பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/612

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

592 உராய்வு எதிர்ப்புத்‌ தாங்கி

592 உராய்வு எதிர்ப்புத் தாங்கி தாங்கி பரு அச்சுத்தண்டு எண்ணெய் எக்கி எண்ணெய் வழங்கலிருந்து படம் 2. உயர் அழுத்த எண்ணெய்த் தாங்கி. வகையின, உந்துவிசிறியின் முழுத் திணிப்பையும் கப்பலின் கூட்டிற்கு இவை செலுத்துகின்றன. நீர்மப் படல நிலை நீர் மாதிரிகள். சுழற்சி திசை மாறும்போதும், நிறுத்துகையிலும், தொடங்கும் போதும், நிலைத் தாங்கியின் சுழற்சி வேகம் போதாத நேரத்திலும் எண்ணெய்ப்படலம் குழி படுகிறது. உராய்வு கூடுகிறது. தாங்கியின் தேய் மானம் விரைவுபடுகிறது. படம் 2 இல் பூடகமாகக் காட்டியபடி உயர் அழுத்த எண்ணெயைத் தாங்கிக் கும், நிலைக்கும் ஊடே செலுத்தி இந்நிலை ஏற் படாது காக்கலாம். அழுத்தமும் எண்ணெய் ஒட்ட அளவும் சீராக அமைந்தால் தண்டு சுழன்றாலும் நின்றாலும் எண்ணெய்ப்படலம் தூக்கித் தாங்கும். உராய்வு இழுவையானது மூல மதிப்பில் பத்தில் ஒரு பங்கோ இன்னும் குறைவாகவோ இறங்கலாம். சில வகைப் பளுவான சுழற்கருவிகள் தொடங்குவதும், தொடங்காமலிருப்பதும் இதன் விளைவே. இவ்வகை உயவை நிலை நீர் உயவு என்பர். மேற்குறித்த நிலைத்தாங்கியில் இதை எண்ணெய்த்தூக்கு என்பர். உருட்டாலைத் தாங்கிகளும் ஓலை உருட்டுத் தாங்கி களும் பொறிகள் சுமையேற்றப்படுகையில் உராய் வைக் குறைக்க எண்ணெய்த் தூக்கைக் கொண்டிருக்க லாம். சாதாரண நீர்ச் செயல் மாதிரித் தாங்கியில் எண்ணெய்ப் படலம் காக்க மிகக் கடுமையாக மீச் சுமை உள்ள தாங்கிகளில் நீரியல் தூக்குகளும் சில சமயம் பயன்படுகின்றன. திணிப்பைச் சுமக்கப் பல பொறிகளில் தட்டுத் தாங்கி உருவில் நிலைநீர் உயவு பயன்படும். தண்டு சுழன்றாலும் நின்றாலும் இவ் வகை உயவு திணிப்பைச் சுமக்கும். தாங்குப்பரப்பு களை முழுக்க பிரித்து வைக்கும். இவ்வாறான தட்டுத் திணிப்புத் தாங்கி ஒன்றின் தோற்றம் படம் 3 இல் கொடுக்கப்பட்டுள்ளது மைய விலக்கு விளிம்பு கருவிபோன்ற உயிர்வேகப் பொறிகள் இத்தத்து வத்தைப் பயன்படுத்த நிமிடத்திற்கு 100,000 சுற்று களுக்கு மேற்பட்ட வேகங்களில் வளிமம் உயவுப் பொருளாகப்பயன்படுத்தப்பட்டது. நிலை நீர் வகைத் தாங்கிகளில் பெருங்கட்டுக்கோப்பு வெற்றிகரமாக மிதக்கவிடப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரும் தொலை நோக்கிகளில் ஒன்றான அமெரிக்க பலோ மார்மலையிலுள்ள ஹேல் 5 மீட்டர் தொலை நோக் காடியின் எடை சுமார் 450 டன்.எனினும் நிலை நீர் வகைத் தாங்கியின் காரணமாகத் தாங்கு முறை யின் உராய்வுக் குணகம் 0.000004 விடக்குறைவு. உயவுப் பொருள் வெளியேறுதல் அழுத்தப் பளு உயவுப் பொருள் வெளியேறுதல் உயவுப் பொருள் உட்செலுத்தம் படம் 3. தட்டுத் திணிப்புத் தாங்கி