பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/630

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

610 உருழாற்றப்‌ பாறை இழைமை

610 உருமாற்றப் பாறை இழைமை வரிநீள இழைமை. வரிநீள இழைமைப் பாறை களில் காணப்படும் கனிமப் படிகங்கள், பட்டக வடி விலும், ஊசி வடிவிலும் அமைந்திருக்கும். வரிநீள இழைமைத்திசை படம் 4. பிரிகலியா கிரானைட் பிரிகலியா கிரானைட்டின் மாதிரிப் படமான இது, வரிநீள இழைமைப் பண்பை எளிதில் விளக்கு கிறது. இப்பாறையில் ஃபெல்ஸ்பார் படிகங்கள் நீள அளவில் ஒன்றுக்கொன்று இணையாக அமைந்திருக் கின்றன. சில வேளைகளில் சமதள இழைமையும், வரிநீள இழைமையும் இணைந்து காணப்படுவதுண்டு. நார்வே நாட்டிலுள்ள சுலிட்செல்மா என்ற இடத்தில் காணப்படும் ப்ருலுண்ட் சிஸ்ட் இதற்கு ஒரு சிறந்த பட்டக எடுத்துக்காட்டாகும். இதில் ஆர்ன்பி ளென்ட் படி டிகங்கள் வரிநீள நுண் இழைமையைத் தெளிவாகக் காட்டுவதுடன் மைப் பண்பும் கலந்து கிறது. சமதள நுண்இழை ப்பாறையில் காணப்படு இதில் ஏனைய ஊடுருவு இழைமைக்கும், ஊடுருவா இழைமைக் கும் வேற்றுமை அறிதல் அவசியமாகும். ஊடுருவு இழைமையின் பாறையில் காணப்படும் அனைத்துக் கனிமப் படிகங்களுக்கும் இன்னொன்றுக்கும் தெளி வான தொடர்பிருக்கும். களிமண் பாறைக் கனிமப் பிளவு இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். எல்லா பில்லோசிலிக்கேட் படிகங்களும் வற்றுடன் சமதளத்தில் அமைந்திருக்கும். ஆனால் ஊடுருவா இழைமை காணப்படும் பாறைகளில் இவ் வித இழைமை, பாறையில் ஒரு குறிப்பிட்ட பகுதி யில் மட்டுமே காணப்படும். இவ்வகை இழைமையில் கனிமப் படிகங்கள் ஒன்றுடன் ஒன்று சீரான தொடர்பற்ற முறையில் அமைந்திருக்கும். இப்படத் தில் அ1 என்ற நிலை ஊடுருவும் தன்மையைக் காட்டு கிறது. பிறகு சில காரணங்களால் பாறை மடிப்புகள் தோன்ற அ2 தளம் ஏற்படுகின்றது. இதில் அ1 தளம் ஊடுருவு நுண் இழைமைப் பண்பையும் அ2 தளம் ஊடுருவா நுண்இழைமைப் பண்பையும் காட்டும் வகையீல் அமைந்திருக்கின்றன. உருமாற்றப் பாறைகளைக் களவாய்வில் ஆராயும் போது அப்பாறையின் புவியமைப்பியல் அமைப்புத் தொடர்புகளை அறிய உருமாற்று இழைமை ஆய்வு மிக முக்கியமானதாக அமைகின்றது. உருமாற்றப் பாறைகளை இனங்காண நுண் இழைமை ஆய்வு முக்கிய இடம் பெறுகின்றது. சமதள இழைமையுடைய உருமாற்றுப் பாறை தொடு ஒளிவட்டப் (contact aureoles) பகுதிகளில் காணப்பட்டால் அவற்றை ஹார்ன்ஃபெல்சஸ் என்றும், மிகுநில உருமாற்றப் பகுதிகளில் காணப் பட்டால் அவற்றை அர்ஜிலைட்டுகள் என்றும், குறை உருமாற்றப் பகுதிகளில் (low metamorphic காணப்பட்டால் அவற்றைக் கிறானோ grade) ஃபெல்சஸ் என்றும் குறிப்பிட வேண்டும். ஊடுருவா இழைமையின் ஒரு வகையான வரி நுண் இழைமைப் பண்பு கொண்ட பாறைகள் மிகுநில, உயர்வகை உருமாற்றுப் பாறைகளில் காணப்படுகின்றன. வரிநீள இழைமைத் திசை பட்டக ஆர்ஸ்பிளெண்ட் கனிமத்துகள்கள் படம் 5. ப்ருலூண்ட் சிஸ்ட்