள், பின்னர் உருளையின் மேல்பக்கம் நோக்கி நகருகின்றன. அவ்வாறு நகர்ந்து சென்ற இழைகள் இணைகளாகச் சேர் கின்றன. இணைகள் கூடுமிடம் இறகுத் தண்டாக மாறுகிறது. இவ்வாறு வரிசையாக அடுத்தடுத்து இணைவதால் அவற்றின் அடிப்பகுதிகள் சேர்ந்து இறகுத்தண்டு உண்டாகிறது. இழைகள் முதலில் இணையும்பகுதி இறகின் நுனியாகவும், இறுதியில் இணையும்பகுதி இறகின் அடிப்பகுதியாகவும் உள்ளன. இந்த இழைகளின் உட்பகுதியில் கீழ்த்தோல் கூழும், அதைச் சூழ்ந்து வலுவான மேல்தோல் உறையும் உள்ளன. இறகின் கீழ்த்தோல் கூழ்ப்பகுதி தாலி இறகு தான்தாவி இறகு நுவி இணைப்பிகள் இனைக்கப்பட்டுவீன முறை அடிக்கூழ்த்துளை வழியாகக் கீழ்த்தோலுடன் தொடர்பு கொண்டிருக்கிறது. இதன் வழியாகத்தான் இறகு வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டப்பொருள் கள் இரத்தக் குழாய்களால் எடுத்துச் செல்லப் படுகின்றன. இறகு அவற்றைச் வளர்ச்சியின்போது இறகிழைகளுக்கும் சூழ்ந்துள்ள புற உறைக்குமிடையே