பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/652

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

632 உருளைக்கிழங்கு

632 உருளைக்கிழங்கு பயிர்ப்பாதுகாப்பு முறை நூற் புழு. இதைத் தடுக்க ஒவ்வோர் ஆண்டும் உருளைக்கிழங்கை அதே நிலத்தில் பயிர் செய்யாமல் ஓர் ஆண்டு இடைவெளிக்குப் பின் பயிர் செய்ய வேண்டும். இடைவெளியில் காய்கறிகள், பசுந்தாள் உரங்கள் பயிர் செய்யலாம். அல்டி கார்ப் ஹெக் டேருக்கு இருபது கிலோ வீதம் பயன்படுத்த வேண் டும். நச்சுண்ணி. இதைக் கட்டுப்படுத்த ரோகர் இருநூறு மில்லி ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். வெட்டுப்புழு. இவை இளஞ்செடிகளைத் தரை மட்டத்தில் வெட்டும். பி. ஹெச்.சி. பத்து விழுக் காடு அல்லது டி.டி.ட்டி ஐந்து விழுக்காடுத் தூளை நடும்போது மண்ணில் தூவவேண்டும். பிளைட். இந்நோயால் இலைப் புள்ளிகள் படர்ந்து, இலைகள் காயத் தொடங்கும். இலையில் வெண்மையோ கரும்புள்ளிகளோ தோன்ற விளைச் சல் மிகவும் பாதிக்கப்படும். இந்நோய்களைத் தடுக்க, விதை முத்துகளை நல்ல முறையில் தேர்ந் தெடுக்க வேண்டும். நோய் எதிர்ப்புச் சக்தியுள்ள வகைகளைப் பயன்படுத்தலாம். டைத்தேன் எம் 45 மருந்தை ஹெக்டேருக்கு 2.5 கிலோ வீதம், நட்ட 45,60,75ஆம் நாளில் தெளிக்க வேண்டும். அழுகல் நோய். கிழங்கின் உள்பகுதி நிறம் மாறி அழுகி விற்பனைக்குப் பயன்படாது போகலாம். நோயற்ற, நல்ல விதைகளைப் பயன்படுத்துவதோடு வடிகால் வசதியை நல்ல முறையில் அமைத்து இதைக் கட்டுப்படுத்தலாம். வைரஸ் நோய். இவை வராமல் தடுக்க நோயில் லாத விதையைப் பயன்படுத்தவும், பாதிக்கப்பட்ட செடிகளை அப்புறப்படுத்தி எரித்து விடவும் வேண் டும். இந்நோய்களைப் பரப்பும் பூச்சிகளை மேற் கூறிய முறைப்படி ரோகர் மருந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம். இலைகள் பழுப்பாக மாறியவுடன் அறுவடை செய்யவேண்டும். விளைச்சல் ஹெக்டேருக்கு 20-25 டன் கிடைக்கும். தோண்டி எடுக்கப்பட்ட கிழங்கு களைத் தூய்மை செய்து பின் காயவிட வேண்டும். நோயுற்ற, சேதமடைந்த கிழங்குகளை நீக்கவேண் டும். ஏனைய தூய கிழங்குகள், கீழ்க்காணுமாறு தரம் பிரிக்கப்படுகின்றன. முதல் தரம் 55 மி.மீட்டரும் அதற்கு மேலும் விட்டம் உடையது. இரண்டாம் தரம் - 45-55 மி.மீ. விட்டம் உடையது. மூன்றாம் தரம் நான்காம் தரம் 25-45 மி.மீ. விட்டம் உடையது. 25 மி.மீட்டருக்குக் கீழ் விட்டம் உடையது. பூச்சிகள் நல்ல காற்றோட்ட வசதி உள்ள, நெருங்காத அறைகளில் கிழங்குகளைச் சேமிக்கலாம். அடியில் மண் பரப்பி மேலே கிழங்கைப் பரப்ப வேண்டும். குளிர் கருவி வசதியுள்ள அறைகளில் (20-30; 75-90%) நல்ல முறையில் உருளைக் கிழங்கைச் சேமித்தால், நீண்ட நாள் கெடாது. உருளைக்கிழங்கில் மாவுச்சத்து 23%தாது உப்பும். வைட்டமினும் போதிய அளவிலும் உள்ளன. குறிப் பாக இரும்புச் சத்து, கால்சியச் சத்து, வைட்டமின் A முதலியன உள்ளன. இது எளிதில் சேகரிக்க வல்லது. இதை அரிசி, கோதுமைகளுக்குப் பதிலாக முக்கிய உணவாகப் பயன்படுத்தலாம். உருளைக்கிழங்கு குறைந்த வயதில் நிறைந்த விளைச்சலைக் கொடுக்க வல்லது. ஹெக்டேருக்கு மற்ற பயிர்களைவிட அதிக வருவாய் தரவல்லது. அரிசி கோதுமை தட்டுப்பாடு உள்ள இடங்களில் முக்கிய உணவாகப் பயன்படுத்தலாம். வீட்டுத் தோட்டத்திற்கும் குறுகிய பரப்பு உள்ள இடங்களுக் கும் மிகவும் ஏற்றது. சேமித்து வைத்து நல்ல விலை கிடைக்கும்போது விற்கலாம். பயிரிடலில் எதிர்காலப் பிரச்சனை. உருளைக் கிழங்குச் சாகுபடியில் பணச் செலவும், ஆள் செலவும் மிக அதிகம். ஆகவே வேலைக்கு ஆள் கிடைக்காத பகுதிகளில் பயிரிடுவது கடினம். சேமிப்பு முறைகள் இதுவரை வளர்ச்சி அடையவில்லை. குறிப்பிட்ட காலங்களில் அதிக உற்பத்தியாகி அதிக நாள் சேமிக்க இயலாததால் விலை மிகவும் குறைந்துவிடுகிறது. தற் போதுள்ள குறைந்த விளைச்சல், சூழ்நிலை கட்டுப் படுத்தும் தன்மை, பூச்சி, நோய் தாக்குதல், இடு பொருள் தட்டுப்பாடு முதலியவற்றால் தோன்று கிறது. விளைச்சலையும் வருவாயையும் பெருக்கச் சரி யான ஊடுபயிர்ச் சாகுபடி முறைகள் தேவைப்படும். உருளைக்கிழங்கை வீட்டுத் தோட்டப் பயிர் ஆக்க வேண்டும். நல்ல, கட்டுப்பாடான, ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் அமையவேண்டும். சீரிய பயிர்ப் பாதுகாப்பு முறைகள், விதைக்கும் முன் முளைப்பைக் கட்டுப்படுத்துதல். அதிக அளவு சேமிப்பு முறை களை உண்டாக்குதல் என்பன பெருக வாய்ப்பளிக்க வேண்டும். -எஸ். முத்துசாமி