பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறகு கொத்தும்‌ நோய்‌ 41

இறகு கொத்தும் நோய் 41 கால்சார்ந்த தடம். இது கீழ்க்காலில் இறகுகளால் சூழப்பட்டுள்ள இடமாகும். சிறகுகளிலுள்ள இறகுத்தடங்களில் காணப்படும் இறகுகள் பறக்கும் இறகுகளாகும். 9-12 இறகுகள் வரை உள்ளங்கையுடனும் விரல் எலும்புப்பகுதிக ளுடனும் இணைந்துள்ளன. இவற்றிற்கு முதல்நிலைப் பறக்கும் இறகுகள் என்று பெயர். 6-30 வரை, பறவையின் உருவத்திற்கேற்பக் காணப்படும் இரண் டாம் நிலைப் பறக்கும் இறகுகள் யாவும் ஓரளவுக்கு ஒன்றின்மேல் ஒன்றாகக் கூரையில் ஓடு அடுக்கப் பட்டுள்ளதைப் போலக் கவிழ்ந்து அமைந்துள்ளன. அதனால்தான், சிறகு இலேசான, ஆனால் வலுவான பறக்கும் உறுப்பாகச் செயல்படுகிறது. நிறம். பறவைகளின் நிற அமைப்பு வேறு எவ் வகை முதுகெலும்பிகளிலும் காணப்படாத அள விற்கு மேம்பாடுற்றுள்ளது. சூழலுடன் ஒன்றித் தன்னை மறைத்துக் கொள்ளுதல் போன்ற தற் காப்புச் செயல்களுக்கும், தன்னினப் பறவைகளை அடையாளம் கண்டுகொள்ளுதல், இணைவிழைச்சுக் காலங்களில் பால் உணர்வைத் தூண்டிவிடுதல் போன்ற செயல்பாடுகளுக்கும் உடல் நிறங்கள் பயன் படுகின்றன. ஆந்தைகளின் உடல்நிறம் இலைச்சருகு களையும் மரப்பட்டைகளையும் ஒத்துள்ளது. பசுமையான மரங்களில் வாழும் பறவைகள் பச்சை நிறத்துடனும் பாலைநிலத்தில் வாழும் பறவைகள் மஞ்சள் பழுப்பு நிறத்துடனும் காணப்படுகின்றன. பறவைகளின் வெளிர்நிறமான வயிற்றுப்பகுதி அவற்றின் நிழல்களைக் காணும் மற்ற விலங்குகளின் கவனத்தை மாற்றுகிறது. இறகுகளின் நிறங்கள் அவற்றின் மேல் ஒளிபட்டு எதிரொளித்தலாலும், ஒளி விலகல் ஏற்படுவதாலும், இறகுகளிலுள்ள நிறமிகள் காரணமாகவும் உண்டாகின்றன. ஒளி அலைகள் இறகின் மேல்பட்டு எதிரொளித்தால் அது வெண்மை யாகத் தோன்றுகிறது. மெல்லிய மேற்பரப்பில் ஏற்படும் ஒளிவிலகலால் பன்னிற ஒளிர்தல் உண்டாகிறது. இறகின் உட்பரப் பிலுள்ள காற்று நிரம்பிய நுண்ணறைகளில் படும் ஒளிச்சிற்றலைகள் ஒளிச் சிதறலுற்ற ஒளிரா நிறங் களைத் தோற்றுவிக்கின்றன. இறகுகளில் மூன்று வகைப்பட்ட நிறமிகள் உள்ளன. இறகு வளர்ச்சியின் போது சுரக்கப்படும் மெலானின் துகள்கள், இணைந்து மெலானின் உண்டாகிறது. மெலானின் துகள்கள் ஆக்சிஜனேற்றம் பெற்றுள்ள அளவிற்கு ஏற்ப, இளமஞ்சள் முதல் செம்பழுப்பு வரையான நிறமாகவோ, கரும்பழுப்பு முதல் கருமை வரையான நிறமாகவோ காணப்படுகின்றன. மற்றொரு வகை யான கரோட்டினாய்டு நிறமிகள் பறவைகளின் உணவிலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த நிறமிகள் மஞ்சள் அல்லது செம்மஞ்சள் நிறமுள்ள வகை சிவப்பான கரோட்டி சாந்தோஃபில்களாகவோ, னாய்டு அமிலமாகவோ இருக்கின்றன. மற்றுமொரு நிறமிகளான பார்ஃபீரின்கள் நைட்ரஜன் பொருள்களிலிருந்து பறவைகளால் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை இளஞ்சிவப்பு, சிவப்பு, பச்சை நிறங்களில் காணப்படுகின்றன. காலத் இறகு உதிர்த்தல். அனைத்துப் பறவை வகை களும் குறிப்பிட்ட காலத்தில் இறகுகளை உதிர்க் கின்றன. பின்னர் அவை இருந்த இடங்களில் புதிய இறகுகள் தோன்றுகின்றன. இறகுக் காலிலுள்ள இறகு முகிழ்ப்பில் புதிய இறகு உண்டாவதால்தான் பழைய இறகு உதிர்கிறது. பெரும்பாலான பறவை களில் ஆண்டுக்கு ஒருமுறை இனப்பெருக்க காலம் முடிந்தவுடன் இறகு உதிர்த்தல் நடைபெறுகிறது. சில வகைப் பறவைகளிடம் இனப்பெருக்க தில் பளிச்சிடும் வண்ண இறகுகளும் பிற காலங் களில் மங்கிய நிறமுள்ள இறகுகளும் காணப்படும். இத்தகைய பறவைகள் ஆண்டுக்கு இரு முறை இறகு உதிர்க்கின்றன. ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறை இறகு உதிர்க்கும் சில பறவைகளில் தலை இறகுகளும் உடல் இறகுகளும் மட்டுமே உதிர்க்கப் படுகின்றன. இனப்பெருக்கத்திற்கும் வலசைபோத லுக்கும் தக்கவாறு இறகு உதிர்த்தல் நடைபெறு திறது. சிலவகைப் பறவைகள் இனப்பெருக்க காலத்திலும், வேறு சில பறவைகள் இனப்பெருக்கம் முடிந்து வலசைபோவதற்கு முன்னரும், சில பறவை கள் குளிர்காலக் களங்களிலும் இறகு உதிர்க்கின்றன. சில உடற்செயல்பாடுகளும், வெப்பும்,பசுற்பொழு தின் அளவு போன்ற சூழ்நிலைக் காரணிகளும் இறகு உதிர்தலைக் கட்டுப்படுத்துகின்றன. தைராய்டு ஹார்மோன் சுரப்பே இறகு உதிர்தலுக்குக் காரண மாகும். இறகு கொத்தும் நோய் - ந. முத்துக்குமாரசாமி ஜெயக்கொடி கௌதமன் கோழிகளிடம் காணப்படும் பல தீய பழக்கங்களில் றகு கொத்தும் பழக்கமும் ஒன்றாகும். தன் இனத் தைச் சேர்ந்தவற்றையே உண்ணும் விலங்கினங்கள் தன் இனம் உண்ணிகள் எனப்படும். கோழி வளர்ப்புப் பண்ணையில் கோழிகள் ஒன்றையொன்று கொத்தித் துன்புறுத்திக் கொள்வது என்பது தன் னம் வருத்தும் ஒரு செயலாகும். ஆழ்கூள முறை யில் உயர் கலப்பினக் கோழிகளை வளர்க்கும் பண்ணைகளில் இந்தப் பழக்கம், மிகுதியாகக் காணப்படும்.