பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/658

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

638 உருளளப்‌ புழு

638 ருளைப் புழு குடும்பம்: ஹெடிராகிலிடே, இவை கடற்பசு ஒட் டுண்ணிகளாகும். எ.கா : ஹெடிரோசிலிஸ். . குடும்பம்: அனிசாகிடே. இவை மீன் உண்ணும் கடல்வாழ் முதுகெலும்புகளில் ஒட்டுண்ணிகளாக வாழ்கின்றன. எ.கா : அனிசாகிஸ் (டால்ஃபின் ஒட் டுண்ணி). குடும்பம்: கோயிசிடே. இவை மீன் ஒட்டுண்ணிகள் ஆகும். எ.கா: கோயிசியா. கள் வரிசை: ஸ்ட்ராங்கைலாய்டியா. உதடுகள், குமிழ்ப்பு இல்லை. முதுகெலும்பிகளில் ஒட்டுண்ணி களாக வாழ்கின்றன. குடும்பம்: ஸ்ட்ராங்கைலிடே. இவை குதிரை ஒட் டுண்ணிகள் ஆகும். எ.கா: ஸ்ட்ராங்கைலஸ். குடும்பம்: சிங்கேமிடே. பறவைகள், பாலூட்டி ஒட்டுண்ணிகளாக வாழ்கின்றன.எ.கா: களில் சிங்கேமஸ். உள்ளன. குடும்பம்: அன்கைலோஸ்டோமிடே. இவை கொக் கிப் புழுக்கள் என அழைக்கப்படுகின்றன. பெரிய வாய்க்குழியும் பற்களற்ற தாடைகளும் மனிதன் குடலில் ஒட்டுண்ணியாகவும் (ஆன்கை லோஸ்டோமாடியுடினேல்). ஆடு (கைகெரியா பாச்சிஸ் கெலிஸ் ), நாய், ஓநாய், நரி ஆகியவற்றிலும் (ஸ்டீனோ செஃபாலஸ்) கால்நடைகளிலும் (பியூ னோஸ்டோமம்) ஒட்டுண்ணிகளாகவும் வாழ்கின் றன. குடும்பம்: டையஃபானோசெஃபாலிடே. இவற்றின் வாய்க்குழி இரு பிளவாகப் பிரிந்துள்ளது. பாலூட்டி களில் ஒட்டுண்ணியாக வாழ்கின்றன. எ. கா: நெமெட்டோடைரஸ். குடும்பம்: ஹெலிக்மோசோமிடே. இவை கொறிக் கும் பாலூட்டிகளிலும் பைப்பாலூட்டிகளிலும் ஒட்டுண்ணிகள் ஆகும். எ.கா: நிப்போஸ்ட்ராங் கைவஸ். குடும்பம்: மெட்டாஸ்ட்ராங்கைவிடே. இவை குளம் புடையவற்றில் ஊனுண்ணிகளின் ஒட்டுண்ணிகள் ஆகும். ஒரு சில குரங்கு, மனிதக் குரங்குகளிலும் ஒட்டுண்ணிகளாக வாழ்கின்றன. எ.கா. புரோட் டோஸ்ட்ராங்கைலஸ். குடும்பம்: சூடோலிடே. இவை டால்ஃபின், பார் பாய்ஸ், திமிங்கிலம் முதலிய கடல்வாழ் பாலூட்டி களில் ஒட்டுண்ணிகள் ஆகும். எ.கா: (pseudalius), ஸ்டென்யூரஸ். சூடாலியஸ் வரிசை: ஸ்பைரூராய்டியா. வாயின் இரு பக்கங் களிலும் உதடுகள் உள்ளன. ஒரு சில புழுக்களில் ஆறு உதடுகள் வரை உள்ளன. தொண்டையில் குமிழ்ப்புகளில்லை. கண் குடும்பம்: தெலாசிடே. பாலூட்டிகளின் களிலும், கண்ணீர்ச் சுரப்பி நாளங்களிலும், பறவை களின் நிக்டிடேடிங் படலத்திலும் ஒட்டுண்ணிகளாக வாழ்கின்றன. எ.கா: தெலாசியா, ஆக்சிஸ்பைரூரா. குடும்பம்: ஸ்பைரூரிடே. இவை ஊனுண்ணி, கொறிக்கும் பாலூட்டி ஆகியவற்றின் இரைப்பை யில் ஒட்டுண்ணிகளாக வாழ்கின்றன. எ.கா: ஸ்பைரூரா. குடும்பம்: அக்குயேரிடே. பறவைகளின் இரைப் பையில் ஒட்டுண்ணிகளாக வாழ்கின்றன. எ.கா: அக்குயேரியா. குடும்பம்: ஹிஸ்டியோசெஃபாலிடே. இவை கோழி, கிளி, காக்கை முதலியவற்றில் ஒட்டுண்ணிகளாக வாழ்கின்றன. எ.கா : ஹிஸ்டியோ செஃபாலஸ். L குடும்பம்: நேதொஸ்டோமிடே. நீர்ப்பாம்பு, ஓணான் ஆகியவற்றின் இரைப்பையில் ஒட்டுண்ணிகளாக வாழ்கின்றன. எ.கா: டாங்குவா, நோதோஸ்டோம். குடும்பம்: ஃபைசலாப்டெரிடே. பாம்பு, ஓணான், முதலை, பறவை, பாலூட்டிகளில் ஒட்டுண்ணியாக வாழ்கின்றன. எ.கா: ஃபைசலாப்டிரா. குடும்பம்: கேமல்லானிடே. இவற்றிற்கு உதடுகள் இல்லை. வாய்க்குழி நத்தை ஓடு வடிவமுடைய இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கணுக்காலி கோபிபோடுகளில் ஒட்டுண்ணியாக வாழ்கின்றன. எ . கா : கேமல்லானல். குடும்பம்: குகுல்லானிடே. இவை மீன்களில் ஓட் டுண்ணியாக உள்ளன. எ.கா: குகுல்லானஸ். வரிசை: டிராகன் குலாய்டியா. நரம்புச் சிவந்தி நோய்க்குக் காரணமான டிராகன்குலஸ் மெடினென் சிஸ் ஒட்டுண்ணிப்புழு இதில் அடங்கும். நூல் போன்ற வடிவமைப்பும், உதடு, வாய்க் குழியற்றும், நீண்டும் உள்ள இப்புழுக்கள் முதுகெலும்புகளின் இணைப்புத் திசுக்கள், உடற்குழிப் படலங்கள் முதலிய பகுதிகளில் ஒட்டுண்ணிகளாக வாழ்கின்றன. டிராகன்குலஸ் மெடினென்சிஸ், காண்க, எ.கா: நரம்புச் சிலந்தி. வரிசை: ஃபைலேரியாய்டே. இவை உதடுகளும் வாய்க்குழியும் அற்று நூல்போன்ற வடிவம் உடையன. முதுகெலும்புகளின் இரத்த நாளங்களி லும், இணைப்புத் திசுக்களிலும் ஒட்டுண்ணியாக வாழ்கின்றன. குடும்பம்: ஃபைலேரிடே. இவை உயர்நிலைப் பாலூட்டிகளில் ஒட்டுண்ணிகளாக உள்ளன. எ.கா: