பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/673

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலர்புல்‌ 653

உலர்புல் 653 ட்ரைஃபோலியம் அலெக்சாண்ட்ரியம். இது ஃபே பேசி என்ற குடும்பத்தைச் சேர்ந்ததாகும். வட இந்தியப் புல்வெளிகளில் காணப்படும் இது, சிறந்த பசுந்தீவனமாவதுடன் உலர்புல் தயாரிக்கவும் பயன் படுத்தப்படுகிறது. மெடிகாகோ சடைவா. இது அல்ஃபால்ஃபா என்றும் குறிப்பிடப்படுகிறது. இது ஃபேபேசி குடும்பத்தைச் சேர்ந்ததாகும். பல்பருவச் செடியாகிய இதை ஐரோப்பா மற்றும் ஆசிய மிதவெப்பப் பகுதி களில் காணலாம். மேய்ச்சலுக்கும், பசுந்தீவனத் திற்கும் மற்றும் உலர்புல்லுக்கும் இதைப் பயிர் செய்வதுண்டு. குளோரோஃபில் எனப்படும் பச்சை யம் தயாரிக்கவும் இது பயன்படுத்தப்படும். நிலக்கடலை உலர்புல். பிரேசிலைத் தாயகமாகக் கொண்ட நிலக்கடலையின் தாவரவியல் பெயர் அரேகிஸ் ஹைபோஜியா. இது ஃபேபேசி குடும்பத் தைச் சேர்ந்தது. இப்பயிர் முக்கியமாக கடலை விதைகளுக்காகப் பயிர் செய்யப்படுகிறது. இதன் தழைப்பகுதியைத் தீவனமாகப் பயன்படுத்தலாம். மானாவாரியாகப் பயிர் செய்யப்படும் ஓர் ஏக்கர் நிலத்திலிருந்து சுமார் ஒரு டன் தழைகளைப் பெற லாம். இறவை மூலம் 1டன் கிடைக்கும் இதன் பச்சைக் குச்சிகளையும், இலைகளையும் கொண்டு உலர்புல் தயாரிப்பர். காராமணி அல்லது தட்டைப்பயறு உலர்புல். இதன் தாவரவியல் பெயர் விக்னா அங்குகுலேடா. இது ஃபேபேசி குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் தழைப் பகுதியில் ஊட்டச்சத்து அதிகம் இருப்பதால் இதையும் உலர்புல் தயாரிப்பில் சேர்ப்பதுண்டு. கரும்பு இலைப்பகுதி, இதுவும் உலர்புல் தயாரிப் பில் சேர்க்கப்படும். இதில் இதில் புரோட்டீன் சத்து இல்லாமை ஒரு பெரிய குறைபாடாகும். உலர்புல் தயாரிப்பு. புற்களையோ பயிரையோ கதிர் அல்லது மணிபிடிக்கத் தொடங்கும் நிலையில் அறுத்துச் சில நாள்கள் உலர்த்திப் போர் போடவேண்டும். ஈரமிருந்தால் நொதித்தல் ஏற்பட் டும், பூஞ்சைகள் தாக்கியும் ஊட்டச்சத்தைக் குறைத்து விடும். உலர்த்திப் போர் போடுவதில் ஊட்டச்சத்துக் குறைவதில்லை. நன்றாகத் தயாரிக்கப்பட்ட உலர் புல்லில் அசெட்டிக் அமிலமும் லாக்ட்டிக் அமிலமும் இருத்தல் வேண்டும். அதற்குத் தக்கவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் பயன்படுத்தும் வைக்கோல், அயல் நாடுகளில் பயன்படுத்தும் உலர்புல் இவற்றின் ஊட்டச்சத்தை அட்டவணை மூலம் அறியலாம். அட்டவணையின் ஊட்டச்சத்து விகிதப் பகுதி யைப் பார்க்கும் போது உலர்புல்லில் குறைவாகவும் வைக்கோலில் அதிகமாகவும் காணப்படும். ஆனால் விகிதம் குறைவாக இருந்தால்தான் ஊட்டச்சத்து அதிகம் என்று கொள்ளவேண்டும். அதாவது புரோட்டீன் அளவும் கார்போஹைட்ரேட் அளவும் குறிப்பிட்ட விகிதத்தில் இருக்கவேண்டும். வைக் 100 கிலோ உலர் பொருளிலுள்ள செரிக்கக் கூடிய பொருள்களின் அளவு ஊட்ட விகிதம் பயிர்கள் புரோட்டீன் கார்போ ஹைட்ரேட் மொத்தம் புரோட்டீன் கார்போ ஹைட்ரேட் உலர் புல் கரும்பு இலை 45.50 46.30 ட்ரைஃபோலியம் 10.29 54.44 65.79 5.4 தட்டைப்பயறு 10.33 40.13 50.46 3.9 நிலக்கடலை 14.93 34.00 48.90 2.3 அறுகம்புல் 3.68 38.98 43.04 10.7 மெடிகாகோ 16.37 38.59 59.9 2.4 வைக்கோல் கேழ்வரகுத் தாள் 0.23 54.55 55.63 243.5 நெல் தாள் 0.28 42.85 44.13 154.4 கோதுமைத் தாள் 0.18 55.20 49.69 330.6