பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/629

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உருழாற்றப்‌ பாறை இழைமை 609

வரிநீள இழைமை உருமாற்றப் பாறை இழைமை 609 களிமண் பாறை களிமப்பிளவின் தளம் பைரைட் துகள் படம் 1. களிமண் பாறையின் தோற்றம் களாகப் பிரிக்கலாம். அவை, சமதள இழைமை (planer fabrics), வரிநீள இழைமை (linear fabrics). சமதள இழைமை. பாறைகளில் காணப்படும் இழைமைப் பொருள்களும், கனிமத் துகள்களும், சம தள வரிசையில் அமைந்திருக்கும். இந்த வகையில் களிமண் பாறைக் கனிமப் பிளவு குறிப்பிடத் தக்க தாகும். பொதுவாகக்களிமண் பாறை, வெண் அபி ரகம், குளோரைடு ஆகியவை நுண் துகள் பாறை யாகும். இப்பாறையில் மேற்கூறிய கனிமத் துகள் கள் சமதள வரிசையில் அமைந்திருக்கும். பொது து வாக இவ்வகைக் கனிமங்கள் பில்லோசிலிகேட் வகையைச் சேர்ந்தவையாக இருப்பதால், இக்கனிமங் களின் படிகங்கள் ஒரு தளத்தில் படிகமாகும். இப் படிகங்கள் அமைந்திருக்கும் தளம் எளிதில் உடையக் கூடியதாகவும் இருக்கும். பருவெட்டான (coarse grained) உருமாற்றப் பாறைகளில் அபிரகக் கனிமங்களும் குளோரைட் கனிமத் துகள்களும் பெரும்பான்மையாக இருப் பினும், இக்கனிமத் துகள்கள் பருவெட்டாகவே அமைந்திருக்கும். பாறைக் கனிமப் பிளவு இப்பாறை களில் காணப்பட்டாலும் அது சீரற்றதாக அமைந் திருக்கும். இவ்வகைப் பிளவு, பாறைக் கனிமப் பெரும்பிளவு அல்லது சிஸ்டோசிட்டி என அழைக் கப்படுகிறது. சமதள நுண் இழைமையில் குறிப்பிடத் தக்க மற்றொரு வகை, வரி இழைமை ஆகும். இவ் வகை இழைமை உருமாற்ற வரிப்பாறைகளில் காணப்படுகிறது. இவ்வகைப் பாறைகளில், இரும் பும் மக்னீசியக் கனிமப் படிகங்களும் குவார்ட்சும் ஃபெல்ஸ்பார் கனிமப் படிகங்களும் மாறிய அமைவு களாக அமைந்திருக்கும். இந்த இணை வரிசைக் கனிமங்களின் அமைப்பு, பார்ப்பதற்குப் பாறை களில் கோடுகள் வரைந்தாற்போலிருக்கும். 5செ.மீ வெண் அபிரகம் . கரு அபிரகம் ஃபெல்ஸ்பார் - குவார்ட்ஸ் தாரை படம் 2. சிஸ்ட் பாறை படம் 3.ஃபெல்ஸ்பார் - குவார்ட்ஸ் - எபிடோட் நைஸ் பாலத் அ.க.5-3g