பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/669

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக வனநாள்‌ 649

ஆண்டுகளுக்கு ஒருமுறை அறிவியல் கருத்தரங்குகள் நடத்துவதும், அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடலும், தொகுப்பு அடிப்படையில் அறிவியல் செய்திகளை வெளியிடுவதும் இந்நிறுவனத்தின் தலையாய நோக்கமாகும். பொதுத் தேர்வு அடிப் படைமுறையில் இவ்வொன்றியத்தின் அலுவலர்கள், அலுவலர்கள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு துணை அலுவலர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்கள் பொதுச் செயலர்களாகத் தற்போது பணியாற்றி வரு கின்றனர். முறை இவ்வொன்றியம் அடிக்கடிச் சிறப்புக் கூட்டங் களுக்கும் மனிதச் சுற்றுப்புறச் சூழ்நிலையைத் தெளி வாக விளக்கும் பலவகை அனைத்துலகப் பணி ஆய் வுக்கும் பொருளுதவி செய்கிறது. குறிப்பாக அனைத் துலகத் துருவ ஆண்டு (1932-1933), அனைத்துலக நிலப்புற ஆய்வு, உலகக் காந்தவியல் அளக்கை, அனைத்துலக நிலப்புற மேல்ஒட்டுப் பணி ஆய்வு ஆகியவற்றிற்குத் தொடர்ந்து பொருளுதவி செய் கிறது. அனைத்துலக அறிவியல் குழு ஒன்றியக் கூட்டு ஒத்துழைப்பால் இந்நிறுவனம் பல பணி ஆய்வுக்கு வேண்டிய உதவிகளைச்செய்கிறது. மேலும் நிலநடுக்க வியல், எரிமலையியல், நீரியல் துறைகளுடன் மனித முன்னேற்றத் துறையிலும் யுனெஸ்கோ நிறுவனத் திற்குத் தேவையான அறிவுரை கூறுகிறது. இடைக் கால அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிறுவன மாகவும், உலக வானிலையியல் கூட்டமைப்பு களுடன் அனைத்துலக வானிலையியல் அறிவியலில் முன்னோடியாகவும் இது விளங்குகிறது. உலக வனநாள் சு.சந்திரசேகர் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதம் இருபத்தோராம் நாள் உலக வனநாள் கொண்டாடப்படுகிறது. மரம் நடு விழாவான இந்நாள், உலக உணவு வேளாண்மை அனைத்து நிறுவனத்தின் வேண்டுதலின் பேரில் உறுப்பு நாடுகளாலும் மரம் நடுதல்,வன அழிவைத் தடுத்தல்,பொதுமக்களுக்கு மரங்களின் பயன்களை எடுத்துரைத்தல் போன்ற கோட்பாடுகளை வலி யுறுத்துவதற்காகக் கடைப்பிடிக்கப்படுகிறது. 1952 ஆம் ஆண்டு முதலே மரம் நடுவிழா இந்தி யாவில் கொண்டாடப்பட்ட போதும், அண்மைக் காலத்தில்தான் உலக வனநாள் கொண்டாடும் முறை தொடங்கியது. இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு தம்பதிக்கு ஒரு மரம், ஒரு வீட்டுக்கு ஒரு மரம், ஒரு குழந்தைக்கு ஒரு மரம் என்பதைச் செயலாக்க வேண்டிய தொடக்க நாளாகும் இது. இந்நாளில் வனத்துறையினர் தொழிற்சாலைகள், தொழிற் உலக வனநாள் 649 சங்கங்கள், கல்வி நிறுவனங்கள், பஞ்சாயத்துகள், சமூக நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் ஆகிய அனைத்தும் மரம் நடுவதன் பயன்களைப் பற்றிப் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கவும், தாங்களே எடுத்துக்காட்டாகச் செயல்படவும் வேண்டப்படு கின்றன. நடப்பட்ட மரங்களைக் காப்பதும் வனத் துறையினரின் சேவைகளைப் இலவச பொது மக்களுக்குப் பறைசாற்றுவதும் வழக்கமாகும். மரம் நடுதல் வன் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை உலக நாளன்று சென்ணையில் ஆளுநர், தம் மாளிகைத்தோட் டத்தில் மரக்கன்று நடுவார். மாவட்டந் தோறும் மாவட்ட வன அலுவலர்கள் மரம் நடுவர். அகில நாளேடு இந்திய வானொலி, தொலைக்காட்சி, போன்ற பொது மக்கள் தொடர்புக் கருவிகள் மூலம் உலக வன நாளின் இன்றியமையாமை விளக்கப்படும். சொற்பொழிவு. திரைப்படம், செய்முறை விளக் கம் போன்றவை மாநில முழுதும் இடம் பெறும். வனங்களுக்கும் பூங்காக்களுக்கும் சரணாலயங்களுக் கும் பொது மக்களை அழைத்துச் செல்வதும், விருப்ப முள்ள மாணவர்கள், சாரணர், தொண்டர்களைக் கல்லூரி, பள்ளி வளாகங்களிலிருந்து வனங்களுக்கு வனத்துறையினர் அழைத்துச் செல்வதும் சிறப்பு நிகழ்ச்சிகளாகும். மார்ச் 21 ஆம் நாளுக்குப் பின்னர் பொதுநல நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகிய அனைத் தும் வனத்துறை உதவியுடன் மரம் நடும் நிகழ்ச்சி களைத் தொடர்ந்து செயலாற்றும். இதற்கு ஒரு வரலாற்றுப் புவியியல் பின்னணி உண்டு. மார்ச் 21 ஆம் நாள் வசந்த காலச் சம இரவு நாள் (vernal equinox). ஆண்டில் இரண்டே நாளில் தான் உலகம் முழுதும் இரவும் பகலும் சரியாகப் பன்னிரண்டு மணி நேரம் பெற்றிருக்கும். மற்ற நாள் செப்டம்பர் 21 ஆகும். இது இலையுதிர்