பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/611

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உராய்வு எதிர்ப்புத்‌ தாங்கி 591

வழக்குக்கு மாறாக செயல்பாடுகளுக்குச் சில மிகக் கடும் பொருள்கள் உராய்கையில் நல்ல தாங்கித் தன்மை நிலவுவது சில ஆராய்ச்சியால் தெரிய வந்தது. ச்டெல்லைட், கார்பலாய், கோல்மனாய், ஹேஸ்டல்லாய், அலந்தம் ஆகிய பன்னாட்டு நிறு வனப் பெயருரிமைப் பொருள் தம் கடுங்குணத்தால் பயன்படுவன. இத்தாங்கிகள் மிகச்சீராக இருக்க வேண்டும். இவற்றின் உருவமைப்புச் சரி அளவோடு அமையாவிட்டால் பொருள் தேய்ந்து வரிசை கெடக் கூடும். உயவுப்பொருள்.பல்சக்கரம், எழுப்பிபோல மிகத் தகைந்த பொறிக் கூறுகளில் தேய்வைக் குறைக்க வேதியியல் கூட்டுப் பொருளால் வலுச் சேர்ந்த மண்வகை நெய், மசகு பயன்படும். ஈய நாஃப்த னேட், குளோரின், கந்தகம், போன்றன மேற்கூறிய கூட்டில் அடங்கும். தாங்கிகள் செயல்படு திறனின் தீர்மானத்தில் மிகப்பெரும் காரணி - தாங்கிக்கு வரும் உயவுப் பொருள் அளவு, அது வரும் முறை, எ.கா.உயவுப் பொருள் ஏதும் இல்லாவிடில், தாங்கியும் நிலையும் தம்முள் உராயும். உயவுப்பொருள் இருக்கும் நிலை யுடன் ஒப்பிட்டால் உராய்வும் தேய்வும் கூடும். தாங்கிப் பொருள் அயர்வு, அரிப்பு, கரைப்பு ஆகிய வற்றால் கெடாமலும், எண்ணெயில் தேய்ப்பான் இல்லாமலும், தூய்மையாகவும் இருந்தால், தாங்கி கள் முடிவின்றி இயங்க முடியும். தாங்கியின் மைய மும். நிலைமையமும் குமிழாக இருக்கும். இடை வெளி முழுதும் நிரப்ப உயவு வழங்கல் போதா விடினும், சுமையும், வேகமும், முழுமையாக நீர்மப் படலம் தோன்ற ஆதரவாக இல்லாவிடினும் தேய்வுப் பரப்புகளைப் பிரிக்கத் தாங்கியும் நீர்மப் படல உதவி இல்லாப் பரப்புகள் நிறையும். இப்பரப்புகள் உயவுப் பொருளால் மிகச் சிறிதே தொற்றப்படுவன. திரி, நமுதாச் சொட்டிகள், கழிவு நூல் நிறை தாங்கிகள், எண்ணெய்ச் சொட்டிகள், எண்ணெய்க் கொண்மிகள் போன்ற கருவிகளால் வழங்கப்படும் உயவுப்பொருள் போதாமையால் இவற்றால் முழு நீர்மப்படலம் உருவாகாது. தாங்கியின் பரப்புகள் பிரித்து வைக்கப்படக் கூடியதாக இருக்கும்போது உயவுப்பொருளில் முன்னர் விவரித்ததுபோல் மசகுகள், எண்ணெய், கொழுப்பு போன்ற எண்ணெய்த் தன்மைப்பொருள் தேவையில்லை. இவற்றின் விளைவாக இன்று காணும் பல கடுமையான செயற்பாடுகளில் நீர்மப் படலத் தாங்கிகள், தண்ணீர், கடுமையாகக்கரைக்கக் கூடிய அமிலங்கள், உருகிய உலோகம், பெட்ரோல், நீராவி, நீர்மக் குளிர்ப்பான், பாதரசம், வளிகள் போன்ற உயவுப்பொருளுடன் செயல்படுகின்றன. உயவுப் பொருளின் பிசுக்குத்திறனைப் பொறுத்து மேலெல்லை அழுத்தம் உண்டாகும். எடுத்துக்காட்டாக, நீர்ம உராய்வு எதிர்ப்புத் தாங்கி 591 உயவுத் தாங்கியைவிட வளி உயவுத்தாங்கியின் சுமைத் திறன் மிகக்குறைவு. பிசுக்குத் திறனின் நேர் விகிதத் தில் தாங்குதிறன் விகிதமும் அமைகிறது. லெப்ப அளவின் உச்சங்களில் பொறிகளை இயக்க நிறைய ஆராய்ச்சிகள் செய்யப்படுகின்றன. கீழெல்லை 240° செ எனலாம். மேலெல்லை எதிர்நோக்கும் சில கருவி கள் 1650°செ இல் செயல்பட நேரும். இத்தகைய வெப்பநிலையில் பயன்படக் கூடிய ஒரே உயவுப் பொருள் வளிமமாகும். வளிமத்தின் பிசுக்குத் திறன் மிகக்குறைவு. ஏற்படும் உராய்வு மிகக்குறைந்த அள வினது. வளியை உயவுப் பொருளாக கொண்ட பொறிகள் மிகக்கூடுதல் வேகத்தில் இயங்கும் இவற்றால் தாங்கிகளைக் குளிர் நிலையில் வைப்ப திலும் கடும் சிக்கல் இல்லை. ஒரு நிமிடத்திற்கு 433,000 சுற்றுகள் உள்ள சுழல் ஏற்பாடு வளி உயவுத் தாங்கியில் செயல் பட்டது. எண்ணெய் உட்புகும் முனை அ அச்சுத் தண்டுப் பட்டை எண்ணெய் வெளியேறும் முனை படம் 1. (அ) அசையும் தட்டுவகைத் தாங்கி (ஆ) அழுத்தத் தாங்கி படம் 1 இல் அசையும் தட்டு பூடகமாகக் காட்டப் பட்டது. அசையும் தட்டு திணிப்புத்தாங்கியின் பெரும்பயன் பற்றிக் கேள்வியே எழாது எனலாம். குறைந்த உராய்வாலும் நம்பகத்தாலும் இது மிகச் சிறந்தது.படம் 1 ஆவில் வணிகமாதிரித்திணிப்புத் தாங்கி உள்ளது. வட்ட வடிவில் பொருந்திய அசையும் தட்டுகளால் இத்திணிப்புத் தாங்கியைச் செய்கின்றனர். அமெரிக்க கிராண்ட்கெளலி அணை யில் நீரியல் சுழலி உள்ளது. அதன் தாங்கியின் விட்டம் 2.4 மீ. அதன் மீதுள்ள சுமை சுமார் 1000 டன்.அதன் உராய்வுக் கப்பல்களில் பெரும் திணிப்புத் குணகம் 0.0009. தாங்கிகள் இவ்